Friday, December 27, 2013

சூனிய இராத்திரிகள் - இலங்கையில் முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்?


 இலங்கை முஸ்லிம்கள் மீதான பேரினவாத செயற்பாடுகள் கூர்ப்படைந்து வருகின்றன. பௌத்த இனவாத சக்திகளின் செயற்பாடுகளிற்கு பின்னால் இன்னொரு சக்தி செயற்படுவது உணரக்கூடிய ஒன்றாக உள்ளது. முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணற்ர்ச்சியை வெகுவாக அவர்கள் விதைத்து வருகின்றனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர் இனவாதிகள். ஆனால் முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் அவதானமாக நோக்க தவறுகிறார்கள். இனவாதம் என்பதனை ஒரு எல்லைக்குள் வைத்தே பார்க்க விரும்புகின்றனர். ஆனால் அதுவோ முஸ்லிம்களின் அடையாளங்களை இல்லாதொழித்து பொளத்த கலாச்சாரத்துடன் கூடிய இனக்கூறாக முஸ்லிம்களை மாற்றும் வரை ஓய்வதில்லை என சபதமெடுத்து செயற்பட்டு வருகின்றது. 



     சடவாத சகதியில் உலழும் முஸ்லிம் சமூகம் கலக்ஷி கனவுகளுடனும், அப்பிள் ஆசைகளுடனும் பயணிக்கின்றது. இழப்புக்கள் இல்லாத வெற்றிகள் பற்றியும், இழப்புக்கள் இல்லாத பாதுகாப்பு பற்றியும் மட்டுமே அதிக பட்சம் யோசிக்கின்றது. எந்த ஆதாரமும் இல்லாமல் பேஸ்-புக்கில் வெளியாகும் பதிவுகளை மட்டும் நம்பி விட்டில் பூச்சிகளாய் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் அளவிற்கு அதன் சிந்தனைத்திறன் சரிந்து போயுள்ளது. எவரோ ஒருவர் பப்ளிஷ் செய்த டிவீட்களையம், மெயில்களையும் வைத்துக்கொண்டு சமூக நிலை பற்றிய முடிவுகளிற்கு மாறி மாறி வருகிறது. லக்ஸேரியஸ் லைப், கொன்போர்ட் லைப் எனும் இலக்குகளை தவிர இவர்கள் வேறெதையும் சிந்திக்க தயாராக இல்லை.  

 தவ்ஹீத்வாதிகள் தங்களிற்குள் “சூனியம்” பற்றிய வாதபிரதிவாதங்களால் பிளவுபட்டு ஒரு அணியை மற்றைய அணி கேவலப்படுத்தும் நிலைக்கும், வெறுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். “சூனியம் உண்டா இல்லையா” என்பதை விவாதிக்க இந்தியாவில் விவாத ஒப்பந்தம் செய்து விட்டு வந்திருக்கிறார்கள் இவ்வணியினர். அதே சமயத்தில் தான் முஸ்லிம்களிற்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகள் மியன்மார் சென்று ரோஹீங்கிய முஸ்லிம்கள் மீதான கலவரங்கள் தொடர்பான கேஸ் ஸ்டடியை முடித்து விட்டு வந்திருக்கிறார்கள். 

 முஸ்லிம்களை பேரினவாத சக்திகள் காழ்ப்புணற்ச்சியுடன் வெறுத்தொதுக்கும் களநிலவரம் புரிந்த அளவிற்கு, எம்மை தங்கள் சித்தாந்தத்தில் இல்லை என்பதனால் வெறுப்புடன் “சோனக கூட்டமாக” பார்க்கும் இன்னொரு அணி பற்றி நாம் அவதானிப்பதில்லை. முஸ்லிம்களை வெறுக்கும் ஷியாக்களைப் போல இவர்களும் தங்கள கருத்தில் இல்லாத முஸ்லிம்களை துவேஷிக்கிறார்கள். மஸ்ஜித்களை பிரித்து முஸ்லிம்களிற்கு வழிகேடர்கள் பட்டம் வழங்குவதையே இவர்கள் தஃவாஃ என நினைக்கிறார்கள்.

 குப்ரிய ஜனநாயக அரசில், இஸ்லாமிக் பொலிட்டிக்ஸ் செய்ய நினைக்கும் பிரபல இஸ்லாமிய இயக்கங்களின் பாமரத்தனத்தை என்னவென்பது. பல சிந்தனையாளர்களை எடுகோளாக கொண்டு பேசும் எழுதும் இந்த அமைப்புக்கள் இளைய சமுதாயத்தை தாகூத்திய வழிபாட்டிற்கு பழக்கப்படுத்துவதையே இஸ்லாமிய இலட்சியம் என்கின்றன. 

 இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி எதனை சாதிக்க துடிக்கின்றானோ, அதனை அதற்கு முன்பாகவே செய்து காட்டி குஃபாரை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளையே இன்று சமூக தலைமைகளும், அரசியல் தலைமைகளும், இஸ்லாமிய இயக்க தலைமைகளும் செய்து கொண்டிருக்கின்றன. இஸ்லாத்திற்கு இன்ஜீலும் தவ்ராத்தும் சகோதர மதமாகளாம். இவர்கள் சிலை வணங்கிகளின் மதத்தை பார்த்து “சகோதர மதத்தவர்கள்” என்று மேடைகளில் பேசுகின்றனர். எழுதுகின்றனர். இவர்கள் யாரை ஏமாற்ற இதனை செய்கின்றனர். 

   ஸஹ்ரானி நிதி, அஞ்சரி நிதி, பந்தர் பின் சுல்தான் நிதி என இந்நாட்டிற்கு வரும் பணத்திற்காக இந்நாட்டிற்கு தேவையைான சுய தஃவாவை வீசி விட்டு அராபிய எஜமானர்களின் எச்சிலிற்கு வாலாட்டும் நாய்களாக இவர்கள் குரைக்கிறார்கள். முறைக்கிறார்கள். சில வேளைகளில் கடிக்கவும் தயாராகிறார்கள். 

   இன்றைய உண்மை நிலையை சாதாரண அடிப்படை முஸ்லிமிற்கு இவர்கள் ஒரு போதும் தெரியப்படுத்துவதில்லை. எம்மீதான இனவாத செயற்பாடுகள் என்பது குஃப்ரிற்கும் இலாஹியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஆரம்பங்கள் மட்டுமே. இஸ்லாம் இயம்பும் எக இறைவனிற்கு மட்டுமே வழிப்படும் பன்மைக்கு மாறாக ஜனநாயகத்திற்கு வழிப்படும் சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுகிறார்கள். இதனால் அழியப்போவதும் முஸ்லிம்களே. 

    இஸ்லாத்தின் அரசியல் கொள்கை என்ன என்று ஒரு முஸ்லிமை கேட்டால் அவனிடம் தெளிவான பதில்கள் வெளிவராது. குழப்பகரமான சிந்தனைகளே வெளிப்படும். இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை ஒரு முஸ்லிம் புரிந்தால் தான், தெரிந்தால் தான் அவனால் நான் என்ன செய்ய வேண்டும், எந்த நிலையை எடுக்க வேண்டும் எனும் தெளிவான முடிவுகளிற்கு வரமுடியும். ஆனால் இன்றைய முல்லாக்கள் இஸ்லாத்தின் அரசியல் கொள்கை என்பதை சாந்தி என்றும், பொருமை என்றும், சகிப்புத்தன்மை என்றும் எதைஎதையெல்லாமோ சொல்லி சமூகத்தை மீள முடியாத பாதளத்தை நோக்கி தள்ளி வருகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. 

No comments:

Post a Comment