Sunday, December 8, 2013

யெமனில் அமெரிக்க “ட்ரோன் கொன்ரோல் சென்டர்” தகர்க்கப்பட்டது!





   யெமனின் பாதுகாப்பு செயலக கட்டடம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. மீட்பு பணியாளர்களும், மருத்துவ உதவி குழுவினரும், பரா இராணுவத்தினரும் வந்து சேர்ந்த போது 52 இரண்டு பேர் இறந்து போயிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டிருந்தனர். யெமனிய அரசு அதனை பயங்கரவாதிகளின் நாசகார செயல் என அறிவித்த அதே வேளை அல்-காயிதாவின் யெமனிய பிரிவான அன்சார் அல்-ஸரீஆஃ (Al Qaeda in the Arabian Peninsula (AQAP))அந்த தாக்குதலை தாமே நடாத்தியதாகவும், அது ஒரு துணிகரமிக்கதும் வெற்றிகரமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர். 

   ட்ரோன். அமெரிக்காவின் கொலை கருவி. எதிரியின் இலக்கை துல்லியமாக அனுகி ஏவுகணை தாக்குதல் நடாத்தும் வெற்றிகரமான செயன்முறை இந்த ட்ரோன் தாக்குதல். பாகிஸ்தானின் வசிரிஸ்தானும், யெமனின் அபியானும் அமெரிக்க ட்ரோன்களிற்கு மாமியார் வீடு மாதிரி. நினைத்த இராத்திரியிலும் சென்று வரும். இந்த ஆளிள்லா ட்ரோன் விமானங்களை இயக்கும் ரிமோட் கொன்ரோல் மற்றும் ஒப்சர்வேசன் ரூமும் இதே யெமனிய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்தினுள்ளேயே அமையப்பெற்றிருந்தது. அன்சார் அல்-ஸரீஆஃ போராளிகளின் முதன்மை இலக்கு யெமனிய பாதுகாப்பமைச்சகம் கிடையாது. மாறாக ட்ரோன் கட்டளை மையமாகவே இருந்தது. 

   அன்சார் அல்-ஸரீஆஃ அமைப்பினர் விடுத்த தகவலில் “தங்களது போராளிகள் 25 பேர் மேற்படி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதில் 11 போராளிகள் களப்பலியானதாகவும், ஏனைய 14 போராளிகளும் பாதுகாப்பாக தங்களது கட்டளை மையத்திற்கு திருப்பி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், இந்த தாக்குதல் தங்களது போராட்ட வரலாற்றில் ஒரு மைற்கல் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 


       அதிகரித்த மனித வெடிகுண்டு தாக்குதல்கள் காரணமாக யெமனிய அரசு மிக அண்மையிலேயே “மோட்டார் சைக்கிள்களிற்கு” உயர் பாதுகாப்பு வலையத்தினுள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்களை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என யெமனிய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
        
                          

No comments:

Post a Comment