Monday, December 30, 2013

சவுதி அரேபியாவின் இருட்டு நிலவறைகளை நோக்கி ஷேய்ஹ் Sulayman Ibn Nasir Ibn ‘Abd-Allah Al-’Ulwan.....






      அல்-கஸீம். சவுதி அரேபியாவில் இஸ்லாம் உயிர்வாழும் இடங்களில் ஒன்று. முத்தவ்வாக்களின் பண்ணை என்றும் இதனை சொல்வார்கள். அதன் தலை நகர் புரைதா இஸ்லாமிய உலகிற்கு பல அறிஞர்களை தந்துள்ளது. அந்த வரிசையில் இந்த மண்ணில் உருவானவரே ஷேய்ஹ் Sulayman Ibn Nasir Ibn ‘Abd-Allah Al-’Ulwan ஆவார். ஸலபி அறிஞர்கள் மத்தியில் இவரிற்கு தனியிடம் உண்டு. கிதாபுகளை (புத்தகங்களை) மனனமிடும் வல்லமை பெற்றவர் இவர். இமாம் “இப்னு தைமிய்யா”, இமாம் “இப்னு கய்யீம்”, இமாம் “இப்னு கதீர்” போன்ற இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் மார்க்க அறிஞர்களின் கிதாபுகளை மேற்கோள் காட்டி கல்வி கற்பிப்பதில் இவரிற்கு நிகர் இதுவரை யாரும் இல்லை. வாழ்வின் பல வருடங்களை இஸ்லாமிய நூல்களை கற்பதிலும் கற்பிப்பதிலும் கழித்தவர். இஸ்லாமிய ஷரீஆஃ (சட்டம்) துறையில் ஒப்பில்லா அறிவு பெற்றவர் ஷேய்ஹ் சுலைமான் அவர்கள். 



       சவுதி அரசு இவரின் மேல் பயங்கரவாத கருத்துக்களை பரப்பியமை, தீவிரவாத செயற்பாடுகளை ஊக்குவித்தைமை தொடர்பாக இவரு எழுத்துக்கள் பேச்சுக்களை தடை செய்துள்ளது. அவரிற்கு 15 வருட சிறைத்தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது. இது வழங்கப்பட்டது ஒக்டோபர் 2013-ல். இது போதாதென்று இன்னொரு நீதிபதி 10 வருட சிறைத்தண்டனையை மேலும் வழங்கியுள்ளார். ஸலபி அறிஞர்களின் தலையீட்டினால் இவரது முன்னைய 15 வருடகால சிறைத்தண்டனை என்பது புரபேஷன் பீரியட் இம்பிரிஸ்மென்ட் எனுமடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டிருந்த போது இப்போது அவர் மீண்டும் கைதாகியுள்ளார். சிரியாவில் சண்டையிடும் போராளிகளையும் அவர்களது போராட்டத்திற்கும் அங்கீகாரம் வழங்கியமையும் அவர்களது செயற்பாடுகளிற்கு வழிகாட்டுதல்களை வழங்கியமையுமே இவர் மேல் சவுதி மன்னராட்சி கோபம் கொண்டமைக்கான காரணமாகும். 

     இதற்கு சில தினங்களிற்கு முன்னர் தான் சவுதி அரேபியாவின் அரண்மனை முஃப்தி, “சிரியாவில் போராடி மரணிப்பவர்களிற்கு சொர்க்கம் கிடைக்க வாய்ப்பில்லை” என்று அபிப்பிராயம் வெளியிட்டிருந்தார். பஸர் அல் அஸாதின் அரசை வீழத்த அமெரிக்காவும், இஸ்ரேலும், கட்டாரும், சவுதி அரேபியாவும் சதி செய்த போது அவர்களால் இராணுவமயப்படுத்தப்பட்டவர்கள் “முஜாஹித்கள்” என 
போற்றப்பட்டார்கள். அவர்களிற்கு அதிநவீன ஆயுதங்கள் தாராளமாக வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் இலக்கை மாற்றி “இஸ்லாமிய கிலாபா” பற்றியும் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டும் “இகாமத்தே தீன்” பற்றியும் பேசிய போது, அதனை உருவாக்க எத்தனித்த போது அவர்கள் “பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களின் வேகமான வளற்ச்சியும், உலகலாவிய முஸ்லிம் போராளிகள் அஷ்-ஷாமை (சிரியாவை) இஸ்லாமிய ஆட்சியின் தலைமைப்பீடம் என குறிப்பிட்டதும், அதை தொடர்ந்து முஸ்லிம் தேசங்கள் நோக்கி தங்கள் பாதங்கள் நடக்க ஆரம்பிக்கும் என முழங்கியதும் முஸ்லிம் தேசங்களின் ஆட்சியாளர்களை கிலி கொல்ல வைத்துள்ளது. இது நாம் சமகாலத்தில் பார்க்கும் அரசியல் காட்சிகள். 

       உலகளாவிய ஜிஹாதை ஆகர்ஷிக்கம் ஒருவராகவே இவரை பல நாடுகளின் உளவமைப்புக்கள் இனங்கண்டுள்ளன. அமெரிக்க சஞ்சிகைகள் இவரை கொடிய பயங்கரவாதத்தின் தந்தை என்று வர்ணித்துள்ளன. நியூயோர்கள் இரட்டை கோபுர தாக்குதலில் பங்கேற்ற Abdulaziz al-Omari ஷேய்ஹ் சுலைமானின் மாணவர் என்று அமெரிக்க உளவு குறிப்புக்கள் சொல்கின்றன. இவர் இமாமாக கடமையாற்றும் அல்-கஸீம் மஸ்ஜித்தினை “terrorist factory” என்று வேறு வர்ணிக்கின்றன அமெரிக்க பத்திரிகைகள். சவுதி அரேபிய மன்னரின் அரண்மனைக்கு சென்று அவர்களின் ஆட்சியை கண்டிக்கும் அவரது துணிச்சலின் பின்னரே இவரது கைது தொடர்பாக சவுதி அரசு தீர்மானித்தது. 

     வரலாற்று அரச கதைகளில் நிலவறை சிறைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த நிலவறை சிறைகளை நிர்மாணித்து அதில் கைதிகளை அடைக்கும் பாரம்பரியம் சில முஸ்லிம் நாடுகளில் இன்னும் இருக்கிறது. அதில் சவுதி அரேபியா, லிபியா, ஈரான் போன்றவை முக்கியமான தேசங்கள். எந்த நிமிடத்திலும் சவுதியின் நிலவறைகளின் இருட்டில் தன் இறுதிக்காலங்களை கழிக்கும் வரலாற்றின் நிமிடங்களில் நிற்கிறார் ஷேய்ஹ் Sulayman Ibn Nasir Ibn ‘Abd-Allah Al-’Ulwan. 

     2012-ல் அல்-காயிதாவின் மத்தியகிழக்கிற்கான (AQAP) பிரிவு சவுதி அரேபிய அரசிற்கு ஒரு காலக்கெடுவை வழங்கியிருந்தது. அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அறிஞர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இல்லையேல் சவுதி அரேபியாவில் குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என அது எச்சரித்திருந்தத. இதன் பின்னர் சிறையில் இருந்த பெண்கள் பலர் விடுதலையாகினர். இவரது மகன் ஷேய்ஹ் மலிக் இது பற்றி குறிப்பிடுகையில் “இன்று பலரது நாவுகளில் இருந்தே “ஜிஹாத்” புறப்படுகிறது. ஆனால் அவை துப்பாக்கி ரவைகளில் இருந்து புறப்பட வேண்டும்” ஒரு குறிப்பினை வெளியிட்டுள்ளார். தனது தந்தையும் அதனையே விரும்பியதாகவும். அதனால் அவர் அநியாயமாக சிறை கதவுகளின் பின்னால் அடைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



No comments:

Post a Comment