Wednesday, May 22, 2013

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 3)



 வறிய நாடுகளுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு எங்கிருந்து வந்தாலும் வெளியில் சற்று அடம் பிடிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அதை ஏற்றுக்கொள்ளும் . காரணம் வளங்களின் பயன்பாடு பிரயோகம் தொடர்பில் தொழில் நுட்ப பற்றாக்குறையும் ,பொருளாதாரப் பற்றாக்குறையும் இத்தகு மனப்பாங்கை நோக்கியே இட்டுச் செல்லும் என்பது பொதுவான உண்மை .

இந்த வறுமையை பயன்படுத்தும் வல்லரசுகளின் காய் நகர்த்தல்கள் ,இவர்களது பசிக்கு பழஞ்சோறு காட்டிவிட்டு பக்குவமாக 'கிட்னியை ' பிடுங்கும் அரசியலையே இத்தகு நாடுகளில் செய்தார்கள் ,செய்கிறார்கள் ,செய்வார்கள். இந்த நவ காலனித்துவ டிப்லோமடிக் அரசியல், இராணுவ ,பொருளாதார உதவி எனும் பசுந் தோலுடன் இவ்வாறுதான் தான் உள்வரும் .

ACSA ,SOFA , மற்றும் இது போல நடக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இருபக்க நலன் போல் தெரிந்தாலும் வலுச் சமநிலை குறைந்த நாடுகளை பொறுத்த வரை ஒரு அடியால் தரமான அரசியலையே பேசவைக்கும் . இதில் மாலைத் தீவும் , இலங்கையும் விதிவிலக்கல்ல . இதற்கு நடுவில் எத்தகு அடம்பிடிப்பும் பக்குவமாக அடக்கப் படும் .குறித்த நாட்டின் இறைமை என்பதும்  ,சுதந்திரம் என்பதும்  ஒரு போலிப் பேச்சாகவே இருக்கும் .

மாலைத்தீவுக்கும், அமெரிக்காவுக்குமான SOFA ஒப்பந்தம் இலங்கையின் மீதான சீன மேலாதிக்கத்திற்கு சவாலாக அமையும் எனும் கருத்தை ஒரு ஒப்புக்காக ஏற்றுக் கொண்டாலும் உலக மயமாக்கல் எனும் முதலாளித்துவ இலாப அறுவடைச் சதியில் சீன முகங்களோ ,அல்லது 'சீபா' ஒப்பந்த கனவுகளோடு காத்திருக்கும் இந்திய முகங்களோ வேறுபட்ட 'சித்தாந்த ' மாற்றங்களை கொண்டதல்ல . அதாவது இப்போது ஆதிக்கத்துக்காக நடப்பது பனிப்போர் அல்ல பங்கு பிரிக்கும் போரே ஆகும் . இதில் இராணுவத்தின் பங்கு சுவையான 'வீடியோ கேம்தான் '. 









No comments:

Post a Comment