Wednesday, May 22, 2013

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .



'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை ,இந்திய அரசுகளோடு நெருக்கமானவருமான முகமட் நசீட் அண்மையில் தெரிவித்துள்ளார் .


தற்போது ஊழல் குற்றச் சாட்டின் பேரில் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் இவர் நடப்பு சூழ்நிலையில் ஒரு அரசியல் சண்டையை மூட்டி விடுவதன் மூலம் தனது விடயத்தில் ஒரு தளர்வு நிலை வேண்டிய இராஜ தந்திர யுத்தத்தையே செய்வதாக புரிந்தாலும் இவரது  கூற்றுக்கு ஆதாரமாக குறித்த உடன்பாடு தொடர்பான பிரதி ஒன்று வெளியாகியிருப்பது விடயத்தை அவ்வளவு சுலபமாக தட்டிக் கழிக்க முடியாது என்பதாகவே காட்டி நிற்கின்றது .

                குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவோ அல்லது மாலைத் தீவோ எவ்வித காத்திரமான மறுப்பையும் இதுவரை வெளியிடவில்லை .ஆனால் "தமக்கு மாலைத் தீவில் நிரந்தரத் தளம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் ,இது வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடே" என அமெரிக்கத் தரப்பில் இருவர் விளக்கம் அளித்துள்ளனர் . அதில் ஒருவர் ,இலங்கை மற்றும் மாலைத் தீவுக்கான அமெரிக்க 
தூதுவர் 'மிச்சேல் ஜே சிசன் , இரண்டாமவர் ,தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர்  ரொபர்ட் ஓ பிளக் ஆகியோராகும் .



           மேலும் அமெரிக்கா இது விடயத்தில் கருத்து தெரிவிக்கையில் "இது வழக்கமான பாதுகாப்பு உடன்பாடுதான் இதுபோல் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்து கொண்டுள்ளது ". எனக் கூறினாலும் அவை எல்லாம் இந்த SOFA ஒப்பந்த நிபந்தனைகளுக்குள் உள்ளடங்காது மாற்றமாக ACSA  எனப்படும்( Acquisition and cross servicing agreement ) என்ற இராணுவ விநியோக விடயங்கள் மற்றும் சேவைகளை பரிமாறும் ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்துவதற்கானது . 


இந்த ACSA இராணுவ தளம் அமைத்தல் ,நேரடி இராணுவ  நடவடிக்கைகள் ,என்பவற்றை உள்ளடக்காது . 2003ல்  76 நாடுகளுடன் அமெரிக்கா  இந்த ACSA  உடன்பாட்டை செய்துள்ளது .; இவற்றில் பெரும்பாலானவை NATO நாடுகளாகும் . இந்த ACSA உடன்பாட்டை மாலைத்தீவும் முகமட் நசீட் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ளார் .( இன்று முகமட் நசீட்SOFA பற்றி தன்னை சுத்தப்படுத்தி கழுவ முயன்றாலும் 'ACSA ' தொடர்பில் அதே முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டையே இவர்  என்பதை யாரும் மறுப்பதற்கில்லை .) 




சரி இந்த 'SOFA' என்பது உணர்த்துவது என்ன ? அதற்கான விடை அமெரிக்கா உட்பட வலிமையான நாடுகள் ,தமது படைகளை பிறநாடுகளில் நிலை நிறுத்த ,அந்த நாடுகளுடன் செய்து கொள்ளும் உடன்பாடுதான் இந்த SOFA .அதாவது படைகளையும் ,படைக்கலங்களையும் இன்னொரு நாட்டில் நிலைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தமே இந்த SOFA . இத்தகு ஒப்பந்தமே இன்று இரகசியமாக மாலைத் தீவுடன் அமெரிக்கா இரகசியமாக மேட்கொண்டிருக்க மாலைத் தீவின் உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பு  அதை பரகசியம் ஆக்கியுள்ளது .


சரி இனி இந்த 'SOFA ' ஒப்பந்தம் ஏன் ? என்ற வினாவும் இந்தியா ,சீனா , மாலைத்தீவு  எனும் முக்கோன அரசியலில் இதன் தாக்கம் என்ன ? என்பது பற்றியும் ,அது மட்டுமல்லாது தெற்காசிய நாடுகளின் உள்ளே நடக்கும் பக்கச் சார்பான அரசியலோடு சர்வதேச திகளின் பங்கு இப்படி பல்வேறு விடயங்களை மறுமுறை 'இன்ஷா அல்லாஹ் ' பார்ப்போம் . சம்பிக்க ரணவக்க முதல் பொது பல சேனாவரை  இந்த நடப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும்  எம்மால் மறுப்பதற்கில்லை .


                                                          (  தகவல்கள் :- வீரகேசரி மே .12 .2013)

No comments:

Post a Comment