Thursday, May 23, 2013

'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன ?                              வொசிங்க்டனில் இருந்து இயங்கிவரும் சுதந்திர செய்தி வலையமைப்பான W N D  இலங்கையிலும், பங்களாதேசிலும் அல் கைதா  அமைப்பு தொழில்பட்டு வருவதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது . 'அரண்டவனின் கண்களால் இருண்டதை பேய் ' போல பார்க்கும் பயங்கர உலகத்தை முதலாளித்துவம் பேணுவதன் ஊடாகவே, இனி ஏகாதி 
பத்திய சாம்ராஜ்யத்தை தக்கவைக்க முடியும்; என்ற வகையில் தமது ஆதிக்க அரசியலை காக்க ,  இப்படி ஒரு பூச்சாண்டி மூலம்  உத்தியோக பூர்வ மற்ற 'எமேர்ஜென்சி ஒர்டரை ' தெற்காசியாவிலும் தொடுக்க அமெரிக்கா நினைக்கின்றதா !? என்றுதான் இந்த  சம்பவத்தை கருதத் தோன்றுகிறது .     சில நிறுவல்களுக்காக சம்பவங்களை தோற்றுவித்தல் , அந்த சம்பவங்களின் ஊடாக வெறும் உணர்வு மயமான முரண்பாட்டு குழுக்களை உருவாக்குதல் ,அந்த உருவாக்கம் தனது பின்னணி பற்றி அலட்டிக் கொள்ளாத பலிக்கடா அரசியலை செய்ய ,இலாபமும் 
கொண்டாட்டமும் என்னவோ எப்போதும் ஏகாதிபத்திய முதலைகளுக்குத்தான் . எனும் விடயத்தை மனித சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் .


       'ஹிட்லரின்' வலது கை 'கோயபல்சு ' சொன்னது" இல்லாததை திரும்ப திரும்ப சொல்லும் போது அது இருப்பதாக ஆகிவிடும் " எனும் விடயத்தை 'பென்டகனும் ,CIA யும் தெளிவாகவே பின்பற்றுகின்றன ;இதில்  இருந்துதான் கொடூரமான  ஏகாதிபத்திய சர்வதிகாரம் தனது 'மீடியா ஆதிக்கத்தின் மூலமான  தெளிவான கொலைகார அரசியலை 
முழு உலகத்தின் மீதும் ,முஸ்லீம்களின் மீதும் திணிக்கின்றது .என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டு .


      வன்முறைக்கும், தற்காப்புணர்வுக்கும் இடையில் இருக்கும் சராசரி வித்தியாசத்தை கூட மனித சமூகம் புரிந்து கொள்ளவில்லை ,அது இன்று ஏகாதிபத்திய  மீடியா யுத்தம் அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இந்தப் பார்வையே முஸ்லிமை பயங்கரவாதியாக ,மிருக வதைக்காரனாக ,பெண் அடக்கு முறையாளனாக , என பல்வேறு கோணங்களில் சித்தரித்துக் காட்டியது  . இந்த கொடூரமான சித்திரத்தின் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் நாளுக்கு நாள் ,நிமிடத்துக்கு நிமிடம் முஸ்லீம் அல்லாதவனிடம் தன்னை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்திலேயே இருக்கிறான் . குறைந்த பட்சம் ஒரு தர்ம சங்கடத்தை தானும் உணர்கிறான் .


        இந்த மானசீக அழுத்தம் குப்ரை ஒரு முஸ்லிமிடம் ,படிமுறை மாற்றம் என்ற பெயரிலேயோ அல்லது வேறு வழியற்ற நிலையிலேயோ அங்கீகரிக்க சொல்கிறது . அந்நிய சமூகத்தோடு பரஸ்பர உறவு என்பதை இஸ்லாம் மறுக்கவில்லை , ஆனால் குப்ரிய சிந்தனைகளோடு பரஸ்பர உறவு ! மனோ பாவத்தை நோக்கி முஸ்லீம் தள்ளப்பட்டுள்ளான் இது தவறானது  . இந்த வகையில் ஒரு தொடர் வெற்றியை குப்ரிய மேலாதிக்கம் முழு உலகிலும் எதிர்பார்க்கிறது . ஆனால் .....


"அவன் எத்தகையவன் என்றால் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ; சகல மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காக ; இன்னும் இதற்கு சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன் "           (TMQ  அல் பத்ஹ் : வசனம் 28)
                                                            

         


                                              

No comments:

Post a Comment