Tuesday, May 28, 2013

கசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா !?


'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில் 
அலட்சியமான வெட்டுக்காயா  நான்  !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே 
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த 
நினைக்கும் குப்ரிய மேலாதிக்க அரசியல் ஒருபுறம்  !

மறு புறம் பேரின,மத வாதத்தின் கீழும் அவைகளின் 
செருப்பாய் வாழவா இப்போது 'நெருப்பெடுத்து' எச்சரிக்கின்றது ! 
மாட்டை விட மனிதம் கேவலமாய் போன தீவில் 
வேடிக்கையான ஜீவ காருண்யம் தொடருது  !   
ஆழமான காயம் கச்சிதமான கழுத்தறுப்புகள் கூட  !
அடிப்படை வாத 'அல்கைதா ' போர்வையால் மூடப்பட 
முடுக்கப் பட்ட பிரச்சார யுத்தத்தில் தயாரிக்கப்பட்ட 
அசிங்கமான முகமூடிகள் மட்டும் எட்டுத் 
திசையிலும் முஸ்லிமுக்கு என்றுமே இலவசமா !?

No comments:

Post a Comment