Tuesday, May 14, 2013

இது காலத்தின் கட்டாயத் தேவை .


"நிச்சயமாக, எனது தொழுகையும் , என்னுடைய குர்பானியும் ,என்னுடைய வாழ்வும் ,என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்று (நபியே !)நீர் கூறுவீராக !

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை ;இதைக் கொண்டே நான் ஏவப் பட்டுள்ளேன் ; இன்னும் முஸ்லீம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக )
(T M Q அல் அன் ஆம் :வசனம் 162,163)

வஹியுடைய இந்த வசனங்கள் முஸ்லீம்களால் அதிகமாக உச்சரிக்கப் படுபவை குறிப்பாக தொழுகையில் "இஹ்ராம் தக்பீருக்கு " அடுத்ததாக இந்த (வஜ்ஜஹத்து ..எனத் தொடரும் )உறுதி மொழி அடிக்கடி முஸ்லீம்களால் புதுப்பிக்கவும் படுகின்றது .

விடயம் என்னவென்றால் எமது வாயிலிருந்து அர்த்தம் புரியாத வார்த்தைகளாக இந்த உறுதி மொழியை மொழிந்து விட்டு , இன்றைய குப்ரிய மேலாதிக்க உலகில் வாழ்வியலையும் ,அரசியலையும் ("ஹம்து சலவாத்தோடு ") குப்ரோடு இணைந்து ,அல்லது அதன் கோட்பாடுகளை ஒன்றிப் போகும் வகையில் (குப்பார்களின் திருப்திக்காக ) வார்த்தைகளை கொட்டும் ஒரு பெரும் தவறை முஸ்லீம்களில் அதிகமானோர் செய்கின்றனர் !

இஸ்லாத்தில் அரசியலா ? இல்லவே இல்லை !, இஸ்லாத்தின் அடிப்படை இபாதக்களில் அரசியல் எதிர்பார்ப்பா !? இல்லவே இல்லை ! இஸ்லாமிய இபாதாக்கள் சொல்லும் தத்துவம் வெறும் ஆன்மீகமே ! என்ற " கிளிப் பேச்சு ஆலிம்கள் " சிலரின் அடாவடியான பதில்களில் மயங்கி 'முதலாளித்துவ பண்ட உலகில் வெறும் பிண்டங்களாக வாழ்ந்து போக நிணைப்பவர்கள் மேலே தந்த வஹியின் மொழியை உணர்ந்து தமது தொழுகையில் இந்த வார்த்தைகளை தெளிவோடு உச்சரிப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும் .

No comments:

Post a Comment