Wednesday, May 22, 2013

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 2)


 உண்மையில் 'ACSA ' ஒப்பந்தம் மூலம் அமெரிக்க உளவுப் பிரிவின் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ,இராணுவ ஆலோசனைகள் என்பன பல நாடுகளுக்கு கிடைத்தன . இந்த 'ACSA ' ஒப்பந்தத்தை பயன்படுத்தி இலங்கையும் பயன் அடைந்துள்ளது என்பது பகிரங்க உண்மை .

இலங்கையில் உள்ள வசதிகளை அமெரிக்கா பயன் படுத்துவதற்கும் , பரஸ்பர உளவு மற்றும் இராணுவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் என இத்தகு 'ACSA ' உடன்பாட்டை அமெரிக்காவுடன் 2007 மார்ச் 5ம் திகதி இலங்கையும் கையெழுத்திட்டுக் கொண்டது . 




            இந்த ஒப்பந்தப் பிரகாரம் தான் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் துல்லியமான உளவுத் தகவல்கள் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் 4ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன . மேலும் இரணைமடு காட்டில் இருந்த விமான ஓடுபாதை தொடர்பான தகவல்களும் அமெரிக்க செய்மதிகள் துல்லியமாக படம் பிடித்துக் காட்டின . ஆனால் இந்த 'SOFA ' இவ்வாரானதல்ல அது நேரடி படை,பயிற்ச்சி , தாக்குதல் நடவடிக்கைகளோடு சம்பந்தப் பட்டது .


இந்த இடம்தான் சிந்திக்க வேண்டியது . அப்படியானால் மாலைத்தீவு இந்த SOFA ஒப்பந்த வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டதேன் !? சீன மேலாதிக்கம் ,அதன் முதலீடுகள் , கட்டுப்படுத்தப்படவும் ஒரு வல்லமை மிக்க போட்டிச் சந்தையை பேணவும் தான் என்ற ஒரு குறுகிய பார்வையை இது விடயத்தில் செலுத்துவோமானால் அது சர்வதேச அரசியலின் கத்துக்குட்டி பார்வையாகவே அமையும் . 

அமெரிக்காவும் இது விடயத்தில் மிகுந்த தெளிவாகவே உள்ளது ; மலைத் தீவுடன் மேற்கொள்ளும் 'SOFA ' உடன்பாட்டில் இந்தியாவின் தர்ம சங்கடத்தை அது உணர்ந்தே உள்ளது . எனவேதான் "நிரந்தரப் படைத் தளத்தை நிறுவும் நோக்கம் தமக்கில்லை " என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கின்றது .அப்படியானால் இந்தியாவும் நிர்ணயிக்கப் பட்ட  அந்த எதிர்பார்ப்பில் பங்காளியா ? என்ற வினா எம்மைச் சுற்றி எழுகின்றது ; சீன விவகாரம் ஒரு பூச்சாண்டி அரசியல் தான் என்ற முடிவை நோக்கியும்  எம்மை வரத் தூண்டும் .


அப்படியானால் அமெரிக்காவின் இன்றைய நடத்தைகளுக்கு ஒரு அடிப்படைத் தொடர்பை தேடுவோமானால் 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் இடும் ஒரு முடிச்சு போல் தோன்றினாலும் அது வேகமாக பரவி வரும் இஸ்லாமிய அலைதானா ? என்ற வினாவையே கேட்கத்தோன்றுகிறது. 'பத்தாம் பசலித் தனமான' ஒரு கருத்தாக இதை பலர் கருதினாலும் . முஸ்லீம் உலகம் தனது இயல்பான சித்தாந்த மாற்றத்தை நோக்கி நகர்கின்றது எனும் எடுகோளையும் ,ஒரு சித்தாந்த மக்கள் புரட்சியை தடுக்க நிகழ்கால ,எதிர்கால அரசியல் தடுப்பு 'வக்சின்களை ' எவ்வாறு கொடுப்பது என்பதை பயிற்று விக்கவும் ,தேவைப்படின் நேரடி கல நடவடிக்கைகளை செய்யவும் இந்த 'SOFA ' கணிசமாக உதவலாம் . என்பதே அமெரிக்க எதிர்பார்ப்பாக இருக்கலாம்  இந்த அரசியல் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் ,இலங்கைக்கும், முழு  குப்ரிய மேலாதிக்க உலகத்திற்கும்  பொதுவானதே .இன்னும் சில தகவல்களோடு இன்ஷா அல்லாஹ் மறுமுறை தொடர்கிறேன்.

















No comments:

Post a Comment