Saturday, May 11, 2013

இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!


அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். குப்ரிய மேலாதிக்கமுதலாளித்துவ உலகு முஸ்லீம் உலகின் மீது தமது நியாயங்களுக்காக தொடரான ஒரு உளவியல் யுத்தத்தை தொடுத்தே வந்துள்ளது . சர்வதேச மீடியாக்களின் பக்கபலம் , அவைகளின் மிகை விமர்சன பிரச்சார போலிகள் என்பன அமெரிக்கா முதல் இலங்கையின் பொது பல சேனாவின் பிரச்சாரம் வரை ஆதிக்கம் செலுத்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. 

அது இஸ்லாம் ஒரு வன்முறை வழிமுறை ! அதன் வழி; முஸ்லிம் நிலையான வன்முறையாளன் என்பதும் அந்த வகையில் அடிப்படை வாத ,தீவிர வாத ,பயங்கர வாத முத்திரைகளை குத்தி காட்டுவதன் ஊடாக சரணடைவு, அல்லது சமாதி என்ற அச்சத்தை 
முன்னிறுத்தி தமது சித்தாந்த வழிமுறைகளை நிபந்தனைப் படுத்தி முஸ்லிமை கட்டுப்பட வைப்பதே குப்பார்ககளின் தொடரான வழிமுறை ஆகும்.


அதோடு இன்று இஸ்லாத்தை விருப்பு அடிப்படையில் பலதில் ஒன்றாக தேர்வு செய்யும் மனோபாவத்தை நோக்கி முஸ்லிமை இட்டுச் செல்வதே குப்ரிய மேலாதிக்க வாதிகளின் ஒரே தெளிவான முடிவு . ஸரீயா சட்டம் அமுலில் இருக்கும் சவூதி அரேபியாவை ஒருபுறமும் , ஜனநாயக தெரிவின் அடிப்படையில் இஸ்லாத்தை இரண்டாம் தர தெரிவு (மனித விருப்பு)அடிப்படையில் நவ இஸ்லாமிசம் பேசும் தேசிய அரசுகளின் எழுச்சியை மறுபுறமும், ஆப்கான், மாலி, செச்னியா போன்ற பகுதிகளின் சூழ்நிலையை ஒரு புறமும் என மாற்றி மாற்றி காட்டுவதன் ஊடாக யதார்த்தமான ஜனநாயகத்திட்கும் , காட்டுமிராண்டித் தனமான ஒரு பிட்போக்கு வழிமுறைக்கும் இடையிலான ஒரு தெரிவு நோக்கி முஸ்லிமை நகர்த்துவதே குப்பார்ககளின் அரசியல் இலக்கு.

1980 களில் 'சோவியத் நாடு ' எனும் ஒரு சஞ்சிகை வெளி வந்து கொண்டிருந்தது. முதலாளித்துவ எகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு சவாலாக சோவியத் யூனியனாக நாஸ்திக கம்பியூநிஸம் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அதுவாகும்.(இந்த சஞ்சிகை அமெரிக்க எதிர்ப்பு மனப்பாங்கு உள்ளவர்களுக்கு தீனி போடும் ரஸ்ய
மார்க்சிய கம்பியூநிசத்தின் கொள்கை மற்றும் சுய சுத்தம் பேசும் சஞ்சிகையாகும்.)

ஆனால் இந்த சஞ்சிகையில் சில சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்களையும்,தகவல்களையும் தருவதில் பல உண்மைகள் இருப்பதை எம்மால் மறுக்க முடியாது. அப்படி ஒரு தகவல் 
தான் 'பயலாஜிகால் வெப்பனாக' பிரயோகிக்க அமெரிக்க இராணுவ ஆய்வு கூடமொன்றில் திட்டமிட்டு வீரியம் அதிகரிக்கப்பட்ட ஒரு 'வைரஸ்' தான் எச் .ஐ .வீ என்பதும் . அதன் பரீட்சார்த்த கசிவின் விளைவே 'எய்ட்ஸ்' என்பதாகவும் ஒரு நீண்ட விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தது. 


முழு மனித சமூகத்தையும் பணயம் வைத்து அதிகார ஆதிக்க ஆயுதப் போட்டியில் நீயா நானா ? என அமெரிக்காவும் , சோவியத் யூனியனும் அக்காலத்தில் ஈடுபட்டிருந்தது பகிரங்க உண்மை.அரிசோனா பாலை வனத்தில் இரும்புப் பாலங்களை சில நொடிகளில் உருக்கிய சிறிய அணு குண்டு பரிசோதனை போதாமல் அதன் அகோரமான அழிக்கும் திறன் 'ஹீரோஸிமா' நாகாஸாக்கியில் ' பிரயோகிக்கப் பட்ட உதாரணமே போதும் !! அமெரிக்காவின் பாதுகாப்பான மனித நலன் மிக்க ஆய்வுத் திறமையை எடுத்துக் காட்ட.

ஆனால் இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறாமல் 'அந்திறாக்ஸ்' என்ற 'பக்டீரியா' உலக உருண்டையை மறுபக்கம் சூழட்டியது!? 'மேட் பை அல்கைதா ' எனும் 'லேபில்' ஓட்டப்பட்டு 'இஸ்லாமிக் டேரர் இஸம்' என்ற ஒரு அச்சப் படுத்தும் 'செண்டி மென்டை' மனித உள்ளங்களில் விதைத்தது! காரணம் முஸ்லீம் உலகு ஆக்கிரமிக்கப் பட சில நியாயங்களை அரசியல் இராணுவ ரீதியில் அமைக்க வேண்டிய அவசியம் சீ. ஐ .ஏ இனால் உணரப் பட்டதே. பின்னர் இரட்டை கோபுரத் தாக்குதலை நேரடிக் காரணம் காட்டி ஈராக்கும் , ஆப்கானும் ஆக்கிரமிக்கப் பட்டது.

'கெமிகள் வெப்பன்' நாடகம் மூலம் ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்கா தகுதியான ஆதாரத்தை அங்கிருந்து தர முடிந்ததா!? 'ஓசாமா பின் லேடனுக்காக' ஆப்கான் நுழைந்த அமெரிக்கா இன்னும் வேறு எதைக் கிழிக்க அங்கே இருக்கிறது!? எனும் சாதாரண கேள்விகளுக்கே இன்னும் 
பதில் சரியாக தரப்படவில்லை. 'ஆக்கிரமிப்புக்கான நியாயம் அதனால் இது நியாயமான ஆக்கிரமிப்பு ' எனும் நாடக அரசியல் கதை தவிர உறுப்படியாக இவர்களால் பதில் தர முடியாது 

பயங்கர வாதம் என்பதட்கான வரைவிலக்கணம் முதலாளித்துவ மேட்கின் அகராதியில் மிகவும் விசித்திரமானது! சுயநலம் மிக்க தமது அதிகார எல்லையை அதி தீவிரமான கருத்தியல் பாதுகாப்பில் வைத்திருக்க 'பச்சோந்தி' தனமாக நிறம் மாறும் ஒரு வடிவமாகவே அந்த வரைவிலக்கணம் அமைந்துள்ளது. 1979 ம் ஆண்டு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உலவுத் துறையினர் ஒரு மாநாடு ஒன்றை கூட்டி இந்த அட்புதமான முடிவை சொன்னார்கள்!

அந்த வரைவிலக்கணம் இதுதான் " அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதட்காக சமூகத்தின் பொதுவிருப்புக்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல் என்பதே பயங்கர வாதம் ஆகும்" என்பதே அதுவாகும். ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகனே! எனும் பழமொழிக்கேட்ப 
சுய அரசியல் இலாபங்களுக்காக இந்த விடயம் அரசியல் வடிவமாக மாற்றப் பட்டது!அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல மாநாடுகள்; அதன் பின்னால் பல தீர்மாணங்கள் என அந்த 'இராஜதந்திர பாதுகாப்பு வேலி உலகளாவிய ரீதியில் கொண்டு வரப்பட்டது..


பல இயக்கங்கள் ,சங்கங்கள் ,கலகங்கள் இந்த சூதாட்ட அரசியலில் பயங்கரவாத அமைப்புகள் என முத்திரை இடப்பட்டது. இதில் மிகுந்த வேடிக்கை என்னவென்றால் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளை தவிர எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் இந்த 'லிஸ்டில்' சேர்க்கப் பட்டன! 
இன்று வரை சேர்க்கப் படுகின்றன! இஸ்லாமிய இயக்கங்கள் இந்த 'லிஸ்டில் 'சேர்க்கப்பட ஒரு சில வார்த்தைகளை உச்சரித்தால் போதும் என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றுக் கொண்டன.
இந்த கோமாளித் தனமான வரைவிலக்கணம் இஸ்லாத்தையும் , முஸ்லீம்களையும் மிகத் தெளிவாகவே குறிவைத்தது. இந்த சூதாட்ட அரசியலில் 'சியோனிஸமும் , இஸ்ரேலும் தெளிவான 'ஜோக்கர்கள்' போல் பவனிவர பாலஸ்தீனின் பச்சைக் குழந்தையும் பயங்கர 
வாதியாக உலகின் முன் காட்சிப்படுத்தப் பட்டனர். "முஸ்லீம் என்றால் குடிநீரோ குடியிருக்க இடமோ கொடுக்க மாட்டோம்" என முஸ்லீம் அல்லாத மக்கள் கூறும் அளவுக்கு அச்சப் படுத்தப் பட்டார்கள்.
இயல்பு வாழ்க்கையில் இருந்து 'இமிக்கிரேசன்' வரை இறுக்கமான ஒரு நிர்ப்பந்த வாழ்வை நோக்கி முஸ்லீம் தள்ளப்பட்டான். இப்போது அவனுக்கு முன் தெரிவுகள் மூன்றானது.

1. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட ,அதனோடு முரண்படாத ஒரு கூட்டு வாழ்வை நோக்கி தனது இஸ்லாமிய இயல்பு நிலையை மீறி வாழ பழகிக் கொள்ளல்.

2. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்கு கட்டுப்படாத இலட்சிய வாத இஸ்லாமிய சித்தாந்த போரை கருததியலாக முன்வைத்து போராடுதல்.

3. கருத்தியல் தொடர்பில் அழுத்தம் கொடுக்காத வன்முறை சார் போராட்ட வடிவத்தை கொண்டு தனது வாழ்வியலை பாதுகாத்தல்.

இந்த முடிவுகளில் மேட்கின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நடந்தது? என்பதை இன்ஷா அல்லாஹ் மறுமுறை சொல்கிறேன். 


No comments:

Post a Comment