Sunday, May 26, 2013

முதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியாவும் .


       சில அரசியல்  சம்பவங்கள் ஆழமாக ஆராயப்பட்டு  பேசப்படுவதில்லை . பலமுள்ளவன் சரியானவன் என்ற எழுதப்படாத ஒரு கொடூர விதியின் கீழ் அவை இராஜ தந்திர நியாயங்களாகவும் காட்டப்படுகின்றன . இவை இவை பற்றிய குறை மதிப்பீடு நிகழ்கால  அரசியல் அதிகாரங்களின் செயற்பாடுகள் பற்றிய பார்வையில்  முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .

                                   ஆளும் வர்க்கம் ,ஆளப்படும் வர்க்கம் என்ற பிரிகோடு , இன ,மத ,குல ,வர்க்கம் போன்ற பல  முரண்பாடுகள் அதிகாரத்தையும் அதன் செயற்பாடுகளுக்கான நியாயங்களையும் காட்டி நிற்கும் கருவிகளாக மாறித்தான் போய் விட்டது . முதலாளித்துவம் கற்றுக் கொடுத்துள்ள ஒரே அரசியல் இது தான் . இன்று மக்களுக்காக 
அரசா !? அரசுக்காக மக்களா !? என்ற வினா ஒரு  அர்த்தமில்லாதது .  இலாபத்துக்கான நடவடிக்கை ,நடவடிக்கையின் இலாபம் இதுதான்  நிகழ்கால அரசியல் .


                   (  மக்களுக்கு நன்மை செய்தல் என்பதில் இருந்து தான் அரசு ,அரசியல் என்பன தோற்றம் பெற்றதாக கூறினாலும் இன்று அது முதலாளித்துவ நியாயங்களுக்காகவும் ,இலாபங்களுக்காகவும் சுழலும் அச்சாணியாகவே அரசு என்பது மாறிப்போய் விட்டது .ஒவ்வொரு தேசியங்களும் தனது முதலாளி யார் !? என்ற மட்டுப்படுத்தப்பட்ட தேடலோடு அந்த வளக் கொல்லைக்கு ,கொள்கை வகுத்துக் கொடுக்கும் துரோக அரசியலை இராஜ தந்திரமாக பேணுகின்றன . )

                  இந்த உதாரணத்தைப் பாருங்கள் ; ஈரான் நடைமுறையில் அமெரிக்க விரோதி ஈரானில் காணப்படுவது 'ஷியா ' சிந்தனை சார் அரசியல் ,ஆனால் ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா இத்தகு 'ஷியா ' அரசையே  அவர்களது அடியாள்  அரசாக உருவாக்கியதற்கான 
நியாயம் சதாம் ஹுசைன் 'சுன்னி முஸ்லீம் ' என்பதனால் மட்டுமா !?  சதாம் வேட்டையாடப்பட 'ஷியா '  தேவையாக இருந்தால் 'ஈரான் ' அந்நிலையில்  நண்பனா பகைவனா !?எனும் வினா ஒருபக்கம் எழுந்தாலும் இங்கு நட்பு பகை என்பது அரசியல் இலாபம் என்ற  விடயத்தை நோக்கி  மைய்யப்படுத்தப்பட்டு . வெளிப்படையாக 
பேணப்படும் காட்சி அமைப்பு வேறுபட்டது .                  சிரிய விவகாரத்தில் இஸ்ரேலின் தலையீட்டுக்கான நியாயம் 'ஹிஸ்புல்லாஹ் 'என்பதிலும் இந்த 'ஹிஸ்புல்லாக்கள் பசர் அல் அசாதின் அலவி ஷியா' அரச இராணுவத்துக்கு சார்பாக போரிடுகிறார்கள் எனும் நிலையில் அவர்களுக்கு எதிராக சில பல மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்கிறது .இந்த இராணுவ அரசியல் மிக நுணுக்கமாக சிந்திக்கப் பட வேண்டும் . இதையும் சிரியாவில்  நடக்கும் இஸ்லாமியப்    போராட்டத்தையும் இணைத்து சிந்திப்போமானால் 'சியோனிசம் ' சிரியா தொடர்பில் முஸ்லீம் உலகில் விதைக்க நிணைக்கும் மாயக் கருத்தினில் நாமும் புதைந்து போவோம் . 
          இஸ்ரேல் ,NATO விடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தெளிவான முடிவையே சொல்லியுள்ளனர் . அதாவது NATO இதில் தலையிடக்கூடாது என்பதையும் , இஸ்ரேல் பகிரங்க எதிரி என்பதையும் பகிரங்க அறிக்கையாக வெளியிட்டுள்ளனர் .

                                                                                                   மேற்கின் ஜனநாயக சதிவலையில் வீழ்ந்த சிரிய எல்லையில் உள்ள தேசிய அரசுகள் சிலதே NATO விற்காக தமது எல்லைகளை கொடுத்து  அதன் தலையீட்டை வேண்டியவர்களாகவும் இஸ்ரேலோடு உறவுகளை பேணியவர்களாக , இஸ்ரேலின் தலையீட்டை மௌனமாக பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர் .மேலும் மேற்கின் சிந்தனை தாக்கத்தை கொண்ட கிளர்ச்சிப் படைகளை சிரியாவில் களமிறக்க உதவியும் உள்ளனர் .                         மேற்கும்  அதன் மத்திய கிழக்கு அடியாட்களும் நிகழ்த்த விரும்பும்  அரசியல் சதுரங்கத்தில்  இஸ்ரேல் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதையும் , மத்திய கிழக்கின் வளங்களை தமது கட்டுப்பாட்டில் சதா காலமும் வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் பொதுவான ஒரு அரசியல் சதியாகவே ' அரேபிய வசந்தம் ' அங்கு மேற்கொள்ளப் பட்டது . அதாவது  காலாவதியான கம்பியூனிச சார் பாத்திரங்கள் மாற்றப்பட வேண்டும் . அந்த மாற்றீடு முஸ்லீம்களை கவரவும் வேண்டும் ,மதச் சார்பின்மையை மீறவும் கூடாது எனவே இஸ்லாத்தை பூசிய ஜனநாயகம் அறிமுகப் படுத்தப் பட்டது .

                    சவூதியை புறந்தள்ளிய கட்டாரிய பாத்திரம் இங்கு  ஒரு முடியாட்சி கெளரவம் !மதச் சார்பின்மையை கருத்தியலால் எதிர்த்துக் கொண்டு   சூழ்நிலை அரசியலில் அதை அங்கீகரித்து 'ஹிக்மத்  பொலிடிக்ஸ் ' பேசும் இஸ்லாமிய இயக்கவாதம் ,இமாம்கள் என 
டைவேர்ட் டிப்ளோமேடிக் ' பக்குவமாக அறிமுகப் படுத்தப் பட்டது . இந்த அறிமுகம் பிழைத்துப் போனது சிரியாவில் தான் ; அது எப்படி என்றால் இஸ்லாமிய மாற்றம் பற்றிய சிரிய மக்களின் தேடல்களில் ஆழமான இஸ்லாமிய சித்தாந்த மாற்றம் பளிச்சிட்டது .               அவர்கள் இங்கு படிமுறை மாற்றத்துக்கான அரசியலை வேண்டுபவர்களின் தொகை,  பசர் அல் அசாத் தவிர்ந்த ஒரு ஆட்சியை வேண்டுபவர்களின் தொகை புரட்சியின் ஆரம்பத்தில் இருந்தே கணிசமாக குறைய ஆரம்பித்து இன்று இஸ்லாமிய 'கிலாபா ' எனும் கருத்தியல் வலுப் பெற்றுள்ளதோடு சர்வதேச முஸ்லீம் உம்மாவின் 
இஸ்லாமிய இராணுவம் பல்வேறு பிரிகேட்களுடன் களத்தில் நிற்கின்றது .             இவர்களை வெறும் கலகக் காரர்களாக , புரட்சிக்காரர்களாக, தீவிரவாதிகளாக ,பயங்கர வாதிகளாக காலம் இனம் காட்டுமா !? அல்லது வல்லமை மிக்க இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இராணுவமாக காலம் இனம் காட்டுமா !? முஸ்லீம் உலகே !? உனது கரங்கள் இறை உதவிக்காக  பிரார்த்திக்கட்டும் இஸ்ரேலும்,சியோனிச சாம்ராஜ்யமும் அழிக்கப்படும் அந்த மாபெரும் சமரில் ஒரே கலீபாவிட்கு பையத் செய்து இஸ்லாமிய 
சாம்ராஜ்யத்தின் ஒரு முஜாஹிதாக களமிறங்கும் பாக்கியத்தை வேண்டுவோம் .
No comments:

Post a Comment