Monday, May 20, 2013

வெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையும் ,கற்பனையும் கலந்த ஒரு பார்வை )
பசர் அல் அசாதின் வார்த்தைகளாக வெளியில் வந்தவை .......

"யார் என்ன சொன்னாலும் நான் பதவி விலக மாட்டேன் ."( என ஆர்ஜென்டீன  பத்திரிகை ஒன்றுக்கு 'சிரிய' ஜனாதிபதி ' பசர் அல் அசாத் ' பேட்டியளித்துள்ளார் . அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து ஒரு சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் மாதம் சிரிய விவகாரத்தில் ஒரு சுமூகத் தீர்வை எட்டும் நிலைப்பாட்டில் கூட்ட  ஏற்பாடுகளை செய்துவரும் இன்றைய நிலையில்  இவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார் .)(இந்த மாநாட்டை கூட்டுவதற்கு பிரதான நிபந்தனையே 'பசர் அல் அசாத் ' பதவி விலக வேண்டும் என்பதே ஆகும் . இந்த அரசியல் ச(க )தியில் முஸ்லீம் உம்மாவுக்கு சிந்திக்க வேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன .அவைகளை உணர்ந்து கொள்ள குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் இன்னும் சில முக்கியமான கீழ்வரும்  பகுதிகளை எடுத்துக் காட்டுவது நிலைமையை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் . )# "சிரியாவில் ஆட்சியில் இருந்து யார் வெளியேற வேண்டும் ,யார் பதவியில் இருக்க வேண்டும் என்பது சிரிய மக்களின் அதிகாரம் ! அதை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோர்ன் கெரியோ அல்லது வேறு யாருக்குமோ உரிமை இல்லாதது "


#" நான் பதவி விலகுவது தப்பி ஓடுவதாக இருக்கும் .நான் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடும் ஆளில்லை . 2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிரிய மக்கள் யார் ஜனாதிபதி என்பதை முடிவு செய்வார்கள் ."#"இந்த சர்வதேச மாநாடு சிரிய மக்களை சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீட்க உதவும் என நம்புகிறேன் "


#" கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் மேற்குலகு சிரிய விவகாரத்தில் தீர்வு காண விரும்புகின்றன என்பதை நம்பமுடியவில்லை " என்றும் தெரிவித்துள்ளார் .


பசர் அல் அசாதின் மனதில் உள்ளவை .........

                                                       "  ஒரு அப்பட்டமான சர்வாதிகாரி நான்  , கொலைகாரன் நான் , அநியாயக்காரன் நான் இப்போது பேசுவது தந்திரமாக தப்பிக்க மேற்கின் பாணியில் அதே மக்கள் விருப்பு   மகேசன் விருப்பு ! இந்த ஜனநாயகத்தையும் இத்தகு தலைவர்களையும் இந்த உலகு ஜீரனித்து தான் உள்ளதே ! எட்டுத் திசையும் கொட்டிக் கிடப்பது இந்த கொலைகார பொலிடிக்ஸ் தானே ! பொய்யென்றால் பெஞ்சமின் நெதன் யாகுவிடம் கேட்டுப் பாருங்கள் ! இட்சாக் ராபினிடம் கேட்டுப் பாருங்கள் ! சிமோன் பெரஸ் ஸிடம் கேட்டுப் பாருங்கள் ! அலவி சியாவாக யூத வழியை விட குறைவாக என்ன செய்தேன் !அதே முஸ்லீம் அதே இரத்தம் ! என்னையும் தான் ஏற்றுக் கொள்ளுங்களேன் ."
             


                                   "  நான் நம்பிய கம்பியூனிச கரடி முதலாளித்துவ பூஜைக்கு கூஜா தூக்கியாய் மாறி வெஸ்டனுக்கு சலாம் போட சொன்னது சற்று கசப்பாய் இருந்தாலும்    ஹிரோஷிமா,நாகாசாக்கி சிவிலியன்கள் மீது  அட்டாமிக் பவர் காட்டி பரீட்சார்த்த அழிப்பு செய்து எதோ ஜஸ்ட் மைக் டெஸ்டிங்  மைக் டெஸ்டிங் என்று செக் பண்ணுவது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மனித  இரத்த விளையாட்டை செய்து விட்டு இன்று ஹீரோவாக என்னை  மனித உரிமை என தட்டிக்  கேட்க வந்திருக்கும் "இன்டெர் நேஷனல் கிரிமினல் வீட்டோ பவர் காட்டி நேட்டோவை விட்டடித்து கடாபியை கசாப்புக் கடையாக்கி கூலரில் போட்டது எனக்கு மறக்கவில்லை . அந்தப் பயம்  அவன் விரும்பும் ஆட்சியை இங்கு திணிக்கத்தான் என்பது புரிந்ததால் இப்போது' டிப்லோமடிகள் பல்டி ' அடிப்பது தவிர வேறு வழியில்லை ."

                                
                                        "  நேட்டோவை இஸ்லாத்துக்கு எடுக்கும் இமாம்களே ! இந்த அலவி அரக்கனை  காக்க  U .S  சொன்னால் ஆதரவு  தரவா மாட்டீர்கள் ! அந்த சிலுவை நிழலில் நான் கேட்பது பங்கல்ல அபயம் ! நேற்றைய கொலைகளை மன்னித்த நீங்கள் இன்றைய கொலைகளுக்கும் நாளை நேற்றையாகும் என்பதை நான் நன்றாக அறிவேன் . அதே டிமோகிரசி ,பார்லிமென்ட் ,எதிர்க்கட்சி இருந்தால் போதுமே ! 51%  வாக்குப் பலத்தில் கிள்ளுக்கீரை இஸ்லாம் சிரியாவில்  என்னாலும் தரமுடியும் . வாழ்க ஜனநாயகம் !  வாழ்க ஜனநாயகம் !"
"அதென்னப்பா  'கிலாபா ' அது வந்தால் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆப்பு என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம் ! என் விடயத்தில்  நியாயத் தகுதி பற்றி அநியாயம் பேசாமல்  வழமை போலவே அநியாயத்தை நியாயமாக பேசுங்கள் ! நானும் உங்களில் ஒருவன்தான்  இன்னும் சிலகாலம் நானும் கொட்டமடிக்க "

No comments:

Post a Comment