Wednesday, May 22, 2013

விரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் படையணிகள் - கிலாபா வெகு தூரத்தில் இல்லை???
by: Abu Hamza    மே 18ல் தான் அந்த பெரிய உண்மை, மேற்கால் மூடி மறைக்கப்பட்ட உண்மை வெளியாகியிது. ஆர்ஜன்டைனாவின் Clarin செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது இந்த உண்மை ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 29 நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒன்றினைந்து “விடுதலை போராளிகள்” என்ற பெயரில் சிரியாவின் சட்டரீதியான மக்கள் அரசிற்கு எதிராக போராடி வருகிறார்கள் என சிரியாவின் அதிபர் பஸர் அல் அஸாத் கூறியுள்ளார்.


“பன்னாட்டு படையணி”, “கூட்டு படையணி” போன்ற பதங்கள் எமக்கு மிகவும் பழக்கமானவையே. இவற்றை ஐ.நா.வும் நேட்டோவும் எமக்கு சொல்லித்தந்தன. “உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் படையணி” என்ற இந்த பதத்தினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இல்லையென்றால் சிரிய சமர்களத்தை சற்று உற்று நோக்குங்கள். 
சிலுவை போரிற்கு பின்னரான ஒரு நீண்ட குருதி புணல் இப்போது சிரியாவில் தான் ஓடிகிறது. நிற்காமல். மேலும் இரண்டு மூன்று ஆண்டுகளிற்கு இந்த யுத்தம் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் மற்றும் இராணுவ வல்லுனர்கள் ஊகம் தெரிவித்துள்ளனர்.

பிற நாட்டு போராளிகள் சாரி சாரியாக வந்து சிரிய போராட்டத்தில் பங்கேற்பது வியப்பளிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. ஆப்கானிய ஜிஹாதில் தளபதி அப்துல்லாஹ் ஆஸம் தலைமையில் அரபு தேசத்தவர்களும், இஹ்வான்களும் களமாடினர். தளபதி கத்தாப் தலைமையில் அரபு தேசத்தவர்களும், ஸலபிகளும் செச்னிய ஜிஹாதில் போராடினர். பல தேசத்தவர்கள் இதில் இருந்தாலும் எண்ணிக்கையில் சொற்ப அளவினர். மற்றும் தங்கள் உள்ளத்தின் சுய விருப்பின் அடிப்படையிலும் ஜிஹாத் மீது கொண்ட தீராத காதலினாலும் இவர்கள் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் போராடினர். மரணித்தனர். எஞ்சியவர்கள் பொஸ்னியா, கொஸாவோ என்று சென்றனர்.

சிரியாவின் களநிலை ஆப்கானிற்கும், செச்னியாவிற்கும் மாற்றமானதாக இருக்கிறது. இங்கே சுய ஆர்வம் என்பதையும் தாண்டி உலகில் இஸ்லாமிய ஆட்சிக்காக போராடும் ஜிஹாதிய அமைப்புக்கள் பலவும் தங்கள் சிறந்த படையணிகளை சிரிய சமர் களத்தில் ஈடுபடுத்தியுள்ளன. ஈராக்கிற்கு கூட இவர்கள் இந்த அளவு உதவவில்லை.

எல்லைகள் கடந்த “ஜிஹாத்தாக” இன்றைய சிரிய மண்ணில்  இஸ்லாமியவாதிகளின் போராட்டம் பரிணமித்துள்ளது. இங்குஸ், தாய்லாந்து, ஷிங்ஸியாங், மோரோ என பல பாகங்களில் இருந்தும் முஜாஹித்கள் சிரிய சமரில் இணைந்துள்ளனர். இது சர்வதேச இஸ்லாமிய உம்மாவின் சேனையின் ஒரு ஆரம்பப்படியாகவே நோக்கத்தக்கது.

பொதுவாக தலிபான்கள் தங்கள் போராளிகளை எல்லை கடந்த செயற்பாடுகளிற்கு உபயோகிப்பதில்லை. ஆனால் சிரிய சமரில் ஆப்கானின் தலிபான்கள் தங்கள் முன்னணி கொமாண்டோக்கள் அடங்கிய அணியை சிரியாவில் இறக்கியுள்ளனர். சீனாவின் இரும்பு பிடியில் நசுங்கும் உய்குர் முஸ்லிம்கள் அடங்கிய ஷிங்ஷியாங் படையணியும் இதில் உள்ளடக்கம். சீனாவில் போராட அதேவேளை சிரியாவில் போராடும் சீன முஜாஹித்கள். சில கணக்குகள் புரிகிறதா?

இந்த இராணுவ பரிணாமம் கண்டு மேற்கின் உளவமைப்புக்களும் அவற்றின் இராணுவ தலைமைகளும் கலங்கி போயுள்ளன. ஷாமின் இராணுவம் குறித்த நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கள் இதற்கு பெரிதும் ஒத்து  வருவதாக கூட கருத முடிகிறது, 

இதில் இன்னொரு தரப்பும் அதிர்ந்து போயுள்ளனர். ஆம் கலங்கிய மற்றையவர்கள் ஷியாக்கள். 

ஷியாக்கள் மதீனாவை ஏப்பம் விட துடிப்பவர்கள். இஸ்ரேலியர்களிற்கும் மதீனா கனவு உண்டு. நவீன யூத இராணுவம், நவீன மஹ்தி இராணுவம், நவீன ஹிஸ்புல்லா படையணிகள் போன்ற அனைத்து பூச்சாண்டிகளையும் நிர்வாணப்படுத்தும் ஒரு களமாக சிரிய சமர்க்களம் விரிந்து செல்கிறது.

மேற்கின் ஊடகங்களால் மறைக்கப்பட்ட பெரிய உண்மை இன்று சிரிய அதிபரின் வாயினாலேயே வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment