Tuesday, May 21, 2013

பாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .........




        பாகிஸ்தான் தேர்தல் திருவிழா கோலாகலமாக நிறைவேறியது ; வாக்கு வணக்கங்கள் மூலம் ஜனநாயக கடவுள் இம்முறையும் வழமை போலவே பூஜிக்கப் பட்டுள்ளார் ! இந்தக் கடவுள் அருள் பாளிக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நவாஸ் செரீப் வரம் கொடுப்பான் பேர்வழி என முன்னிலையாக "பழைய குருடி கதவைத் திறடி " என்பது போல் வழமையான பாணியில் மக்கள் நடத்தப் படுவதும் இனி  தவிர்க்க முடியாதது .




          ஜனநாயக  தேர்தல்களில் மாற்றங்கள் குறித்த நம்பிக்கைகள் எப்போதும் எழுவது வழக்கம் .ஆனால்   ஜனநாயக  தேர்தல்கள் என்பது தீர்மானிக்கப்பட்ட சில பல நிர்ணயங்களின்   கண்துடைப்பு நியாயங்கள் தாம் தவிர மக்கள் விருப்பின் அடிப்படையிலான மாற்றத்தை நோக்கிய செயட்கிரமம் அல்ல என்பதை இந்த பாகிஸ்தான் தேர்தல் மீண்டும் ஒரு தடவை எடுத்துக் காட்டியுள்ளது .


           ஒருவர் ஆட்சி அமைப்பார் அந்த' அசைன்மெண்டில்' சற்று தளம்பல் தெரிய 'இன்டெர் நேஷனல் பொலிடிகல் கிங் மேக்கர்ஸ் ' ஒரு இராணுவப் புரட்சியை உசுப்பி விட சில காலம் 'ஜெனரலிச டிப்லோமடிக் அப்ளை ஆகும் ! பின் மீண்டும் 'டிமோக்கிரசி' நாடக அரங்கேற்ற விளம்பரம் மீண்டும் தலை தூக்க மக்கள் வாக்குச் சீட்டுகளை அனுமதிச் சீட்டுகளாக்கி உணர்ச்சி மிகு பங்காளர்கள் போன்ற  பார்வையாளர்களாக மாறி விடுவார்கள் .




             சரி பாகிஸ்தான் தேர்தலில் இதுவரை ஆட்சி பீடம் ஏறியவர்கள் யார் ? என்ற வினா தொடுத்தால் பூட்டோ குடும்பத்தின் (P P P ) பாகிஸ்தான் மக்கள் கட்சியும் , நவாஸ் செரீப்பின் (P M L N ) பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  போன்றவைகளின் தலைவர்கள் தவிர யாரும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது இல்லை ! இந்த மேட்டுக்குடி அரசியல் வரலாறு + மேட்டுக்குடி இராணுவ அரசியல் தவிர சாதித்தது எதுவுமில்லை . சந்தித்த அவமானங்களை தட்டிக் கேட்கவும் முடியவில்லை .(ஒசாமா விவகாரத்தில் உள்வீட்டில் புகுந்து 'கொமாண்டோ' தாக்குதல் நடத்தியது , ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது ,என பல்வேறு அவமானங்களை சுமந்த பாகிஸ்தான் இராணுவமும் , பாகிஸ்தான் உளவுப் பிரிவான I .S .I  யும் ஒரு அதிர்ச்சி கரமான குழப்பத்தில் உள்ளது . )





           ஜனநாயக ஆர்வலர்கள் சிலர் குறிப்பிடுவது "முதன் முறையாக ஆட்சிக் காலம் பூர்த்தியாகி அடுத்த அரசை தேர்வு செய்ய இந்த தேர்தல் வழிவிட்டுள்ளது ; என்ற வகையில் இந்தத் தேர்தல் முக்கியமானது ,எனவே பாகிஸ்தான் ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல் " என்பதாக கூறினாலும்  'இன்டெர் நசனல் கிங் மேக்கர்களுக்கு ' பாகிஸ்தான் இராணுவத்தை விட ,  உலகில் அடிக்கும் ஜனநாயக காய்ச்சலை பயன்படுத்துவது இப்போதைக்கு சரியாகப் பட்டுள்ளது என்பதுதான் உண்மை .


          

No comments:

Post a Comment