Friday, May 24, 2013

மேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவும் .




         சிரிய யுத்தம் இஸ்லாமிய உலகில் பல உண்மைகளை அம்பலப் படுத்தியுள்ளது . அந்த வரிசையில் 'ஹிஸ்புல்லாக்கள் ' எனும் பிரமாண்ட சதிமுகம் தெளிவாகவே அம்பலப் படுத்தப் பட்டுள்ளது . 'லெபனானை மையம் கொண்டு இஸ்ரேலுக்கு சவால் விடும் புயல் 'என வர்ணிக்கப் பட்ட இந்த பிரிவு சிரியப் போராளிகளுக்கு எதிராக பசர் அல்  அசாத்துக்கு சார்பாக களத்தில் இறங்கியது யாவரும் அறிந்த உண்மை . அந்தப் பலம் பற்றி ஈரான் மட்டுமல்ல NATO கூட ஒரு பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்ததும் மறுக்க முடியாத உண்மை .



           அதாவது இராணுவ பாசையில் சொன்னால் சிரிய அரச படையான மரபுசார் அணியையும் ,கெரில்லா அனுபவம் சார் ஹிஸ்புல்லாஹ் அணியையும் வைத்து சிரியப் போராளிகளின் 'பல்லைப் பிடுங்கி தமது சொல்லைக் கேட்க வைத்தல்' என்பதே எதிர்பார்க்கப் பட்ட இலக்காகும் . இந்த  இராணுவ அரசியல் மூலம் களத்தின் வலுச் சமநிலையை தமது கட்டுப்பாட்டின் மூலம் ஆதிக்கப் படுத்தலாம் என்பதே' NETO' வின் எதிர்பார்ப்பாகும் .



          ஆனால் இந்த 'லெபனானின் புயல்கள்(ஹிஸ்புல்லாக்கள் )  சிரியப் போராளிகளின் தாக்குதல்களில் தூசியாக சிதறடிக்கப் பட்டபோது  அது அதிர்ச்சி கரமான ஆச்சரியத்தை பசர் அல் அசாத்துக்கு மட்டுமல்ல NETO விற்கும் ஏற்பட்டது . பசர் அல் அசாத்  அர்ஜென்டீன பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உண்மையில் ஒப்புக் கொண்டது இந்த விடயத்தை தான் .


         அதில் குறிப்பிட்ட முக்கிய விடயம்  '29 நாடுகளின் பயங்கர வாதிகள் சிரியாவில்  அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது பசர் அல் அசாதின் வார்த்தைகள் மட்டுமல்ல ,NATO ,மற்றும் ரஷ்யா போன்றவைகளின் தெளிவான உளவு அறிக்கையே .. 'அரேபிய வசந்தத்தில் ஆட்சிமாற்ற அரசியல் ஊடாக 'நவ காலனித்துவத்தின் நியூ வெர்சனை ' சிரியாவிலும் வெளியிடலாம் என்ற நம்பிக்கைக்கு ஆப்பு வைத்துள்ள 'இஸ்லாமிய சர்வதேசத்தின் போராளிகள் கூட்டு ' என சூழ்நிலையை மறுதலையாக எம்மால் கூற முடியும் .


         
               முஸ்லீம் உலகின் போராளிகள் நிகழ்கால வரலாற்றில் பயங்கரவாதிகள் என பட்டம் கொடுக்கப் படுவது ஒன்றும் புதுக்கதை அல்ல . ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே இலக்கை நோக்கி இணைவது சற்று புதுக்கதை தான் . மீண்டும் ஒரு சித்தாந்த மாற்றத்தின் மைய்யப்புள்ளியாக சிரியா அமையப்போகின்றதா ? எனும் வினாவிற்கு பதிலாக  அங்கிருந்து கேட்கும்  'இஸ்லாமிய கிலாபா வேண்டும் 'என்ற அழுத்தமான வார்த்தைகளில் ஒலிப்பதை யாரும் மறுப்பதற்கில்லை .



No comments:

Post a Comment