Tuesday, July 30, 2013

'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் !

                               'தாக்கூத்' என்றால் வரம்புமீறிய சைத்தான் என்ற சொற்பதம் விளக்கமாக சொல்லப்பட்டாலும்  சற்று அழமாக இஸ்லாமிய மொழி மரபில் இப்பதம் மிகவும் பாரதூரமான ஒரு விடயத்தை காட்டி நிற்கின்றது . அதாவது தான்தோன்றித் தனமாகவும் பகிரங்கமாகவும் , தனது செயல்களுக்கான நியாயப் போலிகளுடனும் ,காரண காரிய விதிகளுக்கு உற்பட்ட தனது பலத்தை பிரயோகித்தும் இறைவனின் பண்புகள் சிலதோ பலதோ தனக்கு இருப்பதாக சொல்லால் அல்லது செயலால் காட்டி  இறைவனோடும் , அவன் அருளிய வழிமுறை ,மற்றும் அதை பின்பற்றும் மனிதர்களுக்கு எதிராக சவால் விடும், சதி செய்யும்  எந்த ஒன்றையும் இந்த 'தாக்கூத்' எனும் பதம் உள்ளடக்கி விடும் .


                                            அந்த வகையில் நும்ரூத ,பிர் அவ்ன் மற்றும் இந்த சமூகத்தின் பிர் அவ்ன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறிப்பிட்ட அபூஜஹல் உட்பட இத்தகு பண்பு கொண்ட எவரையும் வஹியின் பாசை 'தாக்கூத்' என்ற கருத்தியலுக்குள் உள்ளடக்கி  விடும் . 

                    இவர்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக இருந்தாலும் பண்பு ரீதியில் இந்த வரைவிலக்கணத்துக்கு உட்பட்டு விடுவார்கள் .அதிகாரம் ,பதவி ,மேலாதிக்கம் ,சுயலாபம் சுரண்டல் ,அடக்குமுறை போன்ற காரணிகளோடு மனித சமூகத்தின் முன் தம்மை அடையாளப் படுத்தி நிற்கும் இந்த அல்லாஹ்வின் எதிரிகள் வெள்ளை மாளிகை முதல் ,
அரேபிய மன்னர் மாளிகையை உள்ளடக்கி , அலறி மாளிகை வரை இந்த தாகூத்களின் கொடூரமான மேலாதிக்கம் இருந்து வருவதை எவரும் மறுப்பதற்கில்லை .

                                இவர்களின் அடிப்படைப் பண்புகள் ஒன்று பட்டாலும் இறைவனை எதிர்த்து சதி செய்யும் விதங்கள் வேறுபட்டவை . நவீன 'தாகூத்கள்' எடுத்த எடுப்பிலேயே தர்க்க வியல் பாணியில் தம்மை இலாஹ் ,ஆக ரப் ஆக காட்டி நிற்க மாட்டார்கள் , சட்டங்கள் யாப்புகள் , விதிகள் என தமக்கு முன்னால் சில வரையரைகளால் வேலிபோட்டு மனித சமூகத்தின் கண்களுக்கு ஒரு நாடக பாணி அரசியலை காட்சிப் படுத்துவார்கள் .

                               " நானே ரப்புகளுக்கு எல்லாம் பெரிய ரப்பு" என பிர் அவ்னைப் போலவோ அல்லது ஒரு மனிதனை கொலை செய்து விட்டு ,இன்னொரு மனிதனை "நீ வாழ்ந்து கொள் " என அனுப்பி விட்டு நும்ரூதைப் போல்  "என்னாலும் வாழ்வளிக்கவும் மரணிக்கச் செய்யவும் முடியும் " என கூறி நிற்க மாட்டார்கள் ! மாறாக நிறைவேற்று அதிகாரம் எனும் கிரீடத்தை சூட்டிக் கொண்டு மனித சமூகத்தை அடக்கி நிற்பது , அல்லது ' குழுமுறை தாகூத்தியம் செய்யத்தக்க குட்டிக் கடவுள்களின் கூட்டு அதிகாரம் கொண்ட (senate) செனட் அல்லது மன்றம் இப்படி தமது செயல்களுக்கு ஒரு காரண காரிய நியாயத்தை வடிவப் படுத்துவார்கள் .

                                      அல்லாஹ்வின் மார்க்கத்தை அவமதிப்பது தொடங்கி , அதை பின்பற்ற முனையும் மனிதர்களை உடல் ,உள ,சிந்தனை ரீதியாக கொடுமைப் படுத்துவது இவர்களின் கைவந்த கலையாகும் ! அதற்கு  உரிமை, சுதந்திரம் எனும் போலிப் பெயர்களோடு ஒரு சுரண்டல் தர பக்கச் சார்பு அரசியல் நியாயத்தையும் கொண்டிருப்பார்கள் . இன்றைய உலகில் நான் கடவுள் ! என்ற இத்தகு உருவங்களை நாம் ஏராளமாக காணலாம் . இவர்களின் சதி முக நாடகங்களில் ஒன்று 1982ல் எகிப்தில் அன்வர் சதாதின் கொலையின் பின் நிகழ்ந்தது .


                                              இஸ்லாத்தை நடைமுறை சாத்தியமற்றதாக காட்ட 'தாக்கூதிய' கூட்டு சாம்ராஜ்யம் எப்படியான வேலைத் திட்டத்தை செய்தது !? இன்ஷா அல்லாஹ் அந்த விபரங்களோடு இன்னொரு முறை சந்திக்கிறேன் . 




                               

No comments:

Post a Comment