Sunday, July 28, 2013

சிரியாவில் இருந்து ஒரு மடல் ...


என் இஸ்லாமிய சகோதரனுக்கு !
                                                        அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....

         "மேலும் ,நிராகரிப்பாளர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாவர். இதை (முஸ்லீம்களாகிய )நீங்கள் செய்யாது விட்டால் பூமியில் பெரும் குழப்பமும் ,கலகமும் ஏற்பட்டு விடும் .                  (அல் குர் ஆன் சூரா அல் அன்பால் : வசனம் 73)
       
                                     இது சத்திய இஸ்லாமிய கிலாபத்தின் மீள் உதயத்தை இலக்காக்கி உலகெங்கும் அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவின் உதிரம் பேசும் இலட்சிய வார்த்தைகள் .
 
                                                 இழப்புகள், சோதனைகள்  இந்த உம்மாவுக்கு புதியவை அல்ல .  ஆனால் எதற்காக இழக்கிறோம் யாருக்காக சோதனைகளை எதிர் கொள்கிறோம் என்பதில் இருந்துதான் முஸ்லீம் உம்மாவின் உண்மையான வடிவம் வெளித் தெரிகின்றது .நாங்கள் யார் !? என்ற வினாவை நாம் எமக்குள் அடிக்கடி கேட்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது .ஆனால் அதன் விடையை தேடி உமர் (ரலி)யின் ஆட்சிக்காலத்தில் பாரசீக சாம்ராஜ்யத்தை இஸ்லாத்தின் நிழலில் கொண்டுவர நிகழ்ந்த காதிஸீய யுத்த நேரம் நிகழ்ந்த ஒரு பிரபல்யமான சம்பவம் மீட்டிப் பார்க்கப் பட வேண்டும் .
                                                   சம்பவம் இதுதான் அன்றைய பாரசீகத்தின் இராணுவத் தளபதியாக இருந்த ருஸ்தூம் இந்த நீங்கள் யார்? என்ற வினாவை ருபுஹா இப்னு ஆமிர் எனும் முஸ்லிமிடம் கேட்டபோது ஒரு ஆச்சரியமான பதில் கிடைத்தது ! அது இதுதான் " மனிதன் 
மனிதனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழ்வதற்காக வாழ வைப்பதற்காக அனுப்பப் பட்ட சமூகம் " இந்த பதில் ஒரு முஸ்லிமின் வாழ்வு , மரணம் ,போராட்டம் தொடர்பான நியாயமான வடிவத்தை எடுத்துக் காட்டி நிற்க இன்றைய நிஜத்தில் நாம் எம்மைப் பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் .


                                                        சிரியாவின் இன்றைய போராட்டம் பற்றி முஸ்லீம் உம்மா தப்புக்கணக்கு போடக்கூடாது . ஒரு தேசியத்தையோ , குடியரசையோ பற்றிய கனவுகளோடு எமது போராட்டம் எடுத்துச் செல்லப் படவில்லை . அல்லது பசர் அல் அசாதை அகற்றி விட்டு மேற்கு சொல்வது போல் இன்னொரு ஜனநாயக சாயல் கொண்ட 
ஒரு முஸ்லீம் பெயர்தாங்கி எஜமானனை எம் தலைவராக்கும் இன்னொரு பெருந்தவறை செய்யும் போராட்டமும் அல்ல எமது போராட்டம் . 

                                                             நாங்கள் மேற்கொள்வது முழு மனித சமூகத்துக்குமான போராட்டம் வெறும் ஆட்சி மாற்றம் அல்ல நாம் எதிர்பார்ப்பது ஒரு தலை கீழான சித்தாந்த மாற்றம் . அது வஹியின் வழியில் அமைந்த இஸ்லாமிய கிலாபாவே எமது உறுதியான இலக்கு . அதன் மூலமாக மட்டுமே இன்று உலகில் நடக்கும் சகல அநீதிகளையும் அரசியல் இராஜ தந்திரப் பின்புலத்தோடு தட்டிக் கேட்க முடியும் . அந்த கேடயம் இல்லாமல் சுயநலமும் , தான்தோன்றித் தனமும் மிக்க தாகூதிய அதிகாரங்கள் எம்மை எங்கும் இஸ்லாத்தோடு வாழ விடாது . 

                                                         எனவேதான் அந்த மகத்தான பொறுப்பை இறைவன் எங்கள் கைகளில் தந்துள்ளதாக கருதி  பொறுப்பை சுமக்க உங்களையும் அழைக்கிறோம் . இந்த ரமலான் மாதத்தில் நீங்கள் எங்களுக்காகவும் ,உங்களுக்காகவும் சத்திய இஸ்லாத்தின் மீள் வருகைக்காக பிரார்த்தனையையும் ,ஆழமான கருத்துப் பரிமாற்றத்தையும் குறைந்த பட்சம் நீங்கள் மேட்கொள்ளுங்கள் . 

                                                          சகோதரா ! சத்திய இஸ்லாத்தின் மீள் வரவிற்காய் மரணங்கள் தேவையென்றால் அவை எம்மை ஆரத்தழுவி முத்தம்  இடட்டும்  ! வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில் கண்ணியத்தோடு வாழுவோம் .வீழ்ந்தால் ஷகீத் களாக தான் வீழ்வோம் . 
                                                         வஸ்ஸலாம் 
                                                                                                           இவண் 
                                                                               உங்களில் இருந்து உங்களுக்காக 
                                                                                       முஹம்மதின் (ஸல் ) படை 
                                                             
                                                           

 

No comments:

Post a Comment