
( டி. ஈ. லாரன்ஸ் அல்லது டி. ஈ. லாரன்சு (Thomas Edward Lawrence, ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். முதல் உலகப் போரில் உதுமானிய கிலாபாவுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக அறியப்படுகிறார்.