Friday, November 1, 2013

சவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கும் நாடா..? (ஒரு முக நூல் பதிவில் இருந்து )


     ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு “இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில்” நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல், பொருளில், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும். 

   அதன் ஆட்சியாளர் என்பவர் ஆட்சி புரிதல், ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அஹ்காமுஸ் ஷரீஆவை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் உம்மாவின் சார்பில் அதன் பிரதிநிதியாக செயலாற்றுவார். 

 இன்று எம்மில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியாவை முஸ்லிம்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும் நாடு எனும் தோரணையில் நோக்கும் மனப்பாங்கை கொண்டிருப்பதனை நாம் காணலாம். ஆனால் யதார்த்தத்தில் அங்கு நடைபெறுவது “குப்ருடை ஆட்சி” என்பதற்கு பின்வரும் காரணங்களை நாம் முன்வைக்க முடியும்.

1. இங்கு மனிதச் சட்டங்களை கொண்ட முறையும் பகுதியான ஷரீஆ சட்டங்களும் அமுல்படுத்தப்படுகிறது. (சவுதி அல்லாத பெண்களை திருமண முடித்தல் தொடர்பான சட்டங்கள், வரிகள் தொடர்பான சட்டங்கள், வர்த்தகம் தொடர்பான சட்டங்கள்)

2. சவூதி அரசினது பொருளியல் ஒழுங்கில் வட்டியின் தாக்கம் பெருமளவில் காணப்படுகிறது. 

-AMF இல் பெரிய பங்குதாரர், 3.2% வட்டியை பெறுகிறது.

-IMF இல் ஆறாவது மிகப்பெரிய பங்குதாரர். இவ்வட்டி நிறுவனத்தின் மூலமே முழு உலகினது பொருளியல் ஒழுங்கும் வட்டியடிப்படையில் நிறுவப்படுகிறது.

3. இது குப்பார்களது அணியான UN இல் நிரந்தர உருப்புரிமையை பெற்று அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிமகளையும் கறுவருப்பதில் முழுமையான ஒத்துளைப்பை வழங்குகிறது. 

4. UNESCO நிறுவப்படுவதில் மிகப்பெரிய அக்கறை எடுத்த நாடு. இதனை நிறுவுவதற்கு 4.6 மில்லியன் டொலரை கடனாக கொடுத்த நாடு. இவ்வமைப்பு நிறுவப்பட்டிருப்பதன் நோக்கம் “மேற்கத்தேய சிந்தனைகளை விதைப்பதுடன்” “இஸ்லாத்தை இல்லாதொழிப்பது” என்பதாகும்.

5. தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களை கட்டியாள்வதற்கென்றே நிறுவப்பட்ட Arab League ஐ ஸ்தாபிப்பதில் முன்னணி நாடு. இதன்மூலம் “தேசியவாம்” கட்டிக்காக்கப்படுகிறது.

No comments:

Post a Comment