Monday, November 18, 2013

ஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......


    சுஹதாக்களின் பூஞ்சோலையில் ஒரு நாணல் புல்லாக வேணும் ஒரு ஓரத்தில் நிலைத்திருக்கும் சராசரி ஆசை இல்லாதவனாக ஒரு உண்மை முஸ்லிமால் இருக்க முடியாது .அந்த வகையில் கந்தக வாசத்தை சுவாசித்து  அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வின்  எதிரிகளை சந்திக்கும் ஆதங்கம் என்னையும் முற்றாகவே தழுவிக் கொண்டது . 

    ஹஜ்ஜுக்குப் போகவேண்டும் ,உம்ராவுக்கு போகவேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் இரத்தத்தோடு கலந்தது . விழிப்பிலும் ,உறக்கத்திலும் சத்திய வசந்தம் வீறு கொண்டெழுந்த புனித பூமிகளான மக்காவையும் ,மதீனாவையும் வாழ்நாளில் ஒரு தடவை தரிசிக்க வேண்டும் என்ற பேரவா எல்லோரையும் போலவே எனக்குள் இல்லாமல் இல்லை . 

        அந்த புனித பூமிகள் கூட அசுத்தங்களின் இராணுவப் பாதணிகளை சகோதரப் படுகொலைகளுக்காக உள்வாங்கியதை நினைக்கும் போது அதை சுத்தப்படுத்தாமல்  அங்கு செல்வதில் ஒரு தெளிவான அருவருப்பை காண்கிறேன் . சிலுவை இராணுவத்தின் பொலிடிகல் டிப்லோமடிக் மிஷனில் முஸ்லீம்களாகிய எம் இரண்டு புனிதத் தளங்களும் வீழ்த்தப் பட்டிருக்க ! மூன்றாவதான பைத்துல் முகத்திஸ் யூத மிலிடரி பொலிடிக்சில் சிக்கித் தவிக்கிறது ! நாம் சிக்கன் புரியாணியோடும் பெப்ஸி போத்தலோடும் பெருநாள் கொண்டாடுகிறோம் !அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற தவறான நம்பிக்கையில் !

             
                  எல்லாவற்றிலும் சத்தியத்தின் ஆதாரங்களை ,அதன் அடிப்படைகளை தேடியபோது இன்றைய உலகின் போக்கில்  இலாபம் தேடி கடை போட முடியவில்லை . ஹலாலை மிதித்து நிற்கும் ஹராமிய வாழ்வுக்கு நிர்ப்பந்த பாலம் போடும் சமரச முயற்சி என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது . கபிடலிச இஸ்லாம் பேசி ஹராமான 'சிஸ்டத்தில் ' ஹலாலான ' பெனிபிட் ' திட்டங்கள் கடுமையாக வெறுப்பூட்டுகின்றன.

         இது என்ன பிழைப்பு !? வழிகாட்ட தூய வஹி சுமந்த நாம் அசத்தியத்தின் அடிகழுவி ! இன்னும் சிலபோது அதையும் இஸ்லாமாக காட்டி ! குப்ரிய நியாயங்களுக்காக முஸ்லிமை வெகுளி ஆக்கி ! கள்வர்களைப்போல் மார்க்கம் செய்யத் தூண்டும் சூழ்நிலைவாதம் எனக்குப் பிடிக்கவே இல்லை .

             "முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் தூதர் , அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கடுமையானவர்கள் . தமக்குள் மிக்க அன்புடையவர்கள் ..." என்ற வஹியின் வார்த்தைகளை தலைகீழாக பிரட்டி ' நிராகரிப்போடு அன்பாவர்கள் தமக்குள் அற்ப விடயங்களுக்காக கொடூரமாக பகைமை பாராட்டி பள்ளி கட்டி பிரிந்து போவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .
    

          ஒரு முஸ்லீம் கொல்லப்படும் போதும் ,கொடுமை செய்யப்படும் போதும் ,அச்சுறுத்தப் படும் போதும் இயக்க லேபிளை ஒட்டி ஒரு பார்வையும் , சலபியா ,கலபியா என களத்தை பிரித்து சகோதரத்துவத்தை பச்சையாக  கூறு போட்டு தின்னும் மார்க்க வேடர்கள் மத்தியில் வாழ்வதை நினைக்கும் போது வாந்தி வருகிறது .   

      கபுரில் இருப்பவர்களையும் வெறியோடு தோண்டியெடுத்து காபிர் பத்துவா கொடுக்க நினைக்கும் இயக்க வாதத்தை சொல்ல வார்த்தையில்லை . வாதம் ,விவாதம் ,இறுதியில் விதண்டா வாதம் என்ற உள்வீட்டு யுத்தத்தில் முஸ்லிமையும்  எதிரியாக பார்த்து குப்ர் மிசைல் அடிக்கும் தவ்வா சிஸ்டத்தை அடியோடு அழிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக உசூல் விடயங்களை வைத்து வழிகேட்டு ஓடர் போட்டு வார்த்தை ஆம்புஸ் அடிக்கும் அரைகுறைகள் மீது எனக்கு அடங்காத வெறுப்பு .


        மஸ்ஜிதில் அத்தகியாத்தில் விரலாட்டி சைத்தானுக்கு இரும்புச் சாட்டையால் அடிப்பதில்  இருக்கும் ஆனந்தம் பள்ளியை விட்டு வெளியே வந்தால்  ஆதிக்கப்படுத்தி இருக்கும் தாகூத்திய அகீதா ,அதன் வழிமுறை ,அதன் சட்டங்களை தட்டிக் கேட்க வழியில்லா விட்டால் அதென்னடா 'தவ்ஹீத் ' !? அதென்னடா இஸ்லாம் !? எனக்குப் புரியவில்லை . 


       அமெரிக்க அநீதிகளுக்கு முஸ்லீம் நிலத்தில் இடம்கொடுத்து முஸ்லிமைக் கொல்வதை நியாயப்படுத்தும் அதிகாரங்களின் கீழ் இருந்து கொண்டு தமது பத்துவாக்களால் அல்லாஹ்வின் எதிரிகளை பலப்படுத்தும் சலபிசம் எந்த சஹாபி கற்றுத்தந்தது !? இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் . 


       மொடல் இஸ்லாமியம் என்ற மாயைக்குள் மாட்டுப்பட்டு சத்தியத்தை 
I .M .F இடம் அடகு வைத்து அந்த வட்டிப்பணத்தில் முஸ்லீம் 'டிவலப் மன்ட் ' பற்றிப் பேசும் அதிகாரம் பற்றிய பாடம் ரசூல் (ஸல் ) அவர்களின் சீறாவில் எந்தப்பகுதியில் உள்ளது!? அந்த கிதாபை தேடி ஏறாத புத்தகக் கடையில்லை ! இப்படி தப்பும் தவறுமாக இகாமதுத் தீனின் பெயரில்   மார்க்கம் சீரழிக்கப்படும் பாட்டை நான் என்னவென்று சொல்வேன் !!!


         

         

No comments:

Post a Comment