Saturday, November 16, 2013

சிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad !!

     சிரியாவில் நடக்கும் தாக்குல்கள் பற்றி நாம் நிறையவே அறிந்துள்ளோம். பொதுமக்கள் மீது அரச இராணுவம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாயங்களிற்கு பொதுவாக நாம் குற்றம் சாட்டுவது பஸர் அல்-அஸாத்தினை. மேற்கின் ஊடகங்கள் அவரை ஒரு கொலை வெறியனாக சித்தரித்து வந்தன. உண்மையில் சிரிய அரசாங்கத்தில் அதன் அதிபரையும் பார்க்க பலமிக்க ஒரு நபர் தான் இந்த வன்முறைகளிற்கு எல்லாம் பிரதான காரணம். அவர் பெயர் மாஹிர் அல்-அஸாத். சிரிய அதிபரின் சகோதரர். டமஸ்கஸ் மாகாணம் இவரது பொருப்பிலேயே இருந்து வருகிறது. 


       சிரிய அதிபரின் இன்னொரு சகோதரர் பஸல் அல் அஸாத். இவர் ஒரு இராணுவ கேர்ணல். சிரிய இராணுவத்தை அதிபர் சார்பாக கட்டுக்குள் வைத்திருந்தவர்.  கார் விபத்தில் இறந்தவுடன் 1994-ல் இவரது சகோதரரான மாஹிர் அல்-அஸாத் இராணுத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். பிரிகேடியர் ஜெனரல் எனும் சிரிய இராணுவத்தின் அதியுயர் பதவியையும் இவர் வகித்து வருகிறார். இவரை சிரியாவின் இரும்பு மனிதர் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு அந்த தேசத்தை தனது சப்பாத்துகளின் கீழ் வைத்து ஆட்டும் வல்லமை படைத்தவர். 




     சிரிய இராணுவ பலமென்பது 220,000 வீரர்களை கொண்டதாகும். சிரியன் ரிபப்ளிகன் கார்ட்ஸ் எனப்படும் சிரிய குடியரசு காவற் படையின் தலைமை தளபதியிவர். சுமார் 15000 சிறப்பு பயிற்ச்சி பெற்ற படையினர் இதில் உள்ளனர். இவர்கள் இவர் இடும் உத்தரவுகளை கண்மூடி செய்யும் அளவிற்கு பழக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் நடைபெற்ற அரசியல் கொலைகள் முதல் அதன் மாகாணங்களில் உள்நாட்டு சண்டைகளின் போது இராணுவம் செய்யும் படுகொலைகள் வரை இவரது உத்தரவின் பேரிலேயே நடைபெறுகின்றன. பஸர் அல்-அஸாத் போராளிகளுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் செல்ல முடியாத அளவிற்கு அவரிற்கு இராணுவ நெருக்கடிகளை கொடுத்து வருகிறார் மாஹிர் அல்-அஸாத். 


       லெபனானிய பிரதமர் ரபீக் அல் ஹரீரியின் கொலை முதல் இஸ்லாமிய போராளிகளை வேட்டையாடும் ஒப்பரேஷன்கள் வரை இவரது கண்காணிப்பு, திட்டமிடல்களின் கீழேயே நடைபெறுகின்றன.  Saidnaya சிறையுடைப்பின் போது கைதிகளால் இராணுவ வீரர்கள் பணயமாக வைக்கப்பட்டனர். இது நிகழ்ந்தது 2008-ல். பின் சிப்பாய்கள் மீட்கப்பட்டனர். கைதிகள் மிக குரூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொலைகளை மாஹிர் அல்-அஸாத் நேரடியாக கண்டு களித்தமை தொடர்பான வீடியோ பூட்டேஜ்களை மனித உரிமை அமைப்புக்கள் வெளியிட்டிருந்தன. 


    2012-ல் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் இவர் மரணித்ததாக சிரிய எதிர்க்கட்சிகள் கூறியிருந்த போதும் இவர் மரணிக்கவில்லை உடனடியாக ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர அதி விஷேட சிகிச்சைகளிற்கு உற்படுத்தப்பட்டார். ஆனால் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. ஒரு கை தனது இயல்பான இயக்கத்தை இழந்தது.  


    சிரியாவின் இராணுவ தலைமைகள் இன்னும் இவரின் வழிநடாத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தான் இயங்குகின்றன என அண்மையில் சிரிய இராணுவத்தின் குடியரசு காவற் படையில் இருந்து தப்பித்து வந்து போராளிகளுடன் இணைந்து கொண்ட லெப்டினன்ட் கேர்ணல் ஷஹீட் அல் வபா தெரிவித்திருந்தார். ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் பக்கபலமாக, வலது கையாக ஒரு கொடிய ஜெனரல் உடன் இருப்பது வரலாறு. அந்த வகையில் சிரியாவின் இரத்த காட்டேறி அதன் அதிபரின் சகோதரர் மாஹில் அல் அஸாத் எனலாம்.

No comments:

Post a Comment