
இவர்கள் இலுமினாட்டிகளா !? என
தூதர் (ஸல் ) சமூகத்தை யூதர் சமூகத்தோடு சேர்த்து
போஸ்டர் ஒட்டிப்போனது ஒரு கூட்டம் !?
இவர்களா ஏகத்துவ வாதிகள்?என
பதில் போஸ்டர் மறுநாள் பல் இளிக்க !
இந்த வாடிக்கையான வேடிக்கை 'பேப்பர்களை
மாடொன்று சுவைத்துப் போனது !
வழிகேட்டு PRODUCTION செய்யும்
பத்துவாக் கம்பனிகள் கப்ரில் இருப்பவனுக்கும்
'காபிர் பத்துவா'அவார்ட் இலவசமாக கொடுத்து
நரகப் பிரமோசன் என நாக்கூசாமல் பேசும் !
சமூகத்தை பிரித்து சந்திக்கொரு மஸ்ஜித் கட்டி
சதை தின்னும் சபைகளாக தினமும்
அல்லாஹ்வின் வீட்டை மாற்ற
நாம் மொழிந்த சஹாதத் கலிமாவும் கண்ணீர் வடிக்கும் !
இயக்கப் பைத்தியம் பிடித்த இந்த
கிறுக்கு வைத்தியர்கள் முன் நோயுற்ற எம் உம்மத்
சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது என்ற
வேஸ்டான TREATMENT இல் அடிக்கடி குழம்பிப் போகும் !
சிலுவை நிழலில் பைத்துல் முகத்திஸ் பறிபோகும்
இறுதி நிலையில் காக்கை இறைச்சி 'ஹலாலா ஹராமா !? என
உசூல் பேசிய உருப்படாத கூட்டத்தின் NEW VERSION கள்
நிம்மதியை கெடுக்கின்றன !
கழுத்தில் வைக்கப்பட்டுள்ள குப்ரியக் கத்தியை
தம் வாய்களால் சானை பிடித்து விடும்
அதி மேதாவிகள் முன்
உம்மத் தினமும் திண்டாடும் !
No comments:
Post a Comment