Friday, November 15, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)

(பிரித்தானியர்கள் நேரடிகாலனித்துவம் செய்த போது இலங்கையர்கள் நடாத்தப்பட்ட விதம் இது! 

ஆனால், இன்று மேற்கத்தேய வாழ்க்கைமுறை மற்றும் அவர்களது நீதி, நிருவாகம், சட்டம், பொருளியல் ஒழுங்கு என்பவதற்றால் மறைமுகமாக இலங்கையர்களது இரத்தம் உறிஞ்சப்படுவதுடன் பல்வேறுவகையான சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளை முகம்கொடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இலங்கை மக்கள் உள்ளனர்.)

 இன்று இலங்கையில் கோலாகலமாக பொதுநலவாய அரச தலைவர்களது மகாநாடு நடைபெறுகிறது.

  பொதுநலவாய நாடுகள் என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். 

 இந்நாடுகள் இணைந்து 1949 இல் இவ்வமைப்பை ஸ்தாபித்தது. ஆரம்பத்தில் 8 நாடுகள் அங்கத்துவம் பெற்ற இவ்வமைப்பானது இன்று 53 நாடுகளின் உறுப்புரிமையைக் கொண்டதாக காணப்படுகிறது. 

இவ்வமைப்பினது முக்கிய குறிக்கோள்கள்
1. ஜனநாயகத்தை வலுவூட்டல்
2. மனித உரிமையை பாதுகாத்தல்
3. நல்லாட்சியை ஏற்படுத்தல்
4. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்
5. தனிமனித உரிமைகளைப் பாதுகாத்தல்
6. தாராள வர்த்தகத்தை நாடாத்துதல்
7. உலக சமாதானத்தை நிலைநிறுத்த துணைபுரிதல்

 இலங்கையில் இம்மகாநாடு நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் சில அடிப்படையான சிந்தனைத் தெளிவைப் பெறவேண்டியுள்ளது.

 முதலில் பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமித்ததால் இலங்கைக்கு எத்தகைய நன்மைகளை வழங்கியுள்ளார்கள் என்பதனை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

 மனிதவலுவைப் பெறுவதுடன் அவர்களுக்குத் தேவையான உற்பத்திகளை மேற்கொள்ளவும் அவர்களது சந்தைகளாக அவர்கள் காலனித்துவம் செய்த நாடுகளை பயன்படுத்தவும் தேவையான அத்தனை அரசியல், பொருளியல் மற்றும் சமூக முன்னெடுப்புகளைச் செய்த சுரண்டல் பேர்வழிகள் என்பதனை நாம் உணரகடமைப்பட்டுள்ளோம்.

  இன்று அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மனிதன் சட்டத்தை ஆக்கும் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறையுள்ளது. இதன் மூலம் முழு இலங்கை மக்களுக்குமான நலன்கள் காக்ககப்படத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுகிறதா என்பது பற்றி சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம்.

 இன்று மேற்கினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதலாளித்துவ சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள மதஒதுக்கல் சிந்தனையின் அடிப்படையிலான தாராண்மைவாதச் சிந்தனை இலங்கை சமூகத்தில் விதைக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் இலங்கை மக்களது வாழ்க்கை முறையில் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளையும் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருப்பதனை யாவரும் அறிந்திருக்கிறோம்.

  இலங்கையில் புத்த தர்மத்தை காக்கவேண்டும் எனும் கோசங்கள் வலுப்பெற்றிருக்கும் நிலையில், குடியில் (Alcohol Consumption) 4 வது இடத்தில் உள்ள ஒரு தேசமாக உள்ளது.

 அதேவேளை இலங்கையில் குற்றச்செயல்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்த வழியின்றி இஸ்லாமிய சரீசட்டங்களை நடைமுறைப்படுத்தினால்தான் கட்டுப்படுத்த முடியும் எனும் கருத்துக்கள் பல்வேறு அரச அமைச்சர்களால் முன்வைக்கப்படும் இத்தருணத்தில் இலங்கை மேலும் “கசீனோவை “ சட்டமாக்கி சூதாட்டத்தையும் மதுவையும் விபச்சாரத்தையும் ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள எத்தனிப்பதனை நாம் காணக்கூடியதாக உள்ளது.

   இன்று மேற்கினது வாழ்வொழுங்கை தங்கள் “வாழ்க்கை மொடலாக” மாற்றி வாழ நினைக்கும் எத்தனையோ இளைஞர் யுவதிகள் பல்வேறு கலாச்சார சீரழிவுகளில் அகப்பட்டு தமது வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் இழிநிலையை நாம் காணக்கூடியதாக உள்ளது. 

  தினமும் 4-5 சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிலைமைகுறித்து மகளிர் விவகார மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சு அதிதிருப்தியடைந்துள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவயதில் கற்பமுறல், கருக்கலைப்பு என்று ஏகப்பட்ட சமூகப்பிரச்சினைகளுக்கு இன்றைய மேற்கினது வாழ்வியல் ஒழுங்கு வித்திட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைகள் என்பதனை இச்சந்தர்பத்தில் இலங்கையர்களாகிய நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

   இன்று மேற்கினது அரசியல், பொருளியல் மற்றும் சமூக ஒழுங்கினால் பாதிப்புற்று நிம்மதி இழந்துள்ள மேற்கத்தேய மக்கள் “இஸ்லாமிய வாழ்க்கை முறையை நோக்கி” சாரிசாரியாக படையெடுக்கும் இத்தருணத்தில் இலங்கை மக்கள் மேற்கினது வாழ்க்கைமுறையினது கவர்ச்சியில் மூழ்க நினைக்கும் துர்பாக்கிய நிலை குறித்து இலங்கை முஸ்லிம்கள் அக்கறை எடுக்கவேண்டும். 

  எமது சக பௌத்த பெருமக்களுக்கு இஸ்லாத்தை “ஒரு அழகிய வாழ்க்கைச் சித்தாந்தமாக, வாழ்வியலாக முன்வைத்து” உலகில் நீதி நிலைபெறவும், மனிதஉரிமைகள் பேணப்படவும் ஒரே வழி இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் மேலோங்கினால் மாத்திரமே சாத்தியம் எனும் சிந்தனையை விதைக்கக் கடமைப்பட்டுளோம்.

No comments:

Post a Comment