Friday, November 8, 2013

ஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவம்!

   
   ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தாவிட்டால் NATO படைக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வழியை தடைசெய்வோம் ! தெஹ்ரீக் இ இன்ஸாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் .அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாதம் இருபதாம் திகதிவரை காலக்கெடு விதித்துள்ள இவர் இதுபற்றி BBC செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிப்பதாவது, இந்த விடயத்தை அமெரிக்கா அலட்சியம் செய்யும் நிலையில் கைபர் கணவாய் வழியாக (முஹம்மது பின் காசிம் சிந்துவை வெற்றிகொள்ள அப்‌பாசிய கலீஃபாவின் கட்டளையின் பெயரில் வந்த அதே பாதையா !!) ஆப்கானுக்கு NATO  படைகளுக்கு உதவிகள் கொண்டு செல்லும் பாதையை மறித்து ஒரு போராட்டத்தை மேட் கொள்ளப் போவதாக சூளுரைத்துள்ளார்.
  

        பாகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாடாக இருந்தாலும் தேசியம் , நவகாலனித்துவம் என்ற கொடிய குஃப்ரிய சித்தாந்த சிந்தனை அரசியலை அதிகாரமாகக் கொண்டது. இத்தகு தாகூதிய அரசியலுக்கு விலைபோன கட்சி அரசியலையும் கொண்டதே பாகிஸ்தான் ஆகும். இந்த இம்ரான் கான் 1980 களில் சிறந்த கிரிக்கெட் ஆள் ரவுண்டர். இவரது பந்துவீச்சில் பல 'ஜோக்கர்களால்' எதிரணியின் பல விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஆனால் பொலிடிகளில் இவரது 'ஜோக்கர்' பந்துகள் எதிரிக்கு சிரிப்பை ஏட்படுத்துவதோடு முஸ்லீம் உம்மத்தின் தனித்துவத்தை ஏளனிப்பதுமாகும்!
      
                 இவரது கிரிக்கெட் பாஷையிலேயே இதட்கு பதில் சொல்வதானால் இப்படி சொல்லலாம். மைதானமும் கொடுத்து லாவகாமாக பந்தும் வீசுவோம்! எமது பவுண்டரி எல்லைக்குள் நீ அடிக்கக் கூடாது ஆனால் எல்லைக்கு அப்பால் 'ஸிக்ஸர்' அடிப்பது பற்றி கவலை இல்லை அப்படியா!? நீ போட்ட இடத்தில் தான் எம் ஃபீல்டர் களும் இருப்பார்கள்! ரொம்ப நன்றாக இருக்கிறது . இதை இப்படி சொல்லலாம் 'பாகிஸ்தான் உம்மா உம்மா!? ஆப்கான் உம்மா வெறும் சும்மா !?  

                அத்தோடு இன்னொரு விசேட செய்தியாக ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் தொழில் நுட்பத்தை பாகிஸ்தான் இராணுவம் வடிவமைத்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பக்வல்பூர் என்ற இடத்தில் அதை பரீட்சித்தும் பார்த்துள்ளது. இருந்தும் பாகிஸ்தான் இராணுவம் என்பது ரஷ்யாவின் கிளாஸ் நீக்கோ ரைபிள் சுமந்த அமெரிக்க M16 ரைஃபில் தர சிந்தனை வாய்ந்தது. அதன் தர நிர்ணயம் வளர்ச்சி என்பது பாகிஸ்தானின் கைகளில் இல்லை. அந்த வகையில் நடப்பது தெளிவாகவே ஒரு கண்துடைப்பு அரசியலே. 



No comments:

Post a Comment