Wednesday, November 20, 2013

ஓநாய்களின் பாசறை ! (பகுதி 02)


         தமது  இனமே உலகில் சிறந்த இனம் என்ற அடங்காப் பிடாறித் தனத்தில் அடுத்த மனிதர்கள் மீது இழிவான பார்வை யூதர்களுக்கு இரத்தத்தில் ஊறியது . தான்தோன்றித் தனம் இவர்களுக்கு இயல்பானது . இறை கோபத்துக்கு உள்ளானவர்கள் என இறைவனே தூற்றும் அளவுக்கு வரம்பு மீறினார்கள் . இறை கட்டளைகளை 'டெக்னிக்காக ' மீறுவதில் இவர்களை அடிக்க ஆளில்லை ! 


         வட்டி கலந்த பொருளாதார உலகத்தை நிறுவனமயப்படுத்தி அறிமுகப்படுத்தியது இந்த யூதர்களே ! இலஞ்சம், ஊழல் என்பவற்றை அடித்தளமாக இட்டாவது தமது இருப்பை தக்கவைப்பது இவர்களின் சராசரி நடவடிக்கையாகும் . ஹிட்லரின் வதை முகாம்களில் இவர்கள் தேடி அடைக்கப்பட்ட போது கூட அந்த வதைமுகாம்களில் எது ஓரளவு சிறந்தது என தேடியறிந்து அதற்குள் செல்வதற்கு இவர்கள் நாசி அதிகாரிகளுக்கும் ,சிப்பாய்களுக்கும் இலஞ்சம் கொடுத்துள்ளார்கலாம் !


          தமக்கென ஒரு ஆதிக்க தேசமற்று வாழ்கிறோம் என்ற கவலை கொண்டவர்களாகவே இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உருவாக முன் இவர்களது மனோபாவம் இருந்து வந்துள்ளது . தியோடர் ஹெர்சல் தலைமையில் அதற்காக இவர்கள் ஒன்றுகூடியபோது இவர்கள் பாலஸ்தீனை இலக்காக கொண்டே சிந்தித்தார்கள் என்பதே அநேகமான வரலாற்றுப் பதிவுகளின் முடிவாகும் . 


           அதற்கான பூர்வீக வரலாற்று நியாயங்கள் சரியாகவோ ,பிழையாகவோ இருந்தாலும் இன்னும் சில நிலப்பகுதிகள் கூட இவர்களால் சிந்திக்கப்பட்டும் ,இறுதி முடிவாக பாலஸ்தீன் முஸ்லீம் நிலத்தில் இரத்தச் சகதி கலந்த பல்லாங்குழி ஆடித்தானும் அந்த இலக்கை அடைய முடிவெடுத்தார்கள் .ஆனாலும் கிலாபா அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாக பாலஸ்தீன் இருந்தது ஒரு வகை தர்ம சங்கடத்தை இவர்களுக்கு அளித்தது  . 

          ஆனாலும்  இவர்களது ஆத்மார்த்த கனவை நனவாக்கும் சூழ்ச்சிப் புத்தகங்கள் திறக்கப் படுகின்றன . உள்ளார்ந்த பலவீனங்களால் சரிவு நிலை நோக்கி சென்றுகொண்டிருந்த உதுமானிய கிலாபாவை நோக்கி தமது  பொறியோடு  யூதக்குழு செல்கிறது ; இலக்கு பாலஸ்தீன் . உதுமானிய கிலாபாவின் கலீபா  இருக்கிறார் . பேரம்பேசல் தொடங்கியது . பொன்னும் பொருளும் கட்டினார்கள் என்றே அநேக வரலாறுகள் சொல்லும் .ஆனால் அதைவிட அதிர்ச்சியான விலைபேசல் ஒன்று அன்று நடைபெற்றது .

          " உதுமானிய சாம்ராஜ்யத்தின் கடற்படை (NAVY ) மிகுந்த பலவீனமாக உள்ளது அது மீள் கட்டமைக்கப்படவும் பலமாக்கப் படவும் எமது முழுச் செலவோடு புனரமைத்து தருகிறோம் "என துல்லியமாக கணிக்கப்பட்ட பலவீனத்தை குறிவைத்தார்கள் யூதர்கள் !அன்று 'ரோயல் நேவி ' எனப்படும் பிரித்தானிய கடற்படையே அன்று வலிமை மிக்கதாக இருந்தது . அத்தோடு கடற் சமரிலும் ,கடல் ஆதிக்கத்திலும் இருக்கக் கூடிய இராணுவ வலிமையே மிக்க அவசியமாகவும் இருந்தது . அந்த வகையில் ஆதிக்க வலிமை எனும் தூண்டில் பாலஸ்தீனை பிடிக்க போடப்பட்டது .

                                  
                                                            (இன்ஷா அல்லாஹ் தொடரும் ....)

No comments:

Post a Comment