Saturday, November 23, 2013

ஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான மீள்பார்வை தேவை .

(  இன்றைய குப்ரிய சித்தாந்த அரசியல் மூலம் தீர்வு பற்றி பேசும் சில இஸ்லாமிய வாதிகள் முஸ்லீம் உம்மத்தை ஒரு பயங்கரமான திசையை நோக்கியே இட்டுச் செல்கிறார்கள் .அதன் புரிதலுக்காக சில முன்னைய பதிவுகளின் தொகுப்பு )

 தீமையில் இருந்து  நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் முஸ்லீம் உம்மத்தின் முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .



சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற கருத்தையே வலுப்படுத்துகின்றது . 


அறிவியலையோ ,தொழில் நுட்பத்தையோ முஸ்லீம் உம்மா வெளியில் இருந்து பெறவேண்டாம் என நான் கூறவில்லை அவை பொதுவானவை .அனால் குப்ரின் சித்தாந்தத்தை சரிகாணும் அந்த  நாகரீகத்தை தழுவச் சொல்லும் அரசியலையும் அதன் வழிமுறைகளையும் முஸ்லீம் உம்மா எந்தக் காரணம் கொண்டும் சரிகானவே கூடாது .


அவ்வாறு செய்தால் நடக்கப் போவது இப்போது அதிகார நிலையில் மிகைத்திருக்கும் எதிரி அவனது நாகரீகத்தை எம்மீது திணிக்கும் முகமாக அதன்  தவறுகளையும்  சரிகாண பணிப்பான் . இப்போது சரணடைவென்பது காலத்தின் தேவையாக உணரப்படும் .எஞ்சியதை வைத்து எதோ வாழ்ந்து விட்டுப்போதல் எனும் தோல்வி அரசியலின் கைதிகளாக நாம் வாழ தலைப்பட்டு விடுவோம் .


மேற்கு இவ்வாறான ஒரு அரசியலை முஸ்லீம் உம்மத்தின் மீது சர்வதேச அளவில் திணிக்கவே முயல்கின்றது  .அதை முஸ்லீம் உம்மா ஏற்றுக்கொண்டால், (இந்த வெற்றி எனும் தோல்வியோடு )'டெல் அவிவ் ' வரை ஒரு முஸ்லீம் பயணிக்கலாம் . 'வைட் ஹவுஸ்' செங்கம்பளத்தில் கூட்டுத் தொழுகை கூட முஸ்லீம்கள் நடத்தலாம் . யஹூதியும் , நசாராவும் பாதுகாப்பு வேறு கொடுப்பார்கள் . ஆனால் நாம்  ஒரு கௌரவ  அடிமையாக எமது சில மத அடையாளங்களோடு வாழ்ந்து விட்டு போகலாம் அவ்வளவுதான் .

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் ! மீள என்ன வழி ?


           
                           ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .

                            இவ்வாறே ஒவ்வொரு தேசியமும் தனக்குள் பெரும்பான்மை எனும் ஜனநாயக நியாயத்தில் கரைந்து போகும் போது இனவாதம் ,மதவாதம் என்ற உருவமெடுத்து  பேரினவாதம் என்ற பார்வையில் சிறுபான்மை அடக்குமுறை அரசியலாக்கப் படுகின்றது . இப்போது அது தவிர்க்க முடியாமல் எஜமான் அடிமை என்ற கீழ்த்தரமான தேசிய  அரசியலாகின்றது .

                                                        இந்த சாபக்கேடான பார்வைகளுக்குப் பின்னால்  
அவைகளை இயக்கும் தரத்தில் அமர்ந்திருப்பது முதலாளித்துவம் தான் என்பதை மறுப்பவர்கள் முடிந்தால் தங்கள் நியாயங்களை சொல்லட்டும் .
சுயநலம் , தான்தோன்றித்தனம் என்பவற்றை தவிர அதிகாரங்களோ அரசியலோ இன்று ஆதிக்கத்தில் இல்லை .

                                                     U .N இன் வீட்டோ அதிகாரம் முதல் , N A T O வின் சர்வாதிகாரம் வரை சர்வதேச சட்டங்களும் ,அமைப்புகளும் சுயநலத்தில் அல்லாமல் இயங்கவில்லை என்பதை நியாயப்படுத்த தைரியமுள்ள ஒருவரை வரச் சொல்லுங்கள் . 

                                                     மதச் சார்பின்மை என்ற மதத்தின் கீழ் ஆளப்படுவதே நியாயம் எனக் கூறிவிட்டு ஆடு புலி ஆட்டமாக சிறுபான்மையை ஜனநாயக முற்றுகையில் வெட்டுக்காய் ஆக்கி சந்தர்ப்ப வாத அரசியலில் குளிர் காயும்  இந்தியா , இலங்கை போதுமே முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்க .

                                                     அமெரிக்கா ஈராக்கிலோ , ஆப்கானிலோ புகுந்த அரசியலுக்கும் , பாலஸ்தீன விவகாரத்தின் சர்வதேச அதிகார சக்திகளின் பார்வை , பிரான்ஸ் மாலி மீது ஆக்கிரமித்த அரசியலுக்கும் , அல்லது இந்தியா இலங்கையில் அமைதி காப்பு போர்வையில் அனுப்பிய I .P .K .F இராணுவத்திற்கும் , சோமாலியாவின் வறுமைக்கு நிவாரணம் கொடுத்தேன் பேர்வழி என்ற போர்வையில் நுழைந்து நிர்வாணமாக அடிவாங்கி வெளியேறிய U .S மரின்களுக்கும் இடையில் ஒரு பொதுத் தொடர்பு உண்டு .

        அல்லது தனது அரசியல் இலாபத்துக்காக U .S மரின்கலுக்கு எதிராக மக்களை திருப்பிய யுத்தப் பிரபு ஜெனரல் பரா ஐடிட்டுக்கும் , பர்மிய கோரப் படுகொலைகளுக்கும் , அதை எச்சரிக்கிறேன் பேர்வழி என ஏறத்தாள எல்லாம் முடிந்த பின் தலைமைத்துவ முகம் காட்ட பர்மா வந்த துருக்கியதூதுவர்கள் போன்ற சம்பவங்களின் பொதுவான  இடைத்தொடர்பு சமூக நலன் என்பதைவிட சாக்கடை முதலாளித்துவ அரசியல் தான் . 

                                செர்பிய இராணுவ முகாம்களில் பொஸ்னிய முஸ்லீம் பெண்கள் கிறிஸ்தவ சிப்பாய்களின் கருக்கொள்ளப்படும் வரையான காம  வெறியாட்டத்தின் முன் சிதைக்கப் பட்டபோது , ஈராக்கின் முஸ்லீம் பெண்கள் மீதான அமெரிக்க இராணுவ வெறியாட்டம் வெளித்தெரிந்த போதோ அடங்கி இருந்த மனித உரிமை ,பெண்ணுரிமை அமைப்புகள் ஆப்கானில் ஒரு பெண்ணின் கழுத்தை சிராய்த்து சென்ற ஒரு தோட்டாவுக்குப் பின் துள்ளி எழுந்த பிரச்சார அரசியலும் இந்த முதலாளித்துவ சுயநலப் பார்வையின் வடிவமே .

                                       ஓ மனித சமூகமே ! நீ நீதியை தேடினால் நியாயத்தை தேடினால் உனது மௌனத்தை உடைத்து சரியானதை புரிந்து கொள்ள முயற்சி செய் . உலகின் சம்பவங்களை கோர்த்துப்பார் ஒரு உண்மை உனக்குப் புரியும் அது இந்த சர்வதேச அநியாயக் காரர்கள் ஒட்டுமொத்தமாக பயங்கர வாதமாக விரல் நீட்டிக்காட்டுவது இஸ்லாத்தின் மீதே ஆகும் . அநியாயம் அதைப் பார்த்து அஞ்சுகிறது என்றால் நியாயம் அதன் பக்கம் தான் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேறு வார்த்தை தேவையில்லை .
                           
பாராளுமன்றம் ஒரு உதாரணத்தோடு !


              1961 இல்  இந்த சம்பவம்  பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN  PROFUMO ' . அவரின் கேவலமான    நடத்தைக்கு    உதாரணமான      சம்பவமே கீழே வருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .



                                         இந்த அமைச்சருக்கும் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற மொடல் அழகிக்கும் இடையில் தவறான பாலியல் தொடர்பு இருந்தது . இந்த கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்தது . கோபத்தோடு  
அந்த பாராளுமன்றம் சம்பவத்தை பற்றி கடுமையாக விசாரிக்கத்  தொடங்கியது . (சில நேரம் தங்களுக்கு அந்த காம சுகம்  கிடைக்க வில்லையே ! என்ற கவலையாக கூட இருக்கலாம் .) காரணம் இது தான் .

                                     அவர்கள் கோபப்பட்ட காரணம் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற அந்தப் பெண் ஒரு ரஷ்ய உளவாளி .ஒரு ரஷ்ய கடற்படை அதிகாரியுடனும் அவளுக்கு 'செக்ஸ்' உறவு இருந்தது,பிரித்தானிய இராணுவ இரகசியங்களை  அவளது உடலைக் காட்டி இந்த அமைச்சரிடம் இருந்து வாங்கி , அந்த கடற்படை அதிகாரி மூலம் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது .

                          அந்த அமைச்சர் தான் தப்பிக்கொள்ள பல பொய்களை கூறினார் . ஆனால் சம்பவங்கள் யாவும் ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டது .பிரித்தானிய பாராளுமன்றம் என்றால் இன்றைய சர்வதேச ஜனநாயக  வடிவத்தின் தந்தை என்று கூட கூறலாம் . இந்த சம்பவம் தொடர்பில் கொடுத்த தீர்ப்பு என்ன ?அது இதுதான் .



                          " குறித்த சம்பவத்தில் அமைச்சர் 'JOHN  PROFUMO' 'கிரிஸ்டைன் கீலர் ' உடன் 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டது தவறில்லை . அது அவரது தனிப்பட்ட விடயம் . அத்தோடு அது எமது பண்பாட்டு எல்லைகளுக்கும் உட்பட்டது ! ஆனால் இராணுவ இரகசியங்கள் வெளியிடப் பட்டது தான் தவறானது !எனவே அதற்காக அவர் தண்டிக்கப் பட வேண்டும் "



  # இங்கு அந்த அமைச்சரின் தவறான 'செக்ஸ்' உறவு அவர்களின் பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதாம் !

 # தவறு கண்டு பிடிக்கப் பட்டும் தன்னை நிரூபிக்க அமைச்சர்  'JOHN  PROFUMO'  பொய் சொன்னது கூட தவறில்லையாம் !! 

 # உலகத்திற்கே ஒளி கொடுத்த ஐரோப்பா என சொல்லப்பட்டாலும் , பெண் தொடர்பில் தனது வரலாற்று மனப் பாங்கை மாற்றிக் கொள்ளவில்லை !!!

     இப்படி இங்கே கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . ஆனால் இந்த உதாரண சம்பவத்தோடு ஒத்துப் போகக் கூடிய பல சம்பவங்கள் . இன்னும் பல நாடுகளிலும் நடந்துள்ளன . எல்லா பாராளு மன்றங்களும் இத்தகு துப்புக்கெட்ட தனத்தோடுதான் இருக்கின்றன . இப்படிப் பட்டவர்கள் தான் மனிதனுக்காக சட்டம் இயற்றப் போகிறார்களாம் !!! இவர்களின் மூலம் தான் பெண்கள் மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறதாம் !!! ,மனித சமூகத்துக்கு தீர்வு கிடைக்குமாம் !இதை  'குரங்கு கையில் பூமாலை ' என்று நாம் சுருக்கமாக  கூறலாம் .

No comments:

Post a Comment