Friday, November 8, 2013

டமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad Jamlizadeh படுகொலை - சிரிய சண்டைகளின் ஈரானிய தளபதி என்ன செய்கிறார்? !!




       ஈரானிய குடியரசுகாவற் படையின் கட்டளையதிகாரி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். Commander Mohammad Jamlizadeh ஈரானியIslamic Revolutionary Gurard Corps (IRGC)-ன் முக்கிய தளபதிகளில் ஒருவராவார். ஈரான் ஈராக் யுத்தம் முதல் இவர் ஈரானிய இராணுவத்தில் பங்காற்றியவர். தென்கிழக்கு கேர்மன் மாகாணத்தை சார்ந்தவர். அவரது இறுதி ஊர்வலமும் இங்கேயே நடைபெற்றுள்ளது. சிரியாவில் வைத்து இஸ்லாமிய போராளிகளினால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். ஷெய்யிதா ஷெய்னப் பள்ளிவாசலினை பாதுகாக்கும் படையணிக்கு இவர் தலைமை வகித்திருந்தார். ஈரானிய அரசு இவர் இராணுவ தரப்பில் அங்கு கடமையாற்றவில்லை என்றும் தொண்டர் சேவையின் அடிப்படையிலேயே புனித ஸரீனை பாதுகாக்கும் பொருட்டு சிரியா சென்றிருந்தார் என்றும் தெரிவித்துள்ளது. 



   ஷியாக்களின் பார்வையில் முஹம்மத் நபியவர்களது பேரனான இமாம் ஹுஸைன் அவர்களின் மகளான ஸைனப் என்பவரது கல்லறையுள்ள அந்த இடத்தை புனிதத்துவம் மிக்கதாக பார்க்கின்றனர். இப்போது அந்த பிரதேசத்தை சுற்றி பரவலான சண்டைகள் ஆரம்பமாகியுள்ளன. 

 சிரியாவில் இஸ்லாமிய முஜாஹித்களிற்கு எதிராக போராட லெபனானிய ஷியாக்களை ஹிஸ்புல்லாஹ் அழைத்ததும் “இந்த புனித ஸ்தலத்தை சுன்னி வெறியர்கள் அழித்து விடுவார்கள். அதை பாதுகாப்பது ஒவ்வொரு ஷியாவினது கடமையென்றே”. 

 பஸர் அல்-அஸாத் உள்நாட்டு சண்டைகளில் வெற்றியடைய பல இராணுவ ஆலோசகர்களை தன் வசம்கொண்டிருந்தார். அதில் வெளிநாட்டவர்களும் அடக்கம். இதற்காக அவர் பல இலட்சம் டொலர்களை அவர்களிற்கு மாதாந்த ஊதியாமாக வழங்கி வந்தார். அவர்களில் ஒருவரே இந்த Commander Mohammad Jamlizadeh ஆவார்.

 “நாம் ஒருபோதும் சிரியாவின் சண்டைகளில் ஈரானிய இராணுவத்தை ஈடுபடுத்தவில்லை. வொலண்டியர்களாக செல்லும் ஈரானிய வீரர்களை தடுக்கவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் ஷியாக்களின் புனிதஸ்தலங்களை பாதுகாக்க செல்பவர்கள். Commander Mohammad Jamlizadeh ஒரு பாதுகாப்பு ஆலோசகராகவே செயற்பட்டார். இதுவே உண்மையாகும்” என ஈரானிய குடியரசு காவற்படையின் தலைவர் General Ramazan Sharif,தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment