Thursday, February 6, 2014

சிரியப் போராட்டம் பற்றி நிஜங்களை மறைக்கும் நிழல்கள் !! (ஒரு சுருக்கப்பார்வை )


         தேவைகளால் ஒரு போராட்டம் நிர்ப்பந்திக்க படும் போது அதை கொடுப்பவர்களால் அந்தப் போராட்டம் ஆளப்படும் என்பது ஏகாதிபத்திய சுயநல  அரசியலின் அடிப்படை விதி . அதற்காக தேவைகளை ஏற்படுத்தல் ,அதை தமது கட்டுப்பாட்டில் பராமரித்தல் என்பவற்றை இந்த இத்தகு சக்திகளின் (பென்டகன் போன்ற )  மூல மையங்கள் தமது உளவாளிகள் மூலமும் , குறித்த பகுதியில் விலைபேசிய அவர்களது விசுவாசிகள் மூலமும் சாதிக்கும் .மத்திய கிழக்கின் அண்மைய ஆட்சி மாற்றங்கள் , ஆட்சி மாற்றங்கள் தொடர்பான புரட்சிகள் வரை இந்த தத்துவம் தாராளமாகவே பயன்பாட்டுப் போனது .ஆனால் சிரியா விவகாரத்தில் இந்த விடயம் புறநடையாகிப் போனது இத்தகு ஏகாதிபத்தியங்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பிராந்திய கைத்தடிகளாக தொழிற்படும் விசுவாசிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது .


        மதத்தில் இருந்து வாழ்வியலை பிரித்தல் என்ற குப்ரிய அரசியல் மூலம் முஸ்லீம் உம்மத் திசை திருப்பப் பட்டது . அதன் உச்ச விளைவு இஸ்லாத்தின் கட்டுக்கோப்பான அரசியல் வடிவமான கிலாபா 1924 ம் ஆண்டு துருக்கியில் வீழ்த்தப்பட்டது . இதன் பின்னரே  குப்ரிய ஏகாதிபத்தியங்கள் இலகுவாக தமது அரசியல் பொருளாதார ,நாகாரீக வடிவங்களை முஸ்லீம் உலகில் விதைக்க முடிந்தது . சிந்தனை வீழ்ச்சி மற்றும் ,அதன் அடிப்படையில் அதி உச்ச நுகர்ச்சி நோக்கிய உலகக் கவர்ச்சி என்பன முஸ்லிம் உம்மத்தை சற்று திருப்பி இருந்தாலும் யதார்த்தம் நோக்கிய அதன் அடிவைப்பை தடுக்க முடியவில்லை என்பதையே இன்றைய முஸ்லீம் உலகின் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன . அதிலும் மிகப் பாரிய அளவில் 'ஹைலைட்டான 'போராட்டமாக சிரியாவின் போராட்டம் அமைந்துள்ளது . 

          இன்னும் இத்தகு நிலை சிரியாவைப் பொறுத்தவரை தற்செயலாக நடந்த ஒரு அரசியலாக எடுக்க முடியாது . அதன் தொடக்கங்கள் ஏகாதிபத்திய அரசியலுக்கு சார்பான பொதுமுகத்தை காட்டி எழுந்தாலும் அதன் நகர்வுப் பாதையில் இருந்து ஒரு தெளிவான இஸ்லாமிய திட்டமிடல் தனது கைவரிசையை காட்டியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது . இஸ்லாமிய போராட்டங்கள் பல பகுதிகளில் இடம்பெற்று வந்தாலும் சிரியாவின் அளவுக்கு அல்லாஹ்வின் எதிரிகளை அச்சப்படுத்தவில்லை . எனவே தான் தேவைகாளால் அந்த போராட்டம் நிர்ப்பந்திக்கப்பட சவூதி அரேபியா,துருக்கி  உட்பட தமது அத்தியாவசிய உதவிகளை கூட நிறுத்தி அங்குள்ள மக்களையும் போராளிகளையும் பட்டினிச் சாவை நோக்கி 
தள்ளியுள்ளார்கள்! 

                 சிரியாவை பொறுத்தவரை ஆழ்ந்த திட்டமிடலுடன் கூடிய ஒரு தவ்வா ,இஸ்லாஹ் ,தர்பியா என்பன ஆழ்ந்த போராட்டங்களுக்கு மத்தியிலும் கொண்டு செல்லப்பட்டதற்கான ஆதாரங்களை பின்வரும் விளைவின் மூலம் நாம் எடுத்துக் காட்டலாம் . எகிப்து ,லிபியா ,டுனீசியா உட்பட எல்லா முஸ்லீம் பெருநிலங்கள் போலவே ஒரு சராசரி ஆட்சி மாற்றம் பற்றிய அரசியலை கொண்டதாக தொடங்கியது . ஆனால் ஜனநாயகம் , அதன்மூலம் உரிமை ,சுதந்திரம் என்ற குப்ரிய அரசியலை அடியொற்றிய கேள்வியும் ,தேடலும் மிகக் குறைந்த விகிதாசாரத்திலேயே எழுந்திருந்தன .அவையும் காலப்போக்கில் காணாமல் போய் கிலாபா அரசு பற்றிய ஆழமான கோரிக்கையை அதிக விகிதாசார மக்கள் வேண்டி நின்றனர் .

        சிரியா தொடர்பான வஹியின் முன்னறிவிப்புகள் ஏறத்தாழ முஸ்லீம் உலகின் எல்லா இஸ்லாமிய போராளிகள் தரப்பையும் அதன் பக்கம் கவர்ந்தது . இந்தப்பார்வை மிக அவசரமாக இஸ்லாமிய போராளிகளை ஒன்று குவிக்கும் என தாகூத்களால் சிந்திக்க முடியாமல் போனது . அத்தோடு சராசரி உள் முரண்பாடுகளை தாண்டிய மனோபாவத்தினுள் போராட்ட இயக்கங்கள் வந்ததோடு மட்டுமில்லாமல் தமக்குள் கூட்டு உடன்பாடுகளையும் ,ஒப்பந்தங்களையும் செய்து கொண்டனர் . இந்த விடயம் அமெரிக்க ,ரஷ்யா சார் ஆதிக்க வாழ்வுக்கு பலத்த சவாலாக மாறியது .

        மேலும் சிரியாவின் போராட்டம் முகமூடி அணிந்திருந்த அணைத்து  இஸ்லாத்தின் எதிரிகளையும் தெளிவாகவே இனம்காட்டியது . அத்தோடு ஒரு கள அமைப்பினுள் இஸ்லாத்தின் எதிரிகளை வரிசைப்படுத்தியது . இந்த விடயம் மூலம் தமக்குள் சிறு ,சிறு விடயங்களுக்காக முரண்பட்டு நிற்கும் முஸ்லீம் உலகமும் அவைகளை கைவிட்டு இஸ்லாம் எனும் பொதுக்கருத்தில் முஸ்லிம் உலகம் ஒன்றுபட வேண்டிய அவசிய செய்தியை இஸ்லாமிய போராளிகள் நடைமுறையில் காட்டினர் .

          விடயங்கள் இப்படி இருக்க குப்ரிய ஏகாதிபத்தியங்களும் , அதன் அராபிய  கைத்தடிகளும் சராசரி மனிதப் பலவீனங்களை பயன்படுத்தி முரண்பாடுகளையும் ,உட் கலகங்களையும் அந்த போராட்டத்தில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் . மேலும் சிரியா தொடர்பில் போலியான பிரச்சார நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்கள் . எனவே சிரியா தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மை மிக ஆழமாக அலசப்பட்ட பின்னே பகிரப்பட வேண்டும் .  

No comments:

Post a Comment