Friday, February 21, 2014

இலங்கையிலும் 'BROTHERS WAR' "சபாஷ் சரியான போட்டி !"

           "தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும் , முற்றிலும் ஒரு மனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்பதை தவிர வேறு
எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்பட வில்லை 
                                                                                               (அல் குர் ஆன் 98:05)

                                                     ( நபியே !) நீர் இவர்களை பார்க்கவில்லையா ? 'உமக்கு இறக்கி அருளப் பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம் "; எனக் கூறுகிறார்கள் .எனினும் ,அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகிறார்கள் . ஆயினும் தாகூத்தை நிராகரிக்குமாறே அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள் .
                                                                                               (அல் குர் ஆன் 4:60)

             இலங்கையின் மாதம்பை எனும் பகுதியில் கடந்த 14 பெப்ரவரி 2014 அன்று முஸ்லீம் சகோதர இயக்க மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . குறித்த சம்பவத்தில் சிறீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ ) தனது நிலையமாகவும் , தொழுகை நடாத்தும் இடமாகவும் பாவித்த வீடு சேதமாக்க பட்டுள்ளதுடன் , குறித்த இயக்க உறுப்பினர் சிலரும் காயப்படுத்தப் பட்டுள்ளனர் . குறித்த திகதியில் குறித்த நிலையத்தில் ஜும்மா தொழுகை நடாத்த SLTJ அமைப்பினர் தீர்மானித்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் நடந்துள்ளது . ஏறத்தாழ 500 முஸ்லீம் நபர்கள் கூட்டமாக வந்து இந்த கட்டுத் தர்பாரை நடாத்தியுள்ளனர் . இலங்கையில் பௌத்த மதவாதம் தனது ஆக்கிரோசமான குறியை முஸ்லீம் உம்மத்தின் மீது வீசிய நிலையில் இந்த சம்பவத்தின் சாதக பாதகங்கள் எத்தகு வடிவம் பெறும் !? என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வியே ஆகும் .

   குறித்த பிரதேசம் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் A 1 தர கட்டுப்பாட்டுப் பகுதியாகும் . இந்த சம்பவத்தின் புறத் தோற்றத்தை சராசரி மக்கள் எதிர்ப்பு என வெளிப்படுத்தி இருந்தாலும் ,1980 களில் இலங்கை ஜமாதே ஜமாஅதே இஸ்லாமி தப்லீக் ஜமாத்திடம் இருந்து கற்றுக்கொண்டதை ,பெற்றுக் கொண்டதை தம் சகோதரனுக்கும் கொடுத்து உதவும் தடாலடி அரசியல் முகமூடி புலப்படுகிறது .ஆகமொத்தம் அப்பட்டமான இருபக்க தவறுகள் குறித்த இரு இயக்க தரப்பிலும் இருப்பதை மறுபதற்கில்லை .(உதாரணமாக இலங்கையின் திஹாரி பகுதியில் SLTJ இத்தகு திரைமறைவு சகுனித்தன அரசியலோடு ஏனைய இயக்க உறுப்பினர்களை குறிவைப்பதை காட்டமுடியும் .)

                   அந்தவகையில் இயக்கவாதம் சகோதரத்துவ பார்வையை முடக்கி மூலையில் போடும் தரத்தில் வெளிப்படும் லட்சணங்கள் ஒரு சங்கிலித் தொடர் வடிவம் பெறுவது முஸ்லீம் உம்மத்தின் மீதான ஒரு தெளிவான சாபக்கேட்டு அரசியலே ஆகும் .ஒரு அறிவார்ந்த இயக்க நிலைப்பாட்டை தாண்டிய காடைத் தனத்துக்குள் இஸ்லாமிய இயக்கங்கள் வருவது ஆரோக்கியமானதல்ல . நேற்று தப்லீக் சகோதரர்களை குண்டர்கள் என 'கொன்டம்' பண்ணி பார்த்ததில் இருந்த நியாயமும் ,காரணமும் இன்று தாம் ஆதிக்கம்பெற்ற பகுதிகளில் மேற்படி இயக்கங்களால் செய்யப்படுவது இவர்கள் யார் !? எனற கேள்வியை எழுப்பத் தூண்டுகிறது .

             இன்னும் SLTJ அமைப்பின் நடவடிக்கைகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது .இவர்கள் தங்கள் தலைமை போதகராக போற்றும் PJ எனப்படும் P .ஜெய்னுல் ஆப்தீன் (உலவி ) அவர்கள் நேற்று தனி ஜமாஅத் ஆகி பிரிந்து சென்ற அபூ அப்துல்லாஹ் ,மற்றும் உமர் அலி போன்றோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் ! இன்று அவர்களைப் போலவே அவசரமும் அரைவேக்காட்டு தனமும் மிக்க ஒரு பாதையை காட்டி நிற்பது மிகுந்த வேடிக்கையான முடிவே . ஜமாஅத் என்பதற்கான அரசியல் இராஜதந்திர கட்டமைப்பு வடிவம் ,மற்றும் முஸ்லீம் உம்மத்தின் ஏனையவர்களை புறக்கணித்தல் என்பதற்கான இவர்களது ஆய்வுகளும் ,ஆதாரங்களும் ,தீர்ப்புகளும் குறை பார்வை மிக்கது என்பதை மறுப்பதற்கில்லை .

          இன்னும் இவை எல்லாவற்றையும் விட இத்தகு இயக்க மோதல்களுக்கு பின்னால் இவர்கள் தீர்ப்ப்புக் கேட்டு தஞ்சம் அடைவது தாகூத்திடமும் அதன் சட்டங்களிடமும் தான் ஆகும் . நிர்ப்பந்தம் சூழ்நிலை என்ற பெயரில் இத்தகு பித் அத் கலந்த சிர்க் தொடர்பில் சுன்னாவில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா !? எனும் கேள்வியை SLTJ அமைப்பிடமும் ,ஹாக்கீமியத் தொடர்பில் வாய் கிழிய கத்திய ஜமாஅதே இஸ்லாமி அமைப்பிடமும் கேட்கவேண்டி உள்ளது . இந்த வாடிக்கையான விடயத்தை வேடிக்கை பார்த்து வாய் பிளந்து நிற்கும் முஸ்லீம் உம்மத் "சபாஷ் சரியான போட்டி !" என ஏதோ பட்டிமன்றம் ஒன்றை பார்த்து ரசிக்கும் மனோ பாவத்தில் இன்னும் ஆயிரம் இயக்கங்களை தன்னுள் வளர விடும் மனோ பாவத்திட்குள் இன்று முஸ்லிம் உம்மத் வந்துள்ளதட்கும் இத்தகு இயக்கங்கள் பொறுப்பு சொல்லியே ஆகவேண்டும் .
                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment