
முதலாவது இஸ்லாத்தின் பெயரில் பயங்கர வாதம் என்றால் என்ன !? என்ற கேள்விக்கு ' பயங்கரவாதம் ஒழியுமா ? ' பதிவில் பதில் இல்லை .மாறாக வெஸ்டர்ன் கொடுத்த வெங்காயத்தை உரித்து கண்ணீர் விடும் 'கபட' பார்வையே இங்கு தெரிகின்றது .விமர்சித்து விட்டு இறுதியில் அதையே நவ இஸ்லாம்!! சாம்பாறு போட்டு சமூகத்தை குழப்புவது தான் இவர்கள் சொல்லும் நவீன தவ்வாவின் மூல நாதம் !! அப்படியானால் இவர்கள் 'வைட் ஹவுஸ் ' சிந்தனை சுவருக்கு சேறு பூசுகிறோம் என்று புறப்பட்டு 'பெயின்ட் ' அடிக்க கொந்தராத்து எடுத்த பயல்களா !? என தவறாக உண்மையை பேசி விடாதீர்கள் !
உலகம் குழம்பி இருக்கின்றது என இவர்கள் சொல்வது உண்மை . சரி இவர்கள் குழப்பத்தை தீர்ப்பதாக பேசி தேசியம் எனும் விஷப் பாம்பை எடுத்து மடியில் விடுவதுதான் காலத்தின் தேவை என கூறுகிறார்கள் .
இந்த தேசியம் எனும் மகா தவறில் இருந்து தான் இஸ்லாமிய சகோதரத்துவம் சிதைக்கப்பட்டது . இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு 'சிசேரியனாக' மத்திய கிழக்கில் இழுத்துப் போடப்பட்டது . இதுவும் இவர்கள் பயங்கரவாதம் என்ற பார்வையில் கண்டிக்க நினைக்கும் கயவர்கள் கற்றுத் தந்தது தான் ஆகும் .'குப்ர்' தந்த ஒரு வரைவிலக்கணம் சரியானது ! இன்னொன்று தவறானது எப்படி !?
இஸ்ரேல் எனும் சியோனிச கொடூரத்தை இல்லாமல் செய்வோம் என கங்கணம் கட்டிய நேற்றைய வீரப் போராளிகளை இன்று இரண்டு அரசுகள் என்ற 'கொம்ப்ரமைஸ் பொலிடிக்ஸ் ' நோக்கி கொண்டு வந்தது வரை தேசியம் எனும் குறும்பார்வை உதவி செய்துள்ளது . (இன்று துருக்கியின் பிரதமர் ரஜப் தையுப் எர்துகான் VS பதுஹுல்லாஹ் குலன் முரண்பாடுகளில் பதுஹுல்லாஹ் குலன் சொல்வது தையுப் எர்துகான் இஸ்ரேல் இடம் சொல்லாமல் 'காசா ' சென்றது தவறு என்ற விடயமும் உள்ளடங்கி உள்ளது .இஸ்ரேல் எனும் தேசியத்தில் பொது நிலையோடும் உறவுகள் விடயத்தில் முரண்பாடும் காட்டுவதும் ஒரு அங்கீகார வடிவமே .) இஸ்லாத்தின் பெயரில் வந்த மன்னரிசம் முதல் நவீன இஸ்லாமிய தேசிய அரசியல் வரை இஸ்ரேலை அனுசரித்தல் என்ற தவறான அரசியலில் இருந்தே தம் முதுகெலும்பை நிமிர்த்த நினைத்தன ! நினைக்கின்றன ! ஏன் ?
இப்படிப் பார்த்தால் ('வெஸ்ட்டனின்' தர்பியத் வழி சில) இஸ்லாமிய இயக்கங்களே!! இஸ்ரேலை அங்கீகரித்தே தமது அரசியல் பார்வையை பேசுகின்றன . 'கேம் டேவிட்' ஒப்பந்தத்தை மீராமலே கலாநிதி முர்சி கூட எகிப்தை நிமிர்த்த முயன்றார் !! அப்போதெல்லாம் இந்த பயங்கர வாத தேசம் என்ற பார்வை எங்கே போனதாம் !? எகிப்தையும் , துருக்கியையும் மொடலாக பேசும் 'அல் ஹசனாத் ' இஸ்ரேலை எப்படி பயங்கர வாத வட்டத்துக்குள் கொண்டு வர முடியும் !? எல்லாமே குழம்புகிறது .
No comments:
Post a Comment