Tuesday, February 11, 2014

வீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா !?

                                                                                                                                                                                இஸ்லாம் மேலோங்க வேண்டும் என அதற்காக தம்மை அர்ப்பணித்து உழைத்து நிற்கும் வீரர்களின் தேடல் தேசம் தாருல் இஸ்லாம் மட்டுமே . அவர்கள் எதிர்பார்க்கும் பறந்து விரிந்த தேசியம் இஸ்லாமாகவே இருந்தது .இத்தகு தூய இலட்சியத்தோடு புறப்பட்ட மனிதர்களின் துணிவுக்கு முன் சோதனைகள் தூசி போல் ஆகின ! இழப்புகளை நாளை இறைவன் முன் தம் செயல்களுக்கான ஆதாரமாக்க சேமித்துக் கொண்டார்கள் .இவர்களது புறப்பாடுகள் வீரத்தையே அச்சம கொள்ள வைத்தது !"வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு ;அல்லது வீழ்ந்தால் சஹீத்களாக வீர சுவனம் ." எனற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முன்னால் தாய் ,தந்தை மனைவி பிள்ளைகள் , செல்வங்கள் ,பிறந்த மண் இப்படி எல்லா வற்றையும் இரண்டாம் மூன்றாம் பட்சமாக்கியது .

         இறை திருப்தி என்ற இவர்களது நித்திய நிலைப்பாட்டுக்கு முன் உலகம் அற்பமாக சுருங்கித்தான் போனது !நேற்று போர் வாளின் நிழலில் சுவனத்தை தேடியவர்கள் இன்று துப்பாக்கிகளில் சாய்ந்து சற்று இளைப்பாறுவதும் அந்த ஒரே நிலைப்பாட்டுக்காகவே .செச்சினியாவில் பிறந்து சிரியாவில் சஹீதாவதும் ! பர்மாவில் பிறந்து பலஸ்தீனில் சஹீதாக துடிப்பதும் ஏன் !? இங்கு' குப்ர் 'போட்ட தேச ,தேசிய தடைகள் எல்லாம் அலட்சியமாக கடக்கப் படுகின்றது ! சாத்தான் வரைந்த இன்றைய சர்வதேச வேலிகள் சத்தியத்துக்கு தோள் கொடுக்கும் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல .இஸ்லாத்தின் பார்வையில் அப்படி ஒரு நிலைப்பாடு தேவையுமல்ல .

          விடயம் இப்படி இருக்க நவீனம் எனும் குறை பார்வையோடு இந்த குப்ரிய பிரிகோடுகளை ,அதன் அயோக்கிய வடிவமான தேசம் ,தேசியம் அதுசார் அகீதா ,அதுசார் நாகரீகம் என்பவற்றை ஜீரனித்த ஓர் இஸ்லாமிய சமூக !! அமைப்பை ஏற்படுத்த என ஒரு நகைப்புக்கிடமான இஸ்லாமிய !! அழைப்பு தொடர்கிறது . நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாமை என்ற எல்லைகளையும் தாண்டி ஜாஹிலீயத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி காட்சிப்படுத்தும் தவறுகள் தொடர்கின்றன .

                          இவர்களது காட்சிப்படுத்தலின் அடிப்படைத் தவறு பிறந்த மண் ,அல்லது தாயக பூமி என்ற நிலைப்பாட்டை தேசம் தேசியம் அதன்கீழ் வாழ்வு என்ற விடயங்களோடு இணைப்பதே ஆகும் . இது ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய சித்தாந்த வாழ்வுத் தேடலை புறக்கணிக்க வைக்கிறது . இப்படிப் பார்த்தல் சுஹைபுர் ரூமி (ரலி ) ரோமை நோக்கி ஓடிச் சென்று கிறிஸ்தவ அதிகாரத்தின் கீழ் மண்டியிட்டு மறுமைக்காக உழைத்திருக்க வேண்டும் . சல்மான் பாரிஸ் (ரலி ) பாரசீகம் சென்று மஜூசிகளின் நெருப்பின் கீழ் நின்று குளிர் காய்ந்து இருக்க வேண்டும் .

           இந்தியாவில் பிறந்த ஒருவனுக்கு அமெரிக்காவில் சிட்டிசன் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் .இங்கு இவனது பிறந்த பூமி இந்தியா அது தாயக பூமி என்ற விசுவாசத்தோடு ஒருபக்கம் இருக்க , அவனது வாழ்வியல் நிலைப்பாடுகளை அமெரிக்க தேசம் மற்றும் அதன் பெடரல் நியதிக்கும் விசுவாசமாக மேற்கொள்ள வேண்டும் என்று இருந்தால் இது என்ன !? இந்த உதாரணத்தில் இருந்து பிறந்த மண் மீதான பற்று என்பதற்கும் தேச ,தேசிய விசுவாசம் என்பதற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் புரியக்கூடியதாக இருக்கும் .அதாவது இரண்டும் வெவ்வேரானது .ஒன்று சராசரி உணர்வில் இருந்து வரக்கூடியது .இரண்டாவது குறித்த பகுதியை ஆளும் சித்தாந்தத்தில் இருந்து வரக்கூடியது .இந்த இடத்தில இருந்தே ஒரு முஸ்லிமின் நிகழ்கால நடத்தை தீர்மானிக்கப்பட வேண்டும் .

                       இன்னும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மக்காவை தாயகம் என்பதால் நேசித்தார் . ஆனாலும் இலட்சியவாத பூமி என்ற அடிப்படையில் மக்கா வெற்றிக்கு பின்னும் மக்காவில் வாழும் சாத்தியங்கள் நிறைந்த நிலையிலும் தனது மரணம் வரை மதீனாவையே தேர்ந்து எடுத்தார் . தவ்வா ,ஜிஹாத் என்ற புனித நோக்கங்களுக்காக பல சஹாபாக்கள் ,தாபியீன்கள் , தபஹ் தாபியீன்கள் , இமாம்கள் ....என தொடரும் வரலாற்றுப் பக்கங்களில் இன்றுவரை பிறந்தமண்ணை துறந்து இலட்சியத்தையே தேசியமாக்கி நேசித்த வீரர்களுக்கு அளவு கணக்கு இல்லை . இங்கு பிறந்த தேசம் ,வாழும் தேசம் என்பதற்காக அதன் சித்தாந்த தரம் எந்த நிலையில் இருந்தாலும் நேசிக்க சொல்வது இஸ்லாமிய பார்வை ஆகாது . 

          இன்னும் ஒரு முஸ்லிமுடைய பார்வை என்பது குப்ர் விரும்பியோ வெறுத்தோ தான் வாழும் பூமியில் இஸ்லாத்தின் நியாயத்தையும் ,தேவையையும் , முன்வைத்து போராடுவதே தவிர ,குப்ரின் திருப்தியின் கீழ் இருந்து அவன் எதிர்பார்க்கும் கோணத்தில் இஸ்லாத்தை காட்டி நிற்பதல்ல. இந்த அனுசரிக்கும் பாங்கு தான் இஸ்லாமிய போராட்டம் என்றால், மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த 13 வருட காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஒரு அழகான 'அட்ஜஸ்ட்மண்ட ' இஸ்லாத்தை கற்றுத் தந்திருப்பார் . இந்த உண்மை முஸ்லீம் உம்மாவால் புரியப்பட வேண்டும் .

           இஸ்லாத்தின் போராட்டம் என்பது இருப்பதையும் அடகுவைப்பதல்ல ! அழிக்கப் பட்டாலும் வார்த்தையால் தானும் சத்தியம் எனும் உன்னத இலட்சியத்துக்காய் போராடுவதே . இங்கு சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் பேச்சுக்கே இடமில்லை .

No comments:

Post a Comment