Friday, February 7, 2014

'தாகூத்தும் 'நாமும் !!!( ஒரு புரிதல் நோக்கி ...)


       ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கு நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களும் பாதுகாப்பும் இஸ்லாமிய முறைப்படி அமையப்பெறாவிடில் அது தாருல் குஃப்ர் ஆகும். ஏனெனில் ஒரு நிலப்பகுதியை தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனப் பிரித்தரிய அங்கு நடைமுறைப்படுத்தப்படும் அங்குள்ள அரசியல் அதிகார ஒழுங்கும் ,அங்கு நிலவும் சட்டதிட்டங்களும்  முக்கியக்காரணியாகும். 


            இன்னும் குறித்த ஒரு நிலப்பகுதியின் அதிகாரம் இஸ்லாம் சொல்லும் வரைமுறைப்படி அமையாது அதன் சட்டங்கள் சரீயாவை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் நிலையிலும் அதை தாருல் இஸ்லாம் என்ற பதம் குறிக்காது . மாற்றமாக இஸ்லாம் சொல்லும் அதிகாரக் கோட்பாட்டு விதிகளை ஏற்ற நிலையிலே இஸ்லாமிய சரீயா பிரயோகிக்கப் படும் நிலையில் (அந்த ஆட்சியாளன் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தவறு செய்யும் நிலையிலும்) அது தாருல் இஸ்லாம் ஆகும் .

    குறித்த பகுதியில் பெரும்பான்மை  மக்கள் பின்பற்றும் மதத்தினைக் கொண்டும்  தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனக் கூறுதல் இயலாது.அத்தோடு தாருல்  குப்ருக்கு விசுவாசமாக ஒரு முஸ்லிம் உண்மையில் கட்டுப்படவும்  அடிபணியவும் முடியாது என்பது வஹியின் கட்டளை ஆகும்.

    (நபியே !) நீர் இவர்களை பார்க்கவில்லையா ?"உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கி அருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம் "எனக் கூறுகின்றார்கள் .எனினும் அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாக்கூதிடம் கொண்டு செல்லவே விரும்புகிறார்கள் . ஆயினும் தாகூத்தை நிராகரிக்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டு இருந்தார்கள் ....
                                                                 (அல் குர் ஆன்  அத்தியாயம் 4 வசனம் 60)

                 தாக்கூத் :- இந்த அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்று பொருள் . வஹியின் மரபில் இறை வழிகாட்டலை விட்டும் நழுவிச் சென்று தன் சட்ட திட்டங்களை மக்கள் மீது திணிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பதம் வழங்கப் படுகிறது .ஒரு முஸ்லிம் இத்தகு நிலைப்பாட்டுக்கு கட்டுப்படுவதோ , கட்டுப்படத் தூண்டுவதோ தெளிவான ஹராம் ஆகும் .

                  உதாரணமாக இறைநெறிக்கு மாற்றமாக இச்சைகளின் பக்கம் இட்டுச் செல்லும் மனம் , பொய்மையின் பக்கம் அழைப்புக் கொடுக்கும் ஷைத்தான் , இறை சட்டத்துக்கு எதிராக தன் சட்டத்தையும் தன்னாதிக்கத்தையும் செலுத்தும் தனி மனிதன் ,கூட்டம் ,சமூகம் ,இயக்கம் இப்படி எல்லாமே தாக்கூத் என்ற பதத்தில் உள்ளடங்கி விடும் .

                 எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கிறாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும் ;அடிபணிவதில் தன் இறைவனுடன்  யாரையும் இணையாக்காதிருக்கட்டும்.
                                                                                                 (அல் குர் ஆன் 18: 110)

                                   குழப்பம் (பித்னா ) இல்லா தொழிந்து (தீன் )மார்க்கம் முழுவதும் அல்லாஹ்வுக்கே என ஆகிவிடும்வரை ( வரம்புமீறி அட்டூழியம் புரியும் தாக்கூத் களான ) நிராகரிப்பாளருடன் போர் புரியுங்கள்.
                                                                                                 (அல் குர் ஆன் 8: 39)

      
                      இங்கு நற்செயல் என்பது வஹி வரையறுத்த ஹலாலான விடயங்களாகவும் .பித்னா என்பது குப்ரிய அகீதாவையும் அதன் நாகரீகத்தையும் சார்ந்த விடயமாகவும் இருக்கின்றது .இந்த பித்னா என்ற விடயத்தில் இருந்து எந்த ஒரு நன்மையும் வரமுடியாது .

No comments:

Post a Comment