Friday, February 21, 2014

F.S.A.-யின் புதிய கொமாண்ட் இன் சீஃப் - Brigadier General Abdul-Ilah al-Bashir al-Noeimi - ஜெனரல் சலீம் இத்ரீஸ் கட்டாரில் தஞ்சம் !


 (ஈரானின் 'ஹிஸ்புஸ் ஷைத்தான்கள் ' போல குப்ரிய மேற்குலகின் 'ப்ரீ வெஸ்டர்ன் ஆர்மி ' FSA என்ற பெயரில் சிரியாவில் இஸ்லாமிய இலட்சிய வாதத்துக்கு எதிராக எவ்வாறு தொழிற்படுகிறது ? என்பதை புரியப்படுத்தும் ஒரு பதிவு .)

      Brigadier General Selim Idriss. இந்த பழைய பெயர் ஞபாகம் வருகிறதா?. சுதந்திர சிரிய இராணுவத்தின் (F.S.A.) சீஃப் கொமாண்டிங் ஜெனரல். பஸர் அல் அஸாத்தின் இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளில் ஒருவர். மேற்கின் பேரம்பேசலின் விளைவாக போராளிகளுடன் இணைந்து கொண்டவர். சில சடுதியான தாக்குதல்களின் மூலம் ஹோம்ஸின் பல நிலைகளை கைப்பற்றி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். ஹிஸ்புல்லாக்களுடனான கரையோர நகரான ஹுஸைரின் சண்டைகளின் போது FSA -யின் பெயர் வேகமாக பரவியது. பின்னர் அதே FSA-யின் சிதைவிற்கும், உள்முரண்பாடுகளிற்கும் முழுப்பொருப்பும் இவர் மேலேயே சுமத்தப்பட்டது. சிரிய இராணுவத்தின் என்ஜினியரிங் டிவிசன் தளபதியால் தனது இயக்கத்தை பேணவோ நிர்வகிக்கவோ முடியவில்லை. மேற்குலகம் FSA -யிற்கு வழங்கிய பல நவீன ஆயுதங்கள் மாற்று இஸ்லாமிய போராளிகள் வசம் சென்றதற்கும் இவரே காரணம் என்பது இவர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு. FSA-யிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை இவர் பெருமளவில் விற்று விட்டார். இப்போது சிரியாவை விட்டு ஓடி, தோஹாவில் (கட்டார்) அடைக்கலம் புகுந்துள்ளார். 

           இவரது தலைமைத்துவம், வழிநடாத்தல், ஆளுமை, இராணுவ வியூகங்கள் என்பவற்றில் FSA-யிற்கு உள்ளேயே பல கேள்விகள் தொடராக எழுப்பப்பட்டு வந்தன. பஸர் அல்-அஸாத்தின் பாசிஸ இராணுவத்திற்கு நிகரான கட்டற்ற ஆயுத வன்முறைகளை இவர் தனது இயக்கம் மேற்கொள்வதை அனுமதித்தார். மாற்று இயக்கங்களை கொலை செய்தல், அவர்களின் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்தல் போன்ற பல அநியாயங்களை FSA செய்த போது அதனை இவர் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் இயக்கம் மூன்றாக பிளவுபட்ட போது, மேற்குலகம் இவரது தலைமைத்துவ மாற்றம் குறித்து அழுத்தம் கொடுத்தது. கடந்த பெப்ரவரி 16-ம் திகதி இவர் FSA-யின் சீஃப் கொமாண்டர் என்ற தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் அந்த அமைப்பை விட்டும் விலகினார். 

Abdul-Ilah al-Bashir al-Noeimi 
இப்போது FSA தனது புதிய தளபதியை அறிவித்துள்ளது. Abdul-Ilah al-Bashir al-Noeimi என்பவர் தான் இப்போது சீஃப் ஸ்டாப் என அறிவிக்கப்பட்டுள்ளார். Supreme Military Council (SMC) எனப்படும் சிரிய சுதந்திர இராணுவத்தின் மீயுயர் இராணுவ கட்டளை கவுன்சிலின் தலைவரும் இவரே. 

FSA-யிற்கு கிடைத்துள்ள இந்த புதிய தலைவர் மேற்கின் ஆதரவு பலமிக்க ஜோர்தானை தளமாக கொண்டு இயங்குபவர். சிரிய இராணுவத்தில் பணியாற்றிய மற்றொரு பிரிக்கேடியர் ஜெனரல் இவர். ஜுலை 2012-ல் சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து வந்த பல கேர்ணல்கள் இவரது தலைமையிலேயே செயற்பட்டனர். “Noeimi” என்பது அராபிய கோத்திரங்களுள் பெரியதொன்று. சிரியா மட்டுமன்றி ஜோர்தான், பலஸ்தீன் போன்ற பிரதேசங்களிலும் இந்த கோத்திரத்தினர் பரவலாக வாழந்து வருகின்றனர். பஸர் அல்-அஸாத்தின் இராணுவத்தில் கூட பல இந்த கோத்திரத்தினர் இராணுவ உயர் அதிகாரிகளாக இருந்தனர். 

        சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து எப்.எஸ்.ஏ.யின் முகாமிற்கு வந்தவர்களில் Adnan al-Rafi, Saleh al-Hammada al-Noeimi, மற்றம் Saleh Bashir al-Noeimi போன்றோர் முக்கிய தளபதிகளாவர். எப்.எஸ்.ஏ.-யின் சீஃப் கொமாண்டிங் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ள Abdul-Ilah al-Bashir al-Noeimi -யும் இந்த அணியை சார்ந்தவரே. இந்த மாற்றமானது சிரியாவிற்கான தனது இராணுவ வலுவை மீண்டும் தக்கவைப்பதில் மேற்குலகம் காட்டும் அதீத அக்கறையின் வெளிப்பாடாகவே கருத முடியும். 

        FSA-யின் தலைமை பொருப்பை ஏற்றவுடனேயே மனிதர் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டார். ஐரோப்பிய யூனியனில் பேசும் அளவிற்கு அவரது அரசியல் முக்கியத்துவம் மிக குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளமையானது இவரது செயற்பாடுகளின் பின்னால் ஏகாதிபத்திய அரசுகளின் மத்திய கிழக்கிற்கான அரசியல் விரிந்துள்ளதை காட்டுகிறது. மனிதர் ஐரோப்பிய யூனியனின் தலைவர்களை விழித்து ஆற்றிய உரையில் “எமக்கு ஆயுதம் வேண்டும். நவீனரக ஆயுதம் வேண்டும். ரஷ்யர்களிடம் இல்லாத ஆயுதம் வேண்டும். அதுவும் உடனடியாக வேண்டும். நான் நேரத்தை வீணடிப்பவன் அல்ல. சிரியாவின் விடுதலையும், அந்நாட்டு மக்களின் வெற்றியும் நீங்கள் வழங்கும் ஆயுதங்களின் தரத்தையும், விரைவையும் பொருத்தே அமையும் என தடாலடியாக பேசியுள்ளார். 

          ஈரானிய அரசிற்கு எதிராக மேற்கின் கைக்கூலிகளாக செயற்படும் People's Mojahedin of Iran (Mojahedin-e-Khalq - MEK) அமைப்பினரை சந்தித்துள்ளார். கூட்டிணைந்த இராணுவ முனைப்புக்களின் ஊடாக ஈரானிய அரசை தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் பாரிஸில் நடந்த தெஹ்ரான் எதிர்ப்பு மாநாட்டில்.மீண்டும் ஒரு இமாம் கொமெய்னியின் போராட்டம் ஈரானிற்கு தேவை. இதே பிரான்ஸில் இருந்து அதனை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். Wilayat al Faqih எனும் மக்களின் கைகளில் அதிகாரங்கள் செல்வதும் அதனை மக்கள் பிரயோகிப்தும் தொடர்பான சிந்தனையை அங்க அவர் கிளறிவிட்டுள்ளார். 

               I.S.I.S. (ISIL) எதிரான கலாவரையறையற்ற எதிர்சமரை தாங்கள் நிகழ்த்தப் போவதாகவும், அதற்கான இராணுவ பணிப்புரைகளும், வியூகங்களும் பிராந்திய கொமாண்டர்களிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மிக அண்மையில் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இது ஜெனரல் இத்ரீஸின் உழல் நிறைந்த F.S.A. அல்ல என்றும் சிரியாவின் மிகச் சிறந்த போராளிகளை கொண்ட புணரமைக்கப்பட்ட புதிய F.S.A. என்றும் அவர் முழங்கியுள்ளார். சிரியாவின் Bab al-Hawa (Idlib), Jarablos (Aleppo), மற்றும் Tel al-Abyad (al-Raqqa) போன்ற பிராந்தியங்கள் அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-யினால் கைப்பற்றப்பட்டுள்ளமையை இங்கு சுட்டுவது பொருந்தும். இது நிகழ்ந்தது டிசம்பர் 2013-ல். பாப் அல்-ஹவாவில் பெருந்தொகையான அமெரிக்கா கட்டார் ஊடாக வழங்கிய ஆயுதங்கள் இவர்கள் வசம் வீழ்ந்தன. இழந்த இடங்களை மீட்போம் என்றும் எப்.எஸ்.ஏ.யின் புதிய தலைவர் சூளுரைத்துள்ளார். 


Talal Abdul-Ilah al-Noeimi 
Colonel Heitham Afeisi எப்.எஸ்.ஏ.யின் ஸ்தாபகர்களில் ஒருவர். Maarat al-Naaman Martyrs Brigade-ன் கட்டளைத் தளபதி. இவர் எப்.எஸ்.ஏ.-யின் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தற்கொலை தாக்குதல்கள் அனைத்தும் இவரது கட்டளையின் பேரிலேயே நிகழ்ந்தவை. எப்.எஸ்.ஏ.யின் இன்றைய தலைவரின் மகனும் எப்.எஸ்.ஏ. போராளியாகவே இருந்தவர். 26 - நவம்பர் 2013-ல் Quneitra-ல் நடந்த சிரிய இராணுவத்திற்கு எதிரான சண்டையில் இவரது மகன் Talal Abdul-Ilah al-Noeimi மரணமடைந்திருந்தார். 

              புதிய போத்தலில் பழைய வைனை மீண்டும் மேற்குலகு சிரியாவில் அறிமுகம் செய்துள்ளது. சிரிய விடுதலை தொடர்பான சித்தாந்த மாற்றங்ள் எதுவும் அற்ற நிலையில் அதன் இராணுவ செயற்பாடுகளின் வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பை ஹிஸ்புல்லாக்களிற்கு நிகரான பலம்வாய்ந்த அமைப்பாக உருவாக்குவதில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முனைப்பு காட்டி வருகின்றன. 

No comments:

Post a Comment