Saturday, February 1, 2014

நவ காலனித்துவ விழா ! நாமும் கொடியேற்றுவோமா !?


      "சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை எஜமானனாக்கி கொள்வார்கள் . அந்த உணர்வு அவர்களில் அப்படியே படிந்து போய் விட்டது ... தம்மை அடிமைகளாக ஆள யாருமே இல்லை என்ற நிலை வந்துவிட்டால் மனம் பொறுத்துக் கொள்ளாது ... யாரும் சுட்டு விரலை நீட்ட மாட்டானா !? என்று தேடிக்கொண்டே இருப்பார்கள் கால்களில் வீழ்ந்து விட ! "                                                                                                                            - செய்யத் குத்ப் (ரஹ் ) -


                     

       நவ காலனித்துவத்தின் உத்தியோகபூர்வ வடிவமே ஒரு தேசத்தின் சுதந்திரம் எனலாம் .அதாவது வல்லமை மிக்க ஏகாதிபத்திய தேசங்களின் எடுபிடிகளாகும் குறித்த பகுதியின் மனிதர்கள் ,தேசியம் எனும் ஏமாற்று அரசியல் மூலம் அவர்கள் எஜமானர் செய்த அதே பிரித்தாளும் வழிமுறையை அடிப்படையாக கொண்டு குறித்த பகுதியின் வளங்களையும் ,சேவைகளையும் அந்த ஏகாதிபத்திய தேசங்கள் சுரண்டிச் செல்ல இடமளிக்கும் வழிமுறை என்று கூறலாம் .

                                    இங்கு மனித வலு , அதன் தலைமை ,படைபலம் போன்ற எல்லாம் தேசம் ,தேசியம் என்ற உணர்வுகளுக்குள் புடம்போடப்பட்ட சுதேசிகளை கொண்டு மேட்கொள்ளப்படும் .நாடு என்ற எல்லைக்கு அப்பால் எதிரி என்ற போர்க்குணம் தூண்டப்படும் . அதனால் ஏற்படும் சச்சரவு ,சண்டைகள் என்பன அரசியல் ,இராணுவ ,பொருளாதார உதவியை வேண்டி நிற்கும் .இப்போது உதவும் கரங்களாக தலையிடும் ஏகாதிபத்தியங்கள் ஒப்பந்தங்களை ,நிபந்தனைகளை இட்டு குறித்த பகுதியில் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் .


             இன்னும் இந்த எதிர்தேசம் எனும் எல்லைமோதல் இல்லாத ,அல்லது அதற்கு சந்தர்ப்பம் குறைந்த நிலையில் சிவில் யுத்தங்களை தூண்டுவதன் மூலம் இத்தகு இலக்குகளை ஏகாதிபத்தியங்கள் அடையும் .பிராந்திய ஆதிக்க சிந்தனையின் கீழ் குறித்த பகுதிகளின் வளம் ,பலம் பொருந்திய தேசங்களும் இத்தகு அரசியல் சதிகளில் சிக்கி உள்ளார்ந்த இன ,மத ,சாதீய ,வர்க்க மோதல்கள் இயல்பாகிவிடும் .இன்று உலகை ஆளும் முதலாளித்துவம் கற்றுத் தந்துள்ள ஒரே வாழ்வியல் இதுவே ஆகும் .
          இந்த தான்தோன்றி சுயநல உலகின் வழி நின்று நியாயமாக சிந்தித்தால் தேசத்தின் சுதந்திரம் என்ற விடயம் அப்பட்டமான ஒரு போலி விடயமே ஆகும் . இத்தகு நாளில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது !?ஆனாலும் நாமும் எமது ஏமாற்றத்தை உறுதிப்படுத்த கொடியேற்றுவோம் !!! எமக்கு கம்பெனி கொடுத்து சுரண்டிச் செல்லும் வல்லாதிக்கங்களுக்கு செம்மறிகளாய் மாறி கம்பளி கொடுப்போம் !!! வாழ்க தேசம் அதனால் வளர்க ஏகாதிபத்தியம் !!!     No comments:

Post a Comment