Tuesday, February 4, 2014

எது சமூக மாற்றம் !

        ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த இயல்பு கொண்ட மக்கள் தொகையின் தொகுப்பே சமூகம் என்பதாக இன்று பொதுவாக கருதப்பட்டு வருகின்றது .அந்த ஒத்த இயல்பு இன, மத ,சாதி ,தேசியம் ,தேசம் ,போன்ற எந்த அடையாளமாகவும் இருக்க முடியும் ;ஆனால் இஸ்லாம் சொல்லும் இஸ்லாமிய சமூகம் எனும் கோட்பாடு இன்றைய உலகம் கருதும் சமூகம் எனும் கோட்பாட்டோடு சிறிதும் உடன்படவில்லை.ஏனென்றால் இன்றைய உலகின் கருத்து வெளிப்படையான சில அடையாளங்களையே அது பொதுவாக 
நோக்கி அதில் வாழும் தனி மனிதர்களது உள்ளார்ந்த உணர்வுகளையோ அதன் கொள்கை ,வழிமுறை பற்றியோ சிந்திப்பதில்லை .
        
     ஆனால் இஸ்லாம் சமூகம் எனும் போது இஸ்லாமிய சமூகம் * இஸ்லாமிய சித்தாந்தத்தையும் ,அதன் தூதர் மூலம் வழிகாட்டப்பட்ட விசேட வழிமுறையினையும் அதனை எவ்வித பாரபட்சமின்றி அமுல் நடத்த தயாரான தனி மனிதனையோ (இப்ராஹீம் (அலை ) தனிமனிதனாக இருக்கும் நிலையில் சமூகம் என்றே அல்குர் ஆன் குறிப்பிடுகின்றது ) மனிதர்களையோ கொண்ட கூட்டே இஸ்லாமிய சமூகம் என்பதாக கருதுகின்றது .

                                    அதாவது இஸ்லாமிய சமூகத்திற்குள் முனாபிக்குகளும் ,
பெரிய ,சிறிய பாவங்களை செய்தோரும் இருக்க முடியும் ஆனால் இஸ்லாமிய சித்தாந்தத்தையும் ,அதன் வழிகாட்டப்பட்ட வழிமுறையினையும் மறுக்கக்கூடிய சிலதை மறுக்கக்கூடிய ,அதிருப்தி கொள்ளக்கூடிய நபார்களை இஸ்லாமிய சமூகத்தின் அங்கமாக அது கருதாது ;இதனால் தான் குப்ர், ரித்தத் ,முர்தத் என்ற விதிகள் எடுத்தாளப்பட்டுள்ளது .

      தொழுகைக்கும் ,சக்காத்திட்கும் இடையில் யார் மாற்றுக்கருத்து ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக 'ஜிஹாத்' செய்வேன் என அபூபக்கர் (ரலி)ஆவேசப்பட்டதற்கான நியாயமும் இதனால் தான் . 'சக்காத்' கொடுக்க மாட்டோம் என மறுத்த அந்தக்கூட்டம் இஸ்லாத்தின் மற்றெல்லா விடயங்களிலும் ஒத்துப்போய்தான் இருந்தது அல்லாஹ் (சுபு)வையும் ,அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களையும் 'சக்காத்தை' மறுத்த சமூகம் ஏற்றுக்கொண்டுதான் இருந்தது .

    இங்கு நான் குறிப்பிட வரும் விடையம் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கட் தொகை எதோ சில பல அடையாளங்களோடு இணைகின்ற கூட்டே சமூகம் எனும் கோட்பாட்டை இஸ்லாம் மறுக்கின்றது . எனவே முஸ்லிகளின் சமூக மாற்றம் பற்றி சிந்திக்க வேண்டிய தொடக்கப்புள்ளி நிச்சயமாக இஸ்லாமிய சித்தாந்தம் என்பதும் அதனை அமுல் நடாத்தும் வழிமுறை என்ற வகையில் அதன் அமைப்பதற்குமான சுன்னாவின் வழிகாட்டல் தொடர்பில் சமூகத்தை அழைப்பது மட்டும் தான் .மாறாக இடைக்கால சீர்திருத்த பணிகளின் விளைவுகள் ஏற்றுக்கொண்ட, ஏற்றுக்கொள்ளாத எல்லோரையும் இஸ்லாமிய சமூகமாக இனம்காட்டி'குப்ர் ' பலம் பொருந்திய நிலையில்'
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா 
முஸ்லிம் பெயர்தாங்கி 
 மனிதர்களுக்கு
ம்
 குப்ரின் '
பாதுகாப்பு  கிடைக்கும் .

     இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மக்காவில் அகீதாவை மட்டும் பேசியதோடு அதன் பிரயோக நிலத்தையும் வேண்டி பலமான தேடலை செய்தார்கள் .அத்தகு நிலமாக மதீனா உருவாகி இஸ்லாம் அரசியல் இராஜதந்திர சக்தியாக பரிணமித்த பின்னே தான் இஸ்லாமிய 'சரீயாவின் சிவில், கிரிமினல் , சட்டப் பகுதிகள் அருளப்பட்டன என்பது தெளிவான வரலாறு . இப்போது நாம் சமூக சீர்திருத்தமாக இஸ்லாமிய 'சரீயாவை ' முன்வைப்பது எதிர் பார்க்கும் விளைவை தராது !மாற்றமாக விகாரமடைந்த ஒரு சமூகத்தை இனம் காட்டி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் செயலையும் செய்தவர்களாவோம் .










No comments:

Post a Comment