Friday, February 21, 2014

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)


         மக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற பிணைப்பு (Raabitah Al Wataniyyah) உருவாகின்றது. மனிதர்களிடம் காணப்படும் உயிர்வாழும் உள்உணர்வு (Survival Instincts) தாம் வாழும் நாட்டிற்கு ஆதரவாகவும், அந்நிய நாட்டிற்கு எதிராகவும், தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் நிலையை நோக்கி அவர்களை தள்ளுகிறது. இதன் மூலம் தேசப்பற்று (Patriotic Bond) என்ற பிணைப்பு ஏற்படுகிறது. இத்தகைய பிணைப்பு மிகவும் பலவீனமானதும், தாழ்ந்த தரத்திலுள்ளதுமாகும். மனிதர்களைப் போலவே இப்பிணைப்பு விலங்குகளிடமும், பறவைகளிடமும் காணப்படுவதுடன், இது உணர்ச்சி பூர்வமாகவும் வெளிப்படுகிறது. ஆக்கிரமிப்பு மூலமாகவோ அல்லது தாக்குதல்கள் மூலமாகவோ அந்நிய நாட்டவர்களின் அச்சுறுத்தல்களுக்கு தாய்நாடு ஆளாகாத நேரங்களில், தேசப்பற்று என்ற இந்த பிணைப்பு மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அந்நியர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் அல்லது விரட்டி அடிக்கப்பட்டவுடன் இதன் தாக்கம் காணாமல் போய் விடுகிறது. ஆகவே, இந்தப் பிணைப்பு குறைந்த தரத்திலுள்ள பிணைப்பாகும்.

          மேலும், குறுகிய சிந்தனை போக்கு மக்களிடம் இருக்கும் போது தேசியவாதத்தின் மூலமான ஏற்படுகின்ற பிணைப்பு (Nationalistic Bond - Raabitah Al Qawmiyyah) உருவாகின்றது. பரந்த நிலையில் உணரப்பட்டாலும்; கூட அடிப்படையில் இது ஒரு குடும்பப் பிணைப்பாகும். ஏனெனில், தனி மனிதர்களிடம் உயிர்வாழும் உள் உணர்வு ஆழமாக காணப்படும்போது மேலாதிக்கத்தின் மீதான மோகம் அவனுள் ஏற்படுகின்றது. இந்த மேலாதிக்க மோகம் என்பது அறிவு மட்டம் குறைந்த தனிமனிதர்களிடம் காணப்படுகின்றது. மேலும் இந்தத் தனி மனிதனின் விழிப்புணர்வு விரிவடையும்போது, அவனுடைய மேலாதிக்க மோகமும் விரிவடைகிறது. இவ்வாறு அவன் தனது குடும்பத்தின் மீதான ஆதிக்கத்தை கைகொள்கின்றான். அவனது விழிப்புணர்வு மேலும் விரிவடையும்போது, தன் தாய்நாட்டு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலுகின்றான். இதை அவன் நிறைவேற்றிவிட்டால், பிறகு மற்ற மக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு விழைகின்றான். முதலில் தனிமனிதனின் மேலாதிக்க மோகம் குடும்ப உறுப்பினர்களிடேயே சச்சரவு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வாறாக, குடும்பத்திற்குள் இடம்பெறும் ஆதிக்கப்போட்டி தீர்க்கப்பட்டுவிட்டால், பிறகு குடும்பங்களுக்கிடையில் சச்சரவுகள் உருவாகி ஒரு குடும்பத்திடமோ அல்லது பல குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவிடமோ ஆதிக்க சக்தி வந்தடைகிறது. இறுதியாக, இறைமைக்கும், உயர்தர வாழ்க்கைத்தரத்திற்குமாக இந்த மக்கள் ஏனைய மக்களுடன் முரண்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே இத்தகைய பிணைப்பால் பிணைக்கப்பட்டவர்களிடம் இனவாதம் (Tribalism - Asabiyyah) நிலைத்திருக்கிறது. இதன் விளைவாக, சலனங்களும் ஒரு இனத்துக்கு எதிராக மற்றொரு இனத்துக்கு உதவும் போக்கும் ஏற்படுகின்றது. முடிவாக, இத்தகைய பிணைப்பு (Bond) மனிதநேயத்திற்கு எதிரானதும், அந்நிய சச்சரவுகள் இல்லாத சந்தர்ப்பங்களில் உள்ளுர் சச்சரவுகளுக்கு (Local Conflict) வழிகோலக்கூடியதுமாகும்.

       ஆகவே, கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக தேசப்பற்று பிணைப்பு (Patriotic Bond) ஏற்றுக் கொள்ள முடியாதது. முதலாவதாக, இது மிக தாழ்ந்த நிலையிலுள்ள பிற்போக்கான பிணைப்பாகும். மறுமலர்ச்சியை நோக்கி மனிதனை இட்டுச் செல்வதற்கும், மனிதர்களுக்கிடையில் நல் உறவை ஏற்படுத்துவதற்கும் இது சிறந்தது அல்ல. இரண்டாவதாக, மனிதனின் உயிர்வாழும் உள்உணர்வினால் (Survival Instinct) அவன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, அவனது உணர்ச்சியால் உந்தப்பட்டு உருவாகின்ற பிணைப்பாகும். ஆகவே உணர்வின் அடிப்படையிலான இந்த பிணைப்பானது மாற்றத்திற்கும், மாறுபாடுகளுக்கும் உட்படக்கூடியதால், மனிதர்களிடத்தில் நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தமானது அல்ல. மூன்றாவதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் தோன்றும் தருணங்களில் மட்டும் தோன்றக்கூடிய இந்த பிணைப்பு தற்காலிகமானதாகும். உறுதியான பாதுகாப்பு நிலை ஏற்பட்டுவிட்டால் இது மறைந்து விடக்கூடியது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு தேசப்பற்றுப் பிணைப்பு (Patriotic Bond) பொருத்தமானதல்ல.


             இதைப் போலவே தேசியவாத பிணைப்பும் (Nationalistic Bond) கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. முதலாவதாக, இது இனவாத அடிப்படையிலுள்ள பிணைப்பாகும். எனவே மறுமலர்ச்சியை நோக்கிய மனித சமூகத்தை பிணைப்பதற்கு பொருத்தமாற்ற பிணைப்பாகும். இரண்டாவதாக, இப்பிணைப்பு மேலாதிக்க மோகத்தின் விளைவாக எமது உயிர்வாழும் உள் உணர்விலிருந்து தோன்றக்கூடிய ஒருவகை பிணைப்பாக இருக்கின்றது. மூன்றாவதாக, இது மனித நேயத்திற்கு பொருத்தமான பிணைப்பொன்றல்ல. ஏனெனில் மேலாதிக்கத்தை அடையும் நோக்கில் மனிதர்களுக்குள் சச்சரவுகளை இப்பிணைப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு இப்பிணைப்பு பொருத்தமானதல்ல.

        மக்களின் மத்தியில் ஏற்புடையதற்ற இன்னும் சில பிணைப்புக்களும் காணப்படுகின்றன. இதற்கு சுயநலனை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற பிணைப்பு (Bond of Self Intrest - An - raabitah al - Maslahiyah) முறைமைகளை தோற்றுவிக்க முடியாத ஆன்;மீக பிணைப்பு (Spiritual Bond - Ar - raabitah al - ruhiyah) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.சுயநல அடிப்படையில் எழுகின்ற பிணைப்பு தற்காலிகமானது. இது மக்களை ஒருங்கிணைப்பதற்கு பொருத்தமானதல்ல. ஏனெனில் அதிகளவில் உலகப் பயன்களை அடைய வேண்டுமென்ற முயற்சியில் இப்பிணைப்பு சமரசங்களுக்கு உட்படக்கூடியது. ஆகவே, சுயநலங்களுக்கு மனிதர்கள் முக்கியத்தும் கொடுக்க ஆரம்பிக்கும் போது இது தானாகவே மறைந்து விடுகிறது. தமது சுயநலங்களை செயல்படுத்த முயலும் வழிகளில் வேறுபாடு ஏற்படும்போதும், மனிதர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டு இப்பிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் அவரவர் சுயநலன்கள் நிறைவடையும்போது இந்த பிணைப்பு மறைந்து போய் விடுகிறது. ஆகவே, பின்பற்றுவதற்கு தகுதியில்லாத மிக ஆபத்தான பிணைப்பாக இது இருக்கிறது.

        முறைமைகள் எதனையும் உள்ளடக்காத ஆன்மீக பிணைப்பு சன்மார்க்க உள்உணர்வு அடிப்படையில் (Religious Instincts) தோன்றுகிறது. ஆனால், எதார்த்த வாழ்க்கையில் இதன் நிலைபெறுதல் இருக்காது. ஆகவே, ஆன்மீக பிணைப்பு அரைகுறையானதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும். வாழ்வியல் விவகாரங்களில் மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தம் இல்லாதது. கிருஸ்தவத்தை தழுவியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் கிருஸ்தவ கோட்பாட்டைக்கொண்டு பிணைப்பை ஏற்படுத்த இயலாமல் போய் விட்டமை இதலாலேயேயாகும். ஏனெனில் கிருஸ்தவம் முறைமைகள் ஏதுமற்ற ஆன்மீக கோட்பாடாகும்.
இறுதியாக, மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான பிணைப்புகளாக மேற்கூறப்பட்ட எந்த பிணைப்பும் விளங்கவில்லை எனலாம். எனவே மானிட இனத்தை வாழ்வியலில் ஒருங்கிணைக்கவல்ல சரியான ஒரேயொரு பிணைப்பு, முறைமைகளை தோற்றுவிக்கக்கூடிய, அறிவார்ந்த அடிப்படை கோட்பாடான அகீதா (Aqeedah) விலிருந்து எழுகின்ற சித்தாந்தப் பிணைப்பாகும் (Ideological Bond Ar-raabitah al-Mabdaiyah).

         சித்தாந்தம் (Ideology - Mabdah) என்பது அறிவார்ந்த அடிப்படை கோட்பாடாகும் (Aqeedah) அதிலிருந்து முறைமைகள் (System) தோன்றுகின்றன. அகீதா என்பது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனையாகும். அது வாழ்க்கைக்கு முன்பு இருந்தது என்ன என்பது பற்றியும், வாழ்க்கைக்கு பின்பு என்ன வரப்போகிறது என்பது பற்றியும் இந்த உலக வாழ்க்கையோடு மேற்கூறப்பட்ட இரண்டு விஷயங்களுக்கும் மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றியும் உருவான அடிப்படை சிந்தனையாகும். அதே வேளையில் இது முழுமையான ஒரு சிந்தனையாகவும் இருக்கிறது. இந்த அகீதாவிலிருந்து பிறக்கும் முறைமைகளை எடுத்துக்கொண்டால் அவை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளையும், இந்த அகீதாவை பாதுகாக்கும் வழிமுறைகளையும், மற்ற மக்களுக்கு அதை பிரச்சாரம் செய்யும் வழிமுறைகளையும் கொண்டதாக இருக்கின்றன. தீர்வுகளை அமுல்படுத்தும் வழிமுறையும், அகீதாவை பாதுகாத்தலும், அதனை பிரச்சாரம் செய்வதும், வழிமுறையை (Method - Tareeqah) பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அகீதாவும் அதிலிருந்து கிடைக்கும் தீர்வும் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது (Fikrah -Thoughts). இதன்படி, சித்தாந்தம் (Ideology) என்பது சிந்தனையையும் (Thoughts - Fikrah) வழிமுறையையும் (Method Tareeqah) உள்ளடக்கியதாக இருக்கிறது.
                                                                                                                                     
         இஸ்லாமிய சித்தாந்தத்தின் வெற்றியை குறிக்கும் இரண்டாவது விஷயம் என்னவெனில், அக்கால கட்டத்தில் இஸ்லாமிய உம்மாதான் அறிவியலிலும், கலாச்சாரத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நாகரீகத்திலும் உலகின் முன்னணி சமுதாயத்தினராக விளங்கினார்கள் என்பதுதான். கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பன்னிரெண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு உலகின் முன்னணி தேசமாகவும், மகா வல்லரசாகவும் விளங்கியது. இந்த காலகட்டம் முழுவதும் அது உலகின் பூஞ்சோலையாகவும், தேசங்களுக்கிடையில் உதய தாரகையாகவும் விளங்கிய உண்மை இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் வெற்றியையும், மக்களிடம் இஸ்லாமிய ஆட்சி முறையும் அதன் அகீதாவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் உறுதி செய்கிறது. இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய உம்மாவும் அதன் அறிவார்ந்த தலைமையை எடுத்துச் செல்லும் மகத்தான பணியினை கைவிட்டதன் காரணமாகவும், இஸ்லாத்தை புரிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் முனைப்பு காட்டாததன் காரணமாகவும், அது பலவீனம் அடைந்து மற்ற தேசங்களுக்கடையில் வீழ்ச்சியுற்றது.

            ஆகவே நாம் கூற வருவது என்னவென்றால் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைதான் சரியானது. உலகம் முழுவதற்கும் அதை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தலைமைத்துவத்தை எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் போது கடந்த காலத்தில் கண்டது போலவே அதன் வெற்றியை இன்றைய நாட்களிலும் காணலாம்.
                         இஸ்லாத்தின் அகீதாவும், அதிலிருந்து பிறக்கும் அதன் வழிமுறையும் மனிதனுடைய இயற்கை தன்மையோடு ஒத்துப் போகிறது என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம். இஸ்லாத்தைப் பொருத்தவரை மனிதனை துல்லியமாக செயல்படும் இயந்திரமாக அது பார்ப்பதில்லை. மேலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அதன் வழிமுறையை நுட்பமான கணித அளவுகோளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும்படியும் அது கோருவதில்லை. இதற்கு மாறாக, இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி. அவன் வழிமுறைகளை மாறுபட்ட திறனிலும் வேறுபட்ட தன்மையிலும் செயல்படுத்தக் கூடியவன். ஆகவே, ஒருபக்கம் இஸ்லாம் மனிதர்கள் அனைவரையும் சம தரத்தினர்கள்; எனக்கொள்ளாத அதேசமயம், மனிதர்களுக்கிடையில் உள்ள இடைவெளியை இயல்பாக குறைத்து அனைவருக்கும் மன அமைதி தரும் சூழலுக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. மறுபக்கம் சில தனிநபர்கள்; இஸ்லாமிய (முறைமையிலிருந்து) வழிமுறைகளிலிருந்து விலகி செல்வதையும், அதற்கு கட்டுப்படாது நடப்பதையும், மேலும் சிலர் அதனை உதாசீனம் செய்வதையும், அல்லது அதன் வழிமுறையை புறக்கணிப்பதையும் நாம் அங்கே அவதானிக்கலாம். தவிர்க்க முடியாத வகையில் சமூகத்தில் தீய செயல்புரிபவர்கள் (Fussaq)  குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் (Fujjar),  இறைநிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் (Murtaddun)  மற்றும் நாத்திகர்கள் (Mulhidoon)  போன்றோர் இருந்து வருவார்கள். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்லாத்தின் பார்வையில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள், செயலாக்க அமைப்புகள் (முறைமைகள்) (System) மற்றும் அதனை ஏற்றுக் கொண்ட மனிதர்கள் ஆகிய அனைத்தும் மொத்தமாகக் கருதப்படும்போது அது இஸ்லாமிய சமூகமாக கருதப்படுகிறது. அந்த சமூகம், மேற்கண்ட காரணிகள் தன்னுள் இஸ்லாத்தை கொண்டிருக்கும்போது இஸ்லாத்தை அமூல்படுத்துகிறது.

     முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளை செயல்படுத்திய அளவிற்கு வேறு எவராலும் செயல்படுத்த இயலவில்லை என்பதுதான் இதற்குரிய ஆதாரமாகும். எனினும்;, அவர்கள்(ஸல்) காலத்திலும் நிராகரிப்பவர்களும், நயவஞ்சகர்களும், இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களும், தீயசெயல் புரிபவர்களும், நாத்திகர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆகவே, இதன்மூலம் இஸ்லாம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எவரும் கோர முடியாது. மேலும் இஸ்லாம் சமூகப்பிராணியான மனிதன் மீதே தன்னை நடைமுறைப்படுத்தப்படுகிறதே தவிர இயந்திரத்தின் மீதல்ல.

       இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினாவில் குடியமர்ந்த நாளிலிருந்து காலனி ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்து, இஸ்லாத்திற்கு பதிலாக முதலாளித்துவ வழிமுறையை (ஊயிவையடளைஅ) அதனுள் கொண்டுவரும் வரை, அரபு மற்றும் அரபு அல்லாத அனைத்து இஸ்லாமிய உம்மா மீதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    ஆகவே, ஹிஜ்ரி முதல் ஆண்டிலிருந்து ஹிஜ்ரி 1336 வரை (கி.பி.1918) இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இஸ்லாமிய உம்மா அந்த காலகட்டம் நெடுகிலும் இஸ்லாமிய ஆட்சிமுறையைத் தவிர வேறு எந்த ஆட்சிமுறையையும் நடைமுறைப்படுத்தவில்லை

           முஸ்லிம்கள் தத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு அந்நிய கலாச்சாரம் தொடர்பான நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்த போதிலும், ஒரு காலத்திலும் அந்நிய சட்டங்கள், அல்லது ஆட்சிமுறை, அல்லது அரசாணை ஆகியவற்றை மொழியாக்கம் செய்ததில்லை. அவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவுமில்லை. நடைமுறைப்படுத்த சிந்தித்ததுமில்லை. இஸ்லாத்தை ஒரு வழிமுறையாக எடுத்துக் கொண்டு சிலர் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். இன்னும் சிலர் தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். இது இஸ்லாமிய அரசின் பலம் மற்றும் பலவீனத்தை பொருத்ததாகவோ, இஸ்லாத்தை புரிந்து கொண்ட பரிமாணத்தைப் பொருத்தும் அல்லது அது குறித்த குறைபுரிதல்களை பொருத்தும் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம் பலமாகவும், திருப்த்திகரமாகவும் காவிச்செல்லப்பட்ட முறையைப்பொருத்தும் அமைந்தது. முடிவாக சில கால கட்டங்களில் இஸ்லாம் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இஸ்லாமிய சமூகத்தில் ஒருவகை வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. ஆனால் இந்நிலையானது எந்த ஒரு ஆட்சிமுறையும் தவிர்த்துக் கொள்ள இயலாத விஷயமாகும். ஏனெனில் இந்நிலை ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் மனிதர்களைப் பொருத்திருக்கிறது. இருந்த போதிலும், இஸ்லாத்தை தவறாக நடைமுறைப்படுத்தியதை வைத்து இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூற முடியாது. நிச்சயமாக இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாம் அல்லாத வேறொரு வழிமுறையோ அல்லது சித்தாந்தமோ செயல்படுத்தப்படவேயில்லை. இது ஏனெனில் இஸ்லாமிய அரசு அமூல்படுத்திய ஆட்சிமுறை மற்றும் அரசாணை என்பவை இதனை வலியுறுத்தும் சான்றாகும். இந்த வகையில் இஸ்லாமிய அரசு இஸ்லாத்திற்கு அந்நியமான அரசாணைகளையோ அல்லது ஆட்சி முறையையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியதில்லை. என்ன நடந்தது என்றால் சில ஆட்சியாளர்கள் சில வழிமுறைகளை தவறாக நடைமுறைப்படுத்தினார்கள். எனினும் இதற்கு மேல் ஆழமாக பார்க்க வேண்டுமானால், வரலாறு முழுவதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்யும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவதாக, இஸ்லாத்தைப் பொருத்து தங்கள் நெஞ்சங்களில் வெறுப்பை சுமந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து வரலாற்றை நாம் எடுக்கக்கூடாது. இதற்கு மாற்றமாக, திரிக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் பொருட்டு, விரிவான ஆய்வுக்குப் பிறகு முஸ்லிம்களிடமிருந்தே வரலாறு எடுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, சமூகத்தை ஆய்வு செய்யும் பொது விதியை, தனி மனிதர்களின் வரலாற்றிலிருந்தோ அல்லது சமூகத்தின் ஏதேனும் ஒரு அம்சத்தை வைத்தோ முடிவு செய்யக்கூடாது. உதாரணமாக உமையாக்களின் வரலாற்றை தீர்மானிப்பதற்காக யெஸீதின் (Yazid) வரலாற்றை மட்டும் ஆய்வு செய்யக்கூடாது. அல்லது அப்பாஸியாக்களின் (Abbassid)  வரலாற்றை தீர்மானிப்பதற்காக, அவர்களின் சில கலீஃபாக்கள் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மட்டும் கவனிக்கக் கூடாது. அதுபோலவே சங்கீத நூல்களை வைத்து அப்பாஸியா காலத்து இஸ்லாமிய சமூகத்தை தீர்மானிக்கக்கூடாது. பொறுப்பற்ற ஊதாரித்தனமான மனிதர்களையும், கவிஞர்களையும் நூல் ஆசிரியர்களையும் பற்றி விவரிப்பதற்காக அவைகள் எழுதப்பட்டவை. அல்லது துறவறம் பற்றிய நூல்களையும் அதைப்போன்ற இதர நூல்கiளுயும் பயின்றதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகமும் ஊதாரித்தனமாகவும் பாவத்திலும் இருப்பதாகவும் அல்லது துறவறத்திலும் தனிமையிலும் இருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு எழுதப்பட்டவை அவை. மாறாக, நாம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். எனினும், இஸ்லாமிய சமூகத்தின் முழு வரலாற்றிலும் எந்தவொரு கால கட்டத்திலும் சமூகம் என்ற பார்வையில் வரலாறு எழுதப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக, சில ஆட்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பற்றிய சில விஷயங்கள்தான் எழுதப்பட்டன. இத்தகைய வரலாற்று ஆசிரியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர். அவர்கள் ஒன்று அவதூறு செய்பவர்களாகவோ அல்லது முகஸ்துதி செய்பவர்களாகவோதான் இருக்க வேண்டும். எனவே அவர்களின் கூற்றுக்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள இயலாது.

                  இந்த அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தை ஆய்வு செய்மோமானால், அதாவது அதன் அனைத்து அம்சங்களையும் விரிவான மற்றும் முறையான சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும்பட்சத்தில் அதுதான் மிகச்சிறந்த சமூகம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஹிஜ்ரி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளிலும், உண்மையாக கூறுவதென்றால் ஹிஜ்ரி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை (கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இவ்வாறே இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்ற வகையில் உதுமானிய அரசின் இறுதிக் காலம் வரையில் வரலாற்றின் நெடிய கால ஓட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமிய சமூகத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நிச்சயமாக காணலாம். இஸ்லாமிய சட்டங்களையும், ஆட்சிமுறையையும் ஆய்வு செய்வதற்கு ஆதாரமாக வரலாற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக, நீதித்துறையின் மூலங்களிலிந்து பெற வேண்டும்;. ஏனெனில் நீதித்துறையின் சான்றாக வரலாறு இருக்க முடியாது. இந்த அடிப்படையில் கம்ய+னிஸ ஆட்சி முறையை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் ரஷ்யாவின் வரலாற்றை வைத்து தீர்மானிக்க இயலாது. மாறாக கம்ய+னிஸ சித்தாந்தத்தை விவரிக்கும் நூலிலிருந்துதான் தீர்மானிக்க வேண்டும். இதுபோலவே இங்கிலாந்து நாட்டின் நீதி நெறியியலை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், இங்கிலாந்தின் வரலாற்றைப் பார்க்கக் கூடாது. மாறாக இங்கிலாந்தின் நீதிநெறி அடிப்படைடையை (Jurieprednece)  பார்க்க வேண்டும். இது எந்தஒரு ஆட்சி முறைக்கும் அல்லது அரசாணைகளுக்கும் (Canons)  பொருந்தும்.

        தனக்கு உரித்தான அகீதாவையும் ஆட்சிமுறையையும் கொண்ட சித்தாந்தம்தான் இஸ்லாம். அதை விளங்கிக் கொள்ள விரும்பும் ஒருவர், இஸ்லாத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்திற்காகவும், இஸ்லாமிய சட்டங்களான அஹ்காமை ஏற்படுத்துவதற்கும் இஸ்லாத்தின் வரலாற்றை ஆதார மூலமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

      இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டங்களை விளக்கும் நூல்களும் இஸ்லாத்தின் சட்டங்களை யாப்பதற்கு அதற்கு அடிப்படையாகவுள்ள ஆதாரங்களுமே உரிய மூலங்களாக இருக்கின்றன. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறையை ஆய்வு செய்வதற்கோ அல்லது இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கோ, அல்லது இஸ்லாமிய சட்டங்களை  ஆய்வு செய்வதற்கோ வரலாறு சரியான ஆதார மூலமாக கொள்ளப்படமாட்டாது.

                எனவே, அஹ்காம் ஷரிஆவிற்கு ஆதார மூலமாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அல்லது ஹாரூன் அல் ரஷீத் (ரஹ்) ஆகியவர்களின் வரலாறுகளை எடுத்துக் கொள்வது தவறான முறையாகும். அது அவர்கள் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் காலத்தில் எழதப்பட்ட நூல்களாக இருந்தாலும் சரியே. ஒரு விஷயத்தில் உமர்(ரழி) அவர்களுடைய கருத்து பின்பற்றப்பட்டிருக்குமேயானால் அது யாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஹ{க்கும் ஷரிஆ என்ற அந்தஸ்த்தில் மட்டும்தான் பின்பற்றப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு இமாம் அப+ ஹனிஃபா (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் ஜாஃபர் (ரஹ்) ஆகியோர் ஹ{க்கும் ஷரிஆவை யாத்து அளித்தார்களோ அதுபோன்றதுதான். ஏனெனில் அது ஒரு வரலாற்று நிகழ்வாக பின்பற்றப்படவில்லை. இதன் அடிப்படையில் இஸ்லாமிய (முறைமையை) செயலாக்க அமைப்பை (System of Islam) நிதாம் அல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது மற்றும் அதை அறிந்து கொள்வது ஆகியவற்றுடன் வரலாற்றுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும், ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு வரலாற்றைவிட இஸ்லாமிய சட்டங்கள்தான் பொருத்தமான சிறந்த சான்றாக இருக்கும். இது ஏனெனில், ஒவ்வொரு கால கட்டமும் ஒவ்வொரு பிரச்சினைகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது. அவைகள் ஒரு செயலாக்க அமைப்பைக் கொண்டே கையாளப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட செயலாக்க அமைப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இஸ்லாமிய சட்டங்களைப் பார்க்க வேண்டுமே தவிர வரலாற்று சம்பவங்களை அல்ல. ஏனெனில் அவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றிய செய்தியைத்தான் வரலாறு நமக்கு அறிவிக்கிறது. இஸ்லாமிய சட்டங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவரால் இஸ்லாமிய நிதாமைத் தவிர வேறொன்றையும் காண முடிவதில்லை என்பதுடன். முஸ்லிம்கள் தாங்களாகவே வேறொரு நிதாமை தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமில்லை என்பது புலனாகும். இதற்கு மாற்றமாக, அங்கே ஷரிஆ ஆதாரங்களிலிருந்து யாக்கப்பட்ட அஹ்காம் ஷரிஆவையே முழுக்க முழுக்க காண நேரிடுகிறது. குறையுள்ள (பலகீனமான) இஜ்திஹாத்தை நீக்கியது மூலமாக முஸ்லிம்கள் நீதி நெறியை (Juripredence)  மிக எச்சரிக்கையாகக் கையாண்டார்கள். முஜ்தஹித் முத்தலக்குடைய இஜ்திஹாத் என்ற போதிலும் அது குறையுள்ள  இஜ்திஹாதாக இருக்கும்பட்சத்தில் அதை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்கள் தடை செய்தார்கள

                  இதன் விளைவாக இஸ்லாமிய உலகின் அனைத்துக் காலகட்டத்திலும், இஸ்லாமிய சட்டங்களைத் தவிர இஸ்லாம் அல்லாத அரசாணை (Canon)  ஒன்றைக் கூட காண முடியவில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரேயொரு நீதி நெறி அடிப்படை மட்டுமே இருந்தது என்பதும் அங்கே வேறு அந்நிய அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதும், அந்த சமுதாயம் அதன் அரசாணைகளில் வேறொரு நீதி நெறியை பயன்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக (ஆதாரமாக) திகழ்கின்றன.

           வரலாற்றில் கவனம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால், முறைமையை (நிதாம்) எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆய்வு செய்வதோடு மட்டும் அது குறுகிவிடும். வரலாறு அரசியல் நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டதாக இருக்கலாம், அதிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட்ட நிதாம் (செயலாக்க அமைப்பு) தெரிய வரலாம். என்றாலும் கூட முஸ்லிம்களிடமிருந்து வரலாறு எடுக்கப்படாத வரை, அது முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை, அது வரலாறாக அது எடுத்துக்கொள்ளப்படாது. வரலாறு மூன்று மூலங்களிலிருந்து கிடைக்கிறது: அவை வரலாற்று நூல்கள், தொல்பொருள் படிவங்கள் மற்றும் அறிவிப்புகள்(Narration).  வரலாற்று நூல்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, ஏனெனில் அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழலின் செல்வாக்கு அதனைப் பாதித்திருக்கலாம். அல்லது அவைகளில் பொய்கள் நிறைந்திருக்கலாம். அல்லது எந்த காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டனவோ அந்த காலகட்ட மனிதர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது இந்த நூல்கள் எழுதப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் இருந்தவர்களை சாடும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் எகிப்து நாட்டின் அல்லாவைது(Allawide)  குடும்பத்தின் வரலாறு ஆகும். கி.பி.1952-க்கு முன்பு உள்ள வரலாற்று நூல்களில் அந்த குடும்பத்திற்கு பிரகாசமான நற்பெயர் இருந்தது. ஆனால் கி.பி.1952க்கு பிறகு அந்த குடும்பத்தின் பெயர் வரலாற்றில் மங்கிப் போனது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அரசியல் நிகழ்வுகளின் வரலாற்றில் இதே நிலைதான் இருந்து வருகிறது. இந்த காரணத்தால் சுய சரிதங்கள் அதன் மக்களால் எழுதப்பட்ட போதிலும் மெய்யான வரலாற்றை கணிப்பதற்கு வரலாற்று நூல்களை அதற்கு மூலமாகக் கொள்ளக்கூடாது.

          தொல்பொருள் படிவங்கள் (Archaeological Objects) நேர்மையான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் அதிலிருந்து வரலாற்று தகவல்கள் கிடைக்கக்கூடும். அவைகள் வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பற்றியக் குறிப்பை அளிக்க முடியாவிட்டாலும் நிகழ்வுகள் நடந்த குறிப்பை அளிக்கக்கூடும். இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் பழங்காலத்து படிவங்களை அது கட்டிடமாக இருந்தாலும், கருவிகளாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகையான பொருட்களாக இருந்தாலும் சரி, ஒருவர் ஆய்வு செய்தால் இஸ்லாமிய ஆட்சிமுறை இஸ்லாமிய சட்டங்கள் என்பவற்றைத் தவிர இஸ்லாமிய பூமியில் வேறு எதையும் அவர் காணமாட்டார். மேலும் அவர் இஸ்லாமிய வழிமுறையின்படியே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.

                                       மூன்றாவது ஆதார மூலமான அறிவிப்புகளை (Narration) பொருத்தவரை அது ஒரு சரியான ஆதார மூலமாக இருக்கிறது. அந்த அறிவிப்பு சரியானதாக இருக்கும்பட்சத்தில் நாம் அதை நம்பலாம். மேலும் ஹதீஸ்கள் எந்த வழிமுறையில் திரட்டப்பட்டதோ அதே வழிமுறையில் தான் இவைகளும் திரட்டப்பட்டன. வரலாற்றை இந்த முறையில்தான் தொகுக்க வேண்டும். முஸ்லிம்கள் எழுதுவதற்கு ஆரம்பித்தவுடன் இந்த முறையைதான் பின்பற்றினார்கள். அத்தபரியின் (At - Tabari)  வரலாறு, இப்னு ஹிஷாமின் (Ibn Hishem)  சீறா போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த வரலாற்று நூல்கள் யாவும் இந்த முறைப்படியே எழுதப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வரலாற்று நூல்களிலிருந்து போதிக்கக்கூடாது. ஏனெனில் அவைகளுக்கு இஸ்லாமிய ஆதார மூலம் எதுவும் இல்லை. எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய நிதாம்  நடைமுறைப்படுத்தப்பட்டதை பற்றிய அனைத்துக் கண்ணோட்டத்தையும் இந்த நூல்களிலிருந்து எடுக்கக்கூடாது. முடிவாக, இஸ்லாமிய அரசின் முழு காலகட்டத்திலும் இஸ்லாம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. வேறு எந்த அந்நிய செயலாக்க அமைப்பும் Nidam - System) நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

                    எனினும் முதல் உலகப்போரில்  இறுதிகட்டம் கூட்டணி படைகளின் வெற்றியில் முடிவடைந்தது. அந்த போரின் தளபதி பொறுப்பை ஏற்றிருந்த லார்டு ஆலன்பி (Lord Allenby)  ஜெருசலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது, இப்போது சிலுவை யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அறிவிப்பு செய்யும் அளவிற்கு அவர்களின் வெற்றி நிலை உட்சத்தில் இருந்தது. அதன் பின்னர், காலனி ஆதிக்க குஃப்பார்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தி நமக்கு எதிராக பெற்ற வெற்றியை தொடரும்படி செய்தார்கள். ஆகவே இந்த அழிகிப்போன ஊழல் மிகுந்த ஆட்சிமுறையை நிச்சயமாக நாம் புறக்கணித்து விட வேண்டும். ஏனெனில் அதனைக் கொண்டு தான் நமது தேசங்களை அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இத்தகைய மோசமான, சீர்கேடான முறைமையை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் பிடிங்கி எறிய வேண்டும்.

           நமது இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு பதிலாக அந்நிய ஆட்சிமுறையை கொண்டு வரலாம் என்ற சிந்தனை வீழ்ச்சியினால் ஏற்படும் மேம்போக்கான எண்ணமாகும். மேலும், அதன் அகீதாவை விட்டுவிட்டு ஆட்சிமுறையை நடைமுறைபடுத்தினால் அது உம்மாவை பாதுகாக்கும் என்று கருதுவதும் கருத்தாழம் இல்லாத சிந்தனையாகும். எனவே இஸ்லாமிய உம்மா முதலில் அகீதாவை தழுவ வேண்டும். பிறகு அந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து (அகீதா) பிறந்த ஆட்சிமுறையை அமூல்படுத்த வேண்டும். ஆட்சிமுறையை அமல்படுத்துவதும் அகீதாவை தழுவிக் கொள்வதும் தான் நம்மைக் காப்பாற்றும். இது உம்மாவின் மீது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய உம்மா என்பது இஸ்லாமிய சித்தாந்தத்தின் மீதும், இஸ்லாமிய அரசு மீதும் நிலைக் கொண்டிருக்கிறது. அதன் அரசு அகீதா என்னும் அடிப்படை மீது தான் நிறுவப்பட்டிருக்கிறது. மற்ற மக்களையும், நாடுகளையும் பொருத்தவரை, அவர்கள் மீது இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் முன்னேற்பாடாக இதை அவர்கள் தழுவ வேண்டிய அவசியமில்லை. இந்த சித்தாந்தத்தை தழுவி அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சமுதாயம், மற்றவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்ற போதும் அதை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த முடியும். இது ஏனெனில் இந்த சித்தாந்தத்தின் விளைவாக அதை தழுவியுள்ள சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் போது மற்றவர்களையும் கவர்ந்திழுத்து நம்பிக்கைக் கொள்ளச் செய்யும். ஆகவே, சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றவர்கள் அதை தழுவ வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. மாறாக அதை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அது ஒரு மிக முக்கிய நிபந்தனையாகும்.

          பொதுவுடமை கோட்பாட்டோடு இணைத்து தேசிய வாதத்தை ஏற்றுக்கொள்வது ஆபத்தான செயலாகும். பொதுவுடமை கோட்பாடு அதன் இயற்பொருள்வாத சிந்தனையிலிருந்து (Meterialistic thought)  பிரிக்கப்பட முடியாதது. ஏனெனில் அந்நிலையில் அது ஆக்கப்ப+ர்வமானதாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்த ஆற்றல் பெற்றதாகவோ இருக்காது. இயற்பொருள்வாத சிந்தனையோடு பொதுவுடமை கோட்பாட்டை சேர்த்து அமூல்படுத்த இயலாது. ஏனெனில் அது எதிர்மறையான சிந்தனையாகவும்  (Negative thought) மனித இயல்புக்கு (Fitrah)  முரண்பாடானதாகவும் இருக்கிறது. மேலும் இதை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் என்னவென்றால் இஸ்லாமிய சமுதாயம் இஸ்லாமிய அகீதாவை கைவிட்டு விட வேண்டும் என்பதுதான். ஒரே நேரத்தில் பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய ஆன்மீக அம்சங்களை தக்கவைத்துக் கொள்வதென்பது நம்மால் இயலாது. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது என்ற உண்மையின் அடிப்படையில் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, பொதுவுடமை கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலையில் இது முடிந்து விடும். பின்பு நாம் ஏற்றுக் கொண்டவைகள் முழுமையற்றதாக ஆகிவிடும். அது போலவே இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு  அதன் அகீதாவிலிருந்து பிறப்பதினால் அகீதா இல்லாத நிலையில் செயலாக்க அமைப்பான நிதாமை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் ஆன்மீக அடிப்படை இல்லாத அதிகாரப் போக்குடைய நிதாமை ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தை முழுமையாக அதன் அகீதாவோடும், செயலாக்க அமைப்பான நிதாமோடும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை (Da’awa)  மேற்கொள்ளும் போது அதன் அறிவார்ந்த தலைமையை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

         இதன் அடிப்படையில் நாம் மறுமலர்ச்சி எய்துவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதுதான் அந்த வழியாகும். மேலும் இஸ்லாமிய அரசு ஒன்றை நிர்மானிப்பதைத் தவிர இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு வேறு எந்த வழியும் எமக்கில்லை. அகீதா என்றளவிலும் (முறைமை) செயலாக்க அமைப்பு (Nidam)  என்ற அளவிலும் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் ஒழிய இதை நம்மால் செய்து முடிக்க இயலாது. அகீதா என்றளவில் அது மனிதனின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கிறது. அதன் மீது தான் மனிதனின் இந்த வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் குவிந்து கிடக்கிறது. ஆட்சிமுறைப் போன்ற அனைத்து செயலாக்க அமைப்புகளும் அதன் அகீதாவிலிருந்தே பிறக்கின்றன. இந்த செயலாக்க அமைப்பின் (Nidam)  அடிப்படை அல்லாஹ்(சுபு)வின் வேதநூலும், அவனுடைய திருத்தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவும் தான். இஸ்லாமிய சட்டங்கள், ஹதீஸ்கள், குர்ஆன் விரிவுரை (tafseer), அரபு மொழி ஆகியவைகளும் மற்றவைகளும் அதன் கலாச்சார புதையலாக இருக்கின்றன. இஸ்லாத்திற்காக அதன் அறிவார்ந்தத் தலைமையை அழைப்புப் பணி (Da’awa)  மூலம் எடுத்துச் சென்று உலகெங்கிலும் இஸ்லாத்தை நிர்மானிப்பதற்கு இஸ்லாமிய வழிமுறையைத் தவிர வேறொரு வழிமுறையும் பயன்படாது. ஒருமுறை முழுமையாக இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை இஸ்லாமிய சமுதாயத்திற்கும், மற்ற சமுதாயத்திற்கும் எடுத்துச் சென்றுவிட்டால் உலகிற்கு இந்த அறிவார்ந்தத் தலைமையை எடுத்துச் செல்லும் முயற்சியை துவங்கி விட்டவர்களாக நாம் ஆகிவிடுவோம். மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு இதுதான் ஒரே வழி. முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பும் விதத்தில், இஸ்லாமிய அறிவார்ந்தத் தலைமையை முஸ்லிம்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பிறகு இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவி அந்த அரசு மூலமாக முழுமனித சமுதாயத்திற்கும் இஸ்லாத்தை எடுத்து இயம்பிடவும் வேண்டும்.


No comments:

Post a Comment