Thursday, January 2, 2014

முஸ்லீம் உம்மவே காலத்தின் தேவை எது !?


"சிந்தனா ரீதியான ரித்தத் நடக்கின்றது ஆனால் அபூபக்கரை (ரலி ) காணவில்லை "
                                                                      - அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ் )-

                     முஸ்லிம் உம்மத்தின் சிந்தனை வீழ்ச்சியின் உச்ச விளைவையும் ,இத்தகு அதி பயங்கர ஆபத்தை எதிர்கொள்ளக் கூடிய வெற்றிகரமான ஒரு பொறிமுறை பற்றியும் ரத்தினச் சுருக்கமாக மேலே தந்த வார்த்தைகள் விளக்கி நிற்கின்றன . இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவலகரமான வாழ்வும் ,அடிமைத்துவ அரசியல் மனப்பாங்கும் ஒரு இலட்சியவாத சமூகத்தை ஒரு கோழைத்தனமான வடிவில் காட்டி நிற்கின்றது .அத்தோடு இந்த முஸ்லீம் உம்மத்தின் ஒரே தெரிவான இஸ்லாம் எனும் வாழ்வியல் சாதாரண மதச் சடங்கு வடிவில் பேணப்பட அதற்குள்ளும் முரண்பாடுகள் !! இந்த பற்றி எரியும் உள்வீட்டுச் சண்டையில் எண்ணை ஊற்றி அத்தகு பிரிவினையை தமது ஆதிக்க அரசியலுக்கு சாதகமாக பயன் படுத்துகிறான் குப்ரிய எதிரி !


                ('POOR MAN'S WORDS HAVE LITTLE WEIGHT')ஏழை சொல் அம்பலம் ஏறாது .என்பது ஒரு பிரசித்தமான பழமொழி .வெளித் தெரியக்கூடிய ஆதிக்கத் திறனும் ,அதன்மூலம் வளத்தையும் ,பலத்தையும் பிரயோகிக்கும் சக்தி இல்லாத நிலையில் ஒரு நல்ல விடயத்தையும் உலகம் கணக்கில் எடுக்காது .என்ற அனுபவ பூர்வமான உண்மையை சுவைத்து சொல்லப்பட்டது தான் இந்தப் பழமொழி . அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) சீறா இத்தகு பாடத்தை கற்றுக்கொள்ள சிறந்த உதாரணமாகும் . அதாவது அகீதா பலம் ,சகோதரத்துவ பலம் , இராணுவ வலிமை என்ற மூன்று அடிப்படைகளை முதல் இட்டே இஸ்லாத்தின் வரலாறு கட்டமைக்கப் பட்டது எனும் பேருண்மையை இங்கு பாடமாக பெற முடியும் .

               இன்று இஸ்லாம் ஒரு சிறந்த வெற்றிகரமான பிரயோக உதாரணத்தை காட்டிச் சென்றது என்று கூறினால் முஸ்லிமுக்கே அதில் சந்தேகம் இருக்கின்றது . சிலர் அதை வெளிப்படையாகவே பேசியும் விடுகிறார்கள் .அதாவது காலத்தின் தேவை என்ற முன்னுரிமைப் பிரகாரம் காலம் இடம் என்பன இஸ்லாத்தின் அகீதா முதல் இபாதா வரை மாற்றத்தை வேண்டி நிற்கும் என்று கூறுகிறார்கள் . அதாவது மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என்று சிந்திக்காமல் ,மாறும் உலகம் இஸ்லாத்தையும் மாற்றும் சக்தி வாய்ந்தது என்று கூறி விடுகிறார்கள் ! இத்தகு மனோ பாவத்துக்கான ஒரே காரணம்  முஸ்லீம்களாகிய நாம் இஸ்லாம் அல்லாத நாகரீக கலாச்சார அதிகார அரசியலுக்கு கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதே ஆகும்   .


       இன்னும்  இந்த ஆபத்தான வாழ்வுமுறையின் கீழ்  யார் எதை சொன்னாலும் அந்த விடயம் பற்றி தீர்க்கமான தேடலும் பார்வையும் இல்லாமல் ஏற்றுக்கொள்வது ,அல்லது விடயத்தை கண்டும் காணாமல் விடுவது எனும் மனப்போக்கிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது . முஸ்லீம் உம்மத்தின் மத்தியில் இஸ்லாத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் யாரும் எவ்வாறான கருத்தையும் முன்வைக்கலாம் அதை ஏற்றுக் கொள்வதும் தவிர்ந்து கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் தனிப்பட்ட உரிமை ! இத்தகு கருத்துச் சுதந்திரத்தை யார் கற்றுத் தந்தது!? அல்லாஹ்வின் தூதரா (ஸல் ) அல்லது இன்று உலகை ஆளும் குப்ரிய சித்தாந்தமா !? அகீதாவை அசைக்கும் கருத்துகளையும் யாரும் சொல்லி விட்டு போகலாம் !? அதற்காக நீயும் மேடை போட்டு வேண்டுமானால் பேசலாம் ! இத்தகு மனோபாவம் முஸ்லீம் உம்மத்தை எங்கே இட்டுச் செல்லும் !? இதில் நடப்பது என்ன ?யாருக்கு இலாபம் !?

             பலவீனமான அகீதா , சிதைந்த சகோதரத்துவம் , பாதுகாப்பற்ற பலவீனமான கள நிலவரம் , இந்த உம்மத்தின் இன்றைய உருவம் இதுதான் !!! இதற்குள் நான் சரி நீ பிழை எனும் இயக்க வாதம் ! அது எங்கே கொண்டு சென்றுள்ளது !? இப்லீசை பிடித்து 'மிம்பர்' ஏற்றியாவது தமது நிலைபாட்டை சரிகாட்டி நிற்கும் 'லாஜிக் ' தவ்வா !? அதற்குள் அடிதடி ! தீர்ப்புக் கேட்க தாகூதிய நீதிமன்றம் !? இது அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) எந்த (உஸ்வதுள் ஹசனா) அழகிய முன்மாதிரியில் இருக்கின்றது !? நிச்சயமாக இதுதான் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் எனும் கேவலமான அரசியல் ஆகும் . 

               இன்னும் அகீதா ,சகோதரத்துவம் , பாதுகாப்பு எனும் இஸ்லாமிய அரசியல் வடிவத்தை சிந்திப்பது , அப்படி சிந்தித்து செயட்படுபவர்களோடு கைகோர்ப்பது , இத்தகு வாழ்வுக்காக போராடுவது , இத்தகு போராட்டத்தில் மட்டுமே சுகம் காண்பது ;இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தந்தது . சஹாபாக்கள் செய்து காட்டியது . அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) மரணத்தின் பின் இந்த முஸ்லீம் உம்மத் சிந்தித்த முதலாவது இடமே தமது ஒரே தலைமையும் ,அதற்கு கட்டுப்படுவதும் எனும் அதிகார அரசியலே.

               இதுதான் சகாத் கொடுக்க மாட்டோம் என மிரண்டு பிடித்த கூட்டத்தை ,பணிய வைத்தது , அகீதாவை அசைத்த பொய் நபித்துவ வாதத்தை துடைத் தெரிந்தது . அன்றைய வல்லரசுகளையே பணியவும் ,கட்டுப்படவும் வைத்தது .என்று இந்த ஓர் தலைமை வரலாற்றை தொலைத் தோமோ அன்றில் இருந்தே அவலமான கேவலமான வாழ்வு இன்றுவரை எம்மை பின் தொடர்கிறது என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்து விடக்கூடாது . எனவே நாம் சிந்திக்க வேண்டிய ஒரே திசை எமது சகோதரத்துவமும் எமக்கான ஒரே தலைமையும்  பற்றியது மட்டுமே .  

No comments:

Post a Comment