Sunday, October 14, 2012

குதறி மறைக்கப்பட்ட 'அபீ ஹம்சாவும்' வெடி தீர்த்து வெளிக்கொண்டுவரப்படும் 'மலாலா யூசுபும் '!




                 ஒரு மோசமான எதிரியோடு முஸ்லீம் சமூகம் மோதிக்கொண்டிருக்கின்றது. பேணப்பட வேண்டிய எந்த யுத்த தர்மத்தையும் புறக்கணித்து தமது சிந்தனா மேலாதிக்கத்தை மட்டுமே இவர்கள் முதல் நிலைப் படுத்துவார்கள் . வயது வித்தியாசம் மற்றும் யுத்த தர்மங்கள் தங்களது சாதக பாதகத்தை கருத்தில் கொண்டே பேணப்படும் . இந்த சுயநலவாத தான் தோன்றித்தனம் தான் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தெளிவான விதி . அதை தங்கள் மீடியா யுத்தத்திலும் தாராளமாக பேணுவார்கள் என்பதன் உதாரணமே நான் கீழே தரப்போகும் உண்மைகளாகும் .


      'அபீ ஹம்சா , மலாலா யூசுப் ' இந்த இருவரும் முஸ்லீம் உம்மத்தின் கருவறையில் இருந்து உதித்த மொட்டுக்கள் .இந்த இரண்டு பெண் சிறுமிகளிலும் அபீஹம்சா ஈராக்கையும் ,மலாலா யூசுப் ஆப்கானிஸ்தானின் ஒரு எல்லை கிராமத்தையும் சேர்ந்தவர்கள் .இந்த இரண்டு பேர் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் விதங்கள் வேறுபட்டாலும் அபீ ஹம்சாவின் சம்பவம் மறைக்கப்பட்டதட்கும் , மலாலா யூசுபின் சம்பவம் வெளிக்கொண்டு வரப்படுவதட்கும் காரணம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை நியாயம் காட்டுவதும் இஸ்லாத்தை பிழை காண்பதுமே ஆகும் .


                   யார் இந்த அபீ ஹம்சா ? இவர் அமெரிக்க நேடோ  கூட்டு ஈராக் ஆக்கிரமிப்பின் பின் அமெரிக்க இராணுவத்தின் கூட்டு பாலியல் பலாத்காரத்தின் பின் குடும்பத்தோடு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட முஸ்லீம் சிறுமி(அவ்வாறான பலர்களில் ஒருவர் ) . மலாலா யூசுப் ஆப்கானிஸ்தானில் மேற்குலகால் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகா தேர்ந்தெடுக்கப்பட்டு தாலிபான் போராளிகளால் சுடப்பட்டவர் ; என்று மேற்குலகின் மீடியாக்கள் கூறும் சிறுமி .இங்கு அபீஹம்சாவின் சம்பவம் இதே மீடியாக்களால் மறைக்கப்பட்டது , தந்திரமாக புதைக்கப்பட்டது காரணம் அது அந்த முதலாளித்துவ ஏகாதி 
பத்தியத்தின் மீது கறுப்புப் புள்ளியாகிவிடும்! அதே நேரம் தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா யூசுப் இன் சம்பவம் பகிரங்கப் படுத்தப்படுகின்றது காரணம் அது இஸ்லாத்தின் மீது கறுப்புப் புள்ளியாகிவிடும் !


                     இங்கு முஸ்லீம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த மீடியாக்களின் இரட்டை நிலைப்பாடு பற்றியே . மலாலா யூசுபின் சம்பவம் தொடர்பில் எம்மால் ஒரு தீர்க்கமான முடிவை சொல்ல முடியாதுள்ளது . ஆனாலும் தெளிவாக இன்னொரு உண்மையும் தெரிகிறது அது இந்த மேற்குலக மீடியாக்களால் பலி கொடுக்க என்றே வளர்க்கப்பட்ட பலிக்கடாக்களில் ஒருவர் . தன்மீது ஒரு தெளிவான 
அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்பதையே அந்த புரிந்து கொள்ள முடியாத சிறுமி.ஆகவே யார் குற்றவாளி ? ! ( அமெரிக்க கூலிப்படையான black water teem ஆப்கான் முழுதும் பரந்து காணப் படுகிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் ).


1 comment:

  1. in this media war ,people looking the westan as a justis. this point is dangerous for muslim while best achivement for westan kuffar .but every muslim should know kuffar cant be a justis and kuffar is our enemy.

    ReplyDelete