Thursday, October 31, 2013

“குளோபல் ஜிஹாத்" சிரிய ஜிஹாதாகிய கதை - சிரியாவில் நடக்கும் ஜிஹாதை கைவிடுமாறு கோரும் சவுதியின் அரண்மனை முஃப்தி!!




by:Abu Sayyaf

    மாறும் அரசியல் நலன்களிற்காக ஜிஹாத்திற்கு ரிவேர்ஸ் கியர் போடும் சவுதி தலைமைத்துவங்கள் 
தமிழ் சினிமாவில் முதல் பாதியில் ஒரு கதையும் இடைவேளையின் பின் மறு பாதியில் திருப்பங்களுடன் கூடிய இன்னொரு கதையும் வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். இன்றைய சர்வதேச அரசியலிலும் சிரியா விவகாரத்தில் இவ்வாறான சில திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பஸர் அல்-அஸாதை எதிர்த்து நடந்த உள்நாட்டு போரில் அரச எதிர்ப்பாளர்களிற்கு அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஆயுத, நிதியுதவியளித்தன.

    டமஸ்கஸ்ஸை மெல்ல நெருங்கி வெற்றியை நோக்கி இஸ்லாமிய போராளி அமைப்புக்கள் நகர்ந்த போது அமெரிக்க செனட்டில் “நெருங்கி வரும் இஸ்லாமிய போராளிகளின் அபாயமும் அவர்களால் உருவாக்கப்படவிருக்கும் சிரிய இஸ்லாமிய இராஜ்ஜியமும்” பற்றி விரிவாக ஆராயப்பட்டது. பல அமெரிக்க தலைவர்கள் இஸ்லாமிய இயக்க மேலாதிக்கம் பற்றி அமெரிக்க அரசை எச்சரித்தனர். 

      சிரிய சண்டைக்களங்களில் போராடும் அமைப்புக்களில் ஸலபி சார்பு அணிகளின் இராணுவ மேலாதிக்கமும், அல்-காயிதா சார்பு ஜபாஃ அல்-நுஸ்ராவின் தலைமைத்துவமும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களை அச்சமடையவைத்தன. நாளை இதன் தாக்கம் சவுதியில் பாரிய மாற்றங்களை கொண்டு வரும் என எண்ண வைத்தது. எகிப்தில் இஹ்வான்களின் வேகம் கண்டு கலங்கியே அந்த அரசை கவிழ்த்தது சவுதி அரேபியா. இப்போது புதிய தலைவலி. 

       சவுதி அரேபிய அரசின் தலைமை மதகுரு Abdul-Aziz ibn Abdullah Aal ash-Shaikh அவர்கள் சிரியாவில் போராடும் போராளிகளிற்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் “சிரியாவில் நடக்கும் ஜிஹாதை உடனடியாக கைவிட வேண்டும் என வேண்டியுள்ளார். யாரெல்லாம் அங்கு போராடுகிறார்களோ அவர்கள் உடன் தங்கள் நாடுகளிற்கு திரும்ப வேண்டும் என்றும் அப்படி திரும்புபவர்களில் சவுதி அரேபியர்கள் இருந்தால் அவர்களிற்கு எதிர்காலத்தில் எந்த சட்ட பிரச்சனையும் ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.

“சிரியாவிற்காக சிரிய மக்கள் போராடட்டும். அது அவர்களின் போராட்டம். அவர்களிற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் பிரார்த்தணைகளே. ஆயுதப்போராட்டமல்ல” என்றும் ஷேய்ஹ் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் கருத்து வெளியிட்டுள்ளார். முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொலை செய்வதை கடுமையாக விமர்சனம் செய்த அவர் அரசியல் நலன்களிற்காக முஸ்களை பரஸ்பரம் கொலை செய்வதை கொடி பாவம் என தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான பூமியில் முஜாஹித்களிற்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுமுள்ளார். 

ரியாதில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் Aal ash-Shaikh and Saleh al-Fawzan உடன் மன்னர், Abdul-Aziz ibn Abdullah Aal ash-Shaikh அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய மன்னர் ஜிஹாத்திற்காக மக்களை அழைப்பு விடுக்கும் அழைப்பாளர்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவது பற்றியும் பிரஸ்தாபித்துள்ளார். 

No comments:

Post a Comment