
('மைனோரிட்டி பிக்ஹ் ' ஒரு கொல்லை நோய் ஆக முஸ்லீம் உம்மத்தை பீடித்திருக்கும் ஒரு சாபக்கேடு . அது பாவத்தை நன்மையாக்கி விடுகிறது . குப்ரின் கீழ் அடிமை வாழ்வில் நிர்ப்பந்தத்தை காரணம் காட்டி முஸ்லிமை பணிந்து போக அது அழைக்கிறது . இறை திருப்தி ,தாகூத்தின் திருப்தி என்ற முரண்பட்ட எதிர் சக்திகளுக்கு இடையில் ஒரு சமரச தீர்வாக அது ஆகிவிடுகிறது .இப்போது ஒரு முஸ்லிம் தான் யாருக்காக ?எதற்காக ?வாழ்கிறேன் ?எனக்கான வாழ்வியல் விவகார சட்டங்களை யார் தீர்மானிக்கிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதிலை தேடும் தேடும் போது . கசப்பான பதிலாக 'குப்ர்' என்ற கொடுமை விடையாகி விடுகிறது . இந்த உண்மையை புலப்படுத்த ஒரு சிறு பதிவு . - அபூ ருக்சான் - )
ஹுப்புத் துன்யாவின் அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும்
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில்
ஒரு பந்தயக்குதிரை போல !








இஸ்லாம் மேலோங்க வேண்டும் என அதற்காக தம்மை அர்ப்பணித்து உழைத்து நிற்கும் வீரர்களின் தேடல் தேசம் தாருல் இஸ்லாம் மட்டுமே . அவர்கள் எதிர்பார்க்கும் பறந்து விரிந்த தேசியம் இஸ்லாமாகவே இருந்தது .இத்தகு தூய இலட்சியத்தோடு புறப்பட்ட மனிதர்களின் துணிவுக்கு முன் சோதனைகள் தூசி போல் ஆகின ! இழப்புகளை நாளை இறைவன் முன் தம் செயல்களுக்கான ஆதாரமாக்க சேமித்துக் கொண்டார்கள் .இவர்களது புறப்பாடுகள் வீரத்தையே அச்சம கொள்ள வைத்தது !"வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு ;அல்லது வீழ்ந்தால் சஹீத்களாக வீர சுவனம் ." எனற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முன்னால் தாய் ,தந்தை மனைவி பிள்ளைகள் , செல்வங்கள் ,பிறந்த மண் இப்படி எல்லா வற்றையும் இரண்டாம் மூன்றாம் பட்சமாக்கியது .






