Thursday, November 8, 2012

மீண்டும் வேதம் ஓத அதே அமெரிக்க சாத்தான் !!!சந்திக்க முஸ்லீம் உம்மா தயாரா ??

    சியோனிச  ஜனாதிபதித் தேர்­தலில் தற்போதைய ஜனாதிபதியும், ஜன­நாயக சியோனிசக் கட்சியின் வேட்பாள­ருமான பராக் ஒபாமா (வயது - 51) தம்மை எதிர்த்­துப் போட்டியிட்ட குடியரசு சியோனிசக் கட்சியின் வேட்பாளரான மிட்ரோம்னியைத் தோற்கடித்து இரண்டாவது தடவையும் வெற்றிபெற்றுள்ளார்.

 
சியோனிச ஜனாதிபதியாகத் தெரி­வாக 270 வாக்குகள் தேவை. அமெ­­ரிக்­காவில் செவ்வாய்க்கிழமை நடை­பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா 274  வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டி­யிட்ட மிட்­ரோம்னி 201 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்­ளார்.
ரோம்னியைவிட 73 மேலதிக வாக்கு­ களைப் பெற்று மீண்டும் வெற்றி­பெற்றுள்ள ஒபாமாவுக்கு அடிவருடும்  உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்­துள்­ளனர். அதேவேளை, பராக் ஒபாமா டுவிட்டர் இணையதளம் மூலம் சியோனிச ஜனாதிபதித் தேர்­தலில் தம்மை வெற்றிபெறச் செய்த சியோனிச பெரு­மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சியோனிச தலைவனாக  பதவி வகிக்க வாய்ப்பளித்த சியோனிச  மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் ஜனநாயக சியோனிச கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும், குடியரசு சியோனிச கட்சி வேட்பாளர் மிட்ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.  துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக ஜனநாயக சியோனிசக் கட்சி சார்பில் ஜோ பிடேனும், குடியரசு சியோனிசக் கட்சி சார்பில் போல் ரயானும் களத்தில் இருந்தனர்.
கடந்த 18 மாதங்களாக இருசியோனிச கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார்கள். மும்முறை நேரடி விவாதங்களிலும் பங்குபற்றினார்கள். பராக்      ஒபாமா கடந்த நான்கு ஆண்டுகளாக தமது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், தொழில் வாய்ப்புகள், தமது அபிலாஷைகள் ஆகியவற்றை விவரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி, ஒபாமா நிர்வாகம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என விமர்சித்துவந்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சுமத்திவந்தார். 
அவ்வப்போது  கருத்துக் கணிப்புகள் இடம்பெற்றன. இவற்றில் இருவருக்குமான ஆதரவில் நூலிழை வித்தியாசமே உள்ளது என்ற தகவல்கள் வெளியாகின. எனினும், வாக்கெடுப்புத் தினத்தில் சியோனிச வாக்காளர்கள் எடுக்கும் முடிவே யாருக்கு வெற்றி என்பதைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
ஒருசில நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் சியோனிச வேலைத்திட்டங்களுக்காக   பராக் ஒபாமா முன்னிலை வகிக்கிறார் எனத் தெரிவித்தன.  வேறு சில ஆய்வு நிறுவனங்கள் மிட்ரோமினிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் எனக் குறிப்பிட்டன. 
இந்நிலையில், சாண்டி புயல் எதிர்காலத்தை நினைவு கூறும் விதத்தில்   அமெரிக்காவின் நியூயோர்க், நியூஜெர்ஸி மாகாணங்களைப் புரட்டிப்போட்டது. புயலால் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் 15 இலட்சம் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். உறைய வைக்கும் குளிரால் மக்கள் அவதிப்பட்டனர். இரு சியோனிஸ்ட்களின்  பிரசாரப் பணிகளும் தடைப்பட்டன. 
பராக் ஒபாமா தமது பிரசாரப் பணிகளைக் கைவிட்டு புயல், வெள்ள நிவாரணப் பணிகளில் அதீத அக்கறை செலுத்தினார். ஒபாமாவின் நிர்வாகம் முழுவீச்சில் நிவாரண மீட்புப் பணிகளைக் கையாண்டது. சாண்டி புயல் நிவாரணப் பணிகளை ஒபாமா கையாண்டவிதம் மக்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது எனப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
அமெரிக்க வாக்காளர்கள் எண்ணிக்கையில் மொத்தம் 16 கோடியே 90 இலட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இத்தேர்தலுக்காக அமெரிக்கா 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது. (இது சுமார் 32,762 கோடி ரூபாவாகும்.)
இத்தேர்தலில் ஜனாதிபதி, 33 செனட் சபை உறுப்பினர்கள், 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் ஆகியோரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி ஒபாமா, இலனாய், கனக்டிகட், மெய்ன், கொலம்பியா, டெலவரே, ரோட் ஐலன்ட், மேரிலான்ட் ஆகியவற்றை வென்றுள்ளார். ரோம்னி தற்போது ஆளுநராக உள்ள மாசசூசட்ஸையும் ஒபாமாவே வென்றுள்ளார்.
ஜோர்ஜியா, டென்னஸி, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் ரோம்னி வெற்றி பெற்றுள்ளார். தெற்கு கரோலினாவில் ரோம்னி வென்றுள்ளார். இங்கு ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஒருமுறை கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வேர்ஜீனியாவிலும் ரோம்னியே வென்றுள்ளார்.
மறுபக்கம் வெர்மான்ட்டில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். கென்டகியை ரோம்னி வென்றுள்ளார். இன்டியானாவையும் அவர் பெற்றுள்ளார்.
கடைசி நேரத்தில் ரோம்னி பிரசாரம் செய்த பென்சில்வேனியாவை ஒபாமா வென்றுள்ளார்.
இரு சியோனிஸ்ட்களும்   மாறி மாறி மாகாணங்களைக் கைப்பற்றி வந்துள்ளனர். 
ஆனால் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் எனப்பட்ட ப்ளோடா, ஒஹோவை சியோனிஸ்ட் ஒபாமா வென்றுள்ளதால், வெற்றியை நோக்கிச் சென்றிருக்கிறார்.

No comments:

Post a Comment