Saturday, November 3, 2012

அது கத்தியல்ல ஜனநாயகம் !



(உண்மைக்குள் ஒரு கற்பனை இனி உங்களுக்கு பெண்டகன் கட்டுக்கதைகள் இவ்வாறும் வரலாம் )
அவர் நிதானமாகவே முடிவெடுத்தார் ."மீண்டும் அதே கனவு இது என் ரப்புவின் கட்டளைதான் " என தனக்குள் முனு முனுத்தவாறு தெளிவடைந்தார் . கட்டளையை நிறைவேற்றவும் துணிந்தார் .எந்த ஒரு தந்தைக்கும் கஷ்டமான கட்டளைதான் இறைவனுக்காக பலி கொடுக்க வேண்டியது மகனையல்லவா !! அதை விட சிலருக்கு தமது கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கச் சொன்னாலும் சுகமானதுதான் .

                                                   விடயத்தை மனைவியிடம் சொன்னார் மறுப்பில்லை .பிள்ளையிடமும் சொன்னார் அதனிடம் சிறுதுளி கவலையும் இல்லை . பலிபீடமும் தயார் ! பலியிட உயிரும் தயார் ! (இந்தக்காலத்தை  சற்று நான் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கிறேன் " அடேய் சண்டாளா " என்று தொடங்கி 'காலிக் கோட்டும்' நார "நீயும் ஒரு அப்பனா " என்ற இறுதி வார்த்தையோடு 'பஸ்ஹ் ' அப்ளிகேசனும் சூடாக பறந்திருக்கும்! பிள்ளையிடம் சொன்னால் "வட்ஸ் வ்ரோங் டாட் " நட்டு கிட்டு ஏதாவது கலன்டிட்டா" என காரமாகவே கேட்டிருப்பான் ) இறை கட்டளைக்கு முன் இனி ஒரு தேர்வு தெரிவிற்கான சந்தர்ப்பமே இல்லை . அதுதான் இப்ராஹீம் (அலை )  அவர்களின் முன்மாதிரி.       


                                                  அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது 'ஷரீஆவே' இந்த உம்மத்தின் அறுதியிட்ட  இறுதியான 'ஷரீஆ  ' .அப்படியிருக்க இன்னொரு நபிக்கு அல் குர் ஆனில்  (உஸ்வதுல் ஹசனா ) அழகிய முன்மாதிரி என சுட்டிக்காட்டும் ஒரு நபி இந்த இப்ராஹீம் (அலை ) அவர்களே ! ."உங்களின் தந்தை " என்று கூட அல்லாஹ் (சுப) சிறப்பிக்கிறான் . மேலும் "அவர்தான் உங்களுக்கு முஸ்லீம் எனவும் பெயர் சூட்டினார் " என்ற இறைவனின் வார்த்தைகள் மூலம் இந்த உம்மத்தின் தந்தைக்கான நியாயத்தையும் தனதாக்கிக் கொண்டவர் .


                                                 யஹுதிகளும் ,நசரானிகளும் இவர்  தம்மைச்சார்ந்தவர் என உரிமை கொண்டாட  "யார் 'வஹி 'வழியோ அவரே இப்ராஹிமின் (அலை ) வழி" . என அல்லாஹ்வின் (சுப )' கட்டன் ரைட்டான ' பேச்சுக்கு முன் அந்த சாபத்தின் சந்ததியும் , வழிதவரியோரும் வெகுண்டு எழுந்தனர் . பொறி வைத்து இந்த முஸ்லீம் உம்மாவையும் இறைவனின் தனி வழியில் இருந்து தடம் பிறட்டி தம் வழியில் தண்டவாளம் அமைத்து தமது 'குப்ரிய கூட்ஸ் ' வண்டியை 'ஹலால்' ஆக்க பற்பல முயற்சிகளை தொடர்கின்றனர் .அதில் ஓன்று தான் அவர்களின் ஜனநாயக இஸ்லாமியத்தில் பெரும்பான்மை விருப்பிற்கு முன் வஹியை ஏலம் விடுவது .

                                                     தாம் வழி பிரளவும் பிறரை வழி பிரட்டவும் தாராளாமாக பல உருட்டல்கள் ,பிரட்டல்கள் .அதில் ஒரு வகை தான் வரலாற்று சம்பவங்கள் மீதான திணிப்புக்கள் அதன் பெயர் தான் இஸ்ராயிலீயத் ! நேற்று அவை யூத ரப்பிகளிடம் இருந்து வந்தது .இன்று அதன் நவீன வடிவம் பென்டகனில் இருந்தும் , வைட் ஹவுஸ் இல் 
இருந்தும் வருகின்றது . அப்படி ஒரு கட்டுக்கதை இந்த இப்ராஹிமின் ( அலை ) வரலாற்றில் அவர்கள் திணித்தால் இன்று அது ஜனநாயகத்தை நியாயப்படுத்துவதற்காகவே . அந்த வகையில் இப்ராஹிமின் (அலை ) தூய வரலாற்றில் எவ்வாறு ஜனநாயக  பெரும்பான்மை காட்டுவார்கள் ! என்பதற்காக ஒரு கற்பனை .



                                                       அவர் தனது ரப்புவின் கட்டளையை நிறைவேற்ற கத்தியை தீட்டினார் . அதன் கூர்மையை தனது விரல்களால் தடவிப் பார்த்தார் .பூரண திருப்தி. மகனின் கழுத்தில் கத்தியை வைத்தது அந்த தியாகச் செம்மல் .அறுப்பு தொடங்கியது . ஆனால் அறுபடவில்லை தாங்க முடியாத கோபத்தோடு அந்த கத்தியிடம் கேட்டார் " என் ரப்புவின் கட்டளையை நிறைவேற்ற ஏன் உதவ மாட்டேன் என்கிறாய் " இப்போது கத்தி பேசியது ."உமது முடிவிற்கு கட்டுப்பட முடியாது (அல்லாஹ் (சுப ),மலாயிகா மார்கள் உட்பட ) பெரும்பான்மை இதை ஆதரிக்க வில்லை " இப்போது அவர்  "அப்படியானால் எட்டப்போ " என கத்தியை கருங்கல் பாறையை நோக்கி வீசினார் பாறை இரண்டாகப் பிளந்தது .



                                                 அப்போது வானவர் தலைவர்  ஒரு ஆட்டோடு அங்கே வருகை தந்து கூறுகிறார் . " உமது தியாகத்தை , கட்டுப்பாட்டை இறைவன் மெச்சினான் உமது மகனுக்கு பகரமாக இந்த ஆட்டை குர்பான் கொடுக்க கட்டளை இட்டுள்ளான் " என்று கூறினார் .அவர் ஆட்டை குர்பான் கொடுக்க தயார் ஆனார் . இப்போது மீண்டும் கத்தி பேசியது " இப்போது பெரும்பான்மை ஆதரவுள்ளது " ஆட்டுக்கோ சற்று அதிர்ச்சி ! "இது அல்லாஹ்வின் (சுப ) கட்டளையா ? அல்லது பெரும்பானமையா " என்று சற்று துணிவோடு முணு முணுத்தது ஆடு வாயை மூடுவதற்கு முன் கத்தி " மூடு வாயை அற்பப் பிராணியே " என அந்த பலிக்கடாவின் கழுத்தை 'சதக் ' என 'கத்தில் ' பண்ணி விட்டு சூடான இரத்தம் தோய்ந்த உடலை ஒரு முறை சிலிப்பி விட்டு "வாழ்க ஜனநாயகம் ,வாழ்க ஜனநாயகம்" என கோசம் போட்டது . இப்ராஹிமுக்கோ (அலை ) இறைவனை திருப்திப்படுத்திய திருப்தி . ஆனால் கத்திக்கோ ....!!!!!
                                                  



No comments:

Post a Comment