Tuesday, November 6, 2012

மதச்சார்பின்மை ! மேட்டுக்குடி அரசியலின் தந்திரமான கருவியே ..


      கண்ணுக்கு புலப்படுவதை வைத்துத்தான் சராசரி மனித உள்ளம் தனது நடத்தைகளை தீர்மானிக்கும் . இந்த சூழல் எமக்கு பிடித்திருக்கும் ஒன்றாக இருக்குமானால் அதற்கு ஏற்றால் போல் எமது சிந்தனைகளையும் நடத்தைகளையும் நாம் மாற்ற சிந்திப்போம் . பல்லின ,மத சமூகங்களுக்கு இடையில் வாழுவது தொடர்பான விருப்பம் இன்று மதச்சர்ப்பின்மை தொடர்பில் அதை  சுதந்திரப் பாதையாக  சிந்திக்க தூண்டுகின்றது . 
                                    ஆனால் மதச்சார்பின்மை என்பதன் உண்மையான அர்த்தம் மதம் சமூக நடத்தையில் ,அரசியலில் ,பொருளியலில் தலையிட முடியாது என்பதே தவிர மதங்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான சகஜமான உறவுப்பாலம் அல்ல . மாறாக மேட்டுக்குடி அரசியல் வியாபாரத்தின் தந்திரமான கருவி மட்டுமே . 
                                     இங்கு ஒரு விடயத்தை நீங்கள் அவதானமாக பாருங்கள் மதச்சார்பின்மையை பேசுவார்கள் அதே நேரம் ஒரு பெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட கூட்டத்தின் அரசியல் ஆதிக்கத்திலும் செல்வாக்கிலும் ஒரு குறிப்பிட்ட மத ஆதிக்கம் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் .அடிக்கடி தனக்கு கீழிருக்கக் கூடிய இனங்கள் மீதும் ,மாதங்கள் மீதும் இழிவு படுத்தலையும் வன்முறையையும் சாதாரணமாகவே பயன்படுத்தும் ! எனவே இந்த மதச்சர்ப்பின்மை என்பது ஒரு போலியான வடிவம் பச்சோந்தியைப்போல சூழ்நிலைகளால் மாறக்கூடியது . மாற்றக்கூடியது .
                                         அதன் ஆரம்ப காரணம்  கிறிஸ்தவ பாதிரி அரசியல் மேலாதிக்க சக்திகளுக்கெதிரான பகுத்தறிவு வாதத்தின் போர் கொடிக்கு இடையில் சமரச பேரமாக ஆளும் மன்னர் பிரிவினரால் தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையே. அதே சுயநலத்தை முதலாளித்துவம் வரிந்து கட்டிக்கொண்டதும் அதே சுயநலமே ! முதலில் இதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .



1 comment:

  1. மாதங்கள் மீதும் இழிவு படுத்தலையும் வன்முறையையும் சாதாரணமாகவே பயன்படுத்தும் ! எனவே இந்த மதச்சர்ப்பின்மை என்பது ஒரு போலியான வடிவம் பச்சோந்தியைப்போல சூழ்நிலைகளால் மாறக்கூடியது . மாற்றக்கூடியது ., but this also secularism ,becoz is born by compromise ,so secularism is not weeked or strengthen . the variation is its main one of characteristic ex; country to country law is different for each issue .Bangladesh, western country prostitution allow but in Sri Lanka not allow

    ReplyDelete