
மலாலா யூசுப் விவகாரத்தில் தவறின் இடத்தையும் தவறுகின்ற இடத்தையும் சரியாக இனம் காண்பதுதான் . ஒரு சிறந்த தூய்மையான கருத்தியலின் அத்திவாரம் .மேற்கின் மீடியாக்களின் தீர்ப்புக்களை வைத்து சில அவசர முடிவுகளுக்கு வருவது ஆபத்தானது . நான் தாலிபான்களை நியாயம் காணவில்லை .அவர்கள் தொடர்பில் மிகக் கடுமையான விமர்சனங்கள் என்னிடம் உண்டு . அவர்களது உருவாக்கத்திலேயே என்னிடம் பல சர்ச்சைகள் உண்டு .
அதே நேரம் இந்த மலாலா விவகாரம் அரசியலாக்கப்பட்டு தோட்டாக்களை பரிசளித்த பெருமை மேற்கின் மீடியாக்களுக்கும் யூ .என் இற்கும் உண்டு . அந்த வகையில் இந்த விடயம் 'பிள்ளையை கில்லி தொட்டிலை ஆட்டும் தனம் ' என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் .
அடிக்கடி முதலாளித்துவத்தால் தெளிவாகவே ஏமாற்றப்படுகிறோம் .எவ்வாறு என்றால் அவர்களின் தொடர் பிரச்சார மாயையில் எதோ ஒரு கோணத்தால் அவர்கள் சிந்திக்க நினைக்கும் தரத்துக்கு இழுத்து வரப்படுகின்றோம் . அந்த சிந்தனை தரம் இன்னும் சில சிந்தனை வாயில்களை மூடிவிடுகின்ற்து . இங்கு தான் முதலாளித்துவ கருத்தியல் அடிமை வாதம் பொதுப்பண்பியலாக கலாச்சார மயப்படுகின்றது .
மேற்கின் மீடியாக்களுக்கு ஒரு உண்மை தெளிவாகவே தெரியும் அது' ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொன்னால் அது பொய்யாக இருந்தாலும் உண்மையாகிவிடும் ' எனும் 'அடல்ப் ஹிட்லரின்' வலது கை ஆலோசகரான 'கோயபல்சுவின் ' தத்துவம் . அந்த வகையில் ஒரு வகையான 'மீடியா நாசிசம் ' எம்மை தெளிவாக ஆக்கிரமித்துள்ளது .
No comments:
Post a Comment