Sunday, November 18, 2012

யஹூதியத் தாண்டவங்களும் கழுத்தறுக்கும் உதவிகளும் ...




          ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.52 PM   அகதி முகாம் மீது தாக்குதல்; 18 மாதக் குழந்தை உட்பட மூவர்  பலி 

யஹூதிய   யுத்த விமானங்கள் மத்திய காஸாவின்  புரைஜ் அகதி முகாம் மீது நடத்திய விமானத்தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 18 மாதக் குழந்தை ஒன்றும் அதன் இரு இளம் சகோதரர்களும் அடங்குவதாக காஸா பிராந்தியத்தின் அவசர நிலைமைகளுக்கான பேச்சாளர் தெரிவித்தார். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களை வைத்தியசாலையில்   அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.45 PM யுத்த நிறுத்தத்துக்கு பிரான்ஸ் அழைப்பு 

உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லூரான்ட் போபியஸ் அழைப்புவிடுத்துள்ளார்.குறுகிய  விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பலஸ்தீன் மற்றும் யூத ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு  விஜயம் செய்து அங்கு பலச்தீனர்களையும் ,யூதக் கொலைகாரர்களையும்  சந்தித்த பின்னரே அவர் மேற்படி அழைப்பினை விடுத்துள்ளார். யுத்த  நிறுத்தம் ஒன்றினை அமுல்படுத்த அனைத்துவிதமான உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும் என இதன் போது அவர் உறுதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.34 PM வன்முறைகள் குறித்து எகிப்துப் பிரதமர் ஹமாஸ் பிரதமருடன் பேச்சு

இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து தொலைபேசி வாயிலாக கிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்சி ஹமாஸ் பிரதமர் இஸ்மாயீல் ஹனீயாவுடன் விவாதித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த பேச்சுவார்த்தைகளின் போது  ஊடக நிலையங்களை இஸ்ரேல் இலக்குவைப்பது தொடர்பில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது.
 
அத்துடன் ஹமாசின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான  அல் அக்ஸா  தொலைக்காட்சியும் இன்றுகாலை 07 மணியளவில் இடம்பெற்ற சுராக் கட்டிடத்தொகுதி மீதான தாக்குதலில் சேதமடைந்தது இது தொடர்பிலும் முர்சியிடம் பிரதமர் ஹனீயா விளக்கியுள்ளார்.
 

ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.30 PM  யஹூதிய தாக்குதலில் ரொய்டர் செய்தி முகவர் நிலையமும் பாதிப்பு
 
காஸாவின் அல் சராயா குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இரு விமானத்தாக்குதல்களில் ரொய்டர் செய்தி முகவர் நிலையமும் சேதமடைதிருப்பதாக தெரிவிக்கப் படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் பல தமது செய்தி  முகவர் நிலையங்களை இக்கட்டிடத்  தொகுதியிலேயே அமைத்துள்ளன. இந்  நிலையில் இன்று இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் மூலம் சர்வதேசத்துக்கு காஸாவின் நிலைவரம் எடுத்துச் செல்லப் படுவதை தடுப்பது நோக்காக இருக்கலாம் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.22 PM இந்தோனேசிய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 
 
காஸாவில் இடம் பெற்றுவரும் யஹூதிய  தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரி இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தா வில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.இந்தோனேசிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குறித்த ஆர்ப் பாட்டங்களில் பெரும் திறளானோர் கலந்துகொண்டதாக தெரிகிறது.குறித்த ஆர்ப்பாட்டங்கள்   அமெரிக்க தூதுவராலயத்துக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளன.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.16 PM  ஊடகங்களுக்கெதிராக யஹூதிய தாக்குதல்;குத்ஸ் தொலைக்காட்சி கண்டனம்
 
ஊடகங்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்துள்ள புதிய போர் குற்றங்களை வன்மையாக கண்டிப்பதாக தாக்குதலுக்குள்ளான ஊடக நிலையங்களில் ஒன்றான அல்  குத்ஸ் தொலைக்காட்சியின் பணிப்பாளர் இமாத் எம்ராஞ்ஜி தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களையும் அவர் கண்டித்துள்ளார்.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.09 PM போர் கப்பல்களின் முற்றுகையின் கீழ் காஸா 
 
காஸாவை யஹூதிய அதி நவீன போர்க் கப்பல்கள் 03 முற்றுகையிட்டுள்ளதாகவும் அதன் மூலம் காஸா நிலா பரப்பை நோக்கிய தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக  செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.06 PM காஸாவிலிருந்து தாக்குதல்கள் குறைந்துள்ளன;என யஹூதி கூறுகிறான் 
 
நேற்று நள்ளிரவு முதல் காஸாவிலிருந்து எமக்கு  எவ்விதமான ரொக்கட்டுக்களும் ஏவப் படவில்லை எனவும் காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கிய தாக்குதல்கள் கணிசமாக குறைவடைந்திருப்பதாக்கவும் யஹூதிகள்  அறிவித்துள்ளனர் .
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 12.06 PM  ஊடகநிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்கின்றன;அல் அரேபிய,அபுதாபி தொலைக்காட்சி நிலையங்கள் சேதம் 
 
இன்று ஐந்தாவது நாளாக தொடரும் காஸா  மீதான யஹூதியின்  நடவடிக்கைகளில் ஊடக நிலையங்கள் பல தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.அல் அரேபிய,அபுதாபி தொலைக்காட்சி நிலையங்கள் இயங்கிவந்த குடியிருப்புத் தொகுதி  ஒன்றின் மீதே குறித்த விமானத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.58 AM  விமான,கடற் படையினர் காஸா மீது உக்கிர தாக்குதல்
 
இன்று ஐந்தாவது நாளில் யஹூதிய  விமான,கடற்படயினர் பாரிய இராணுவ முன்னகர்வுகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.F 16 ரக போர் விமானங்கள் வானில் தொடர்ந்துய்ம் வட்டமிடுவதாகவும் கடல் மார்க்கமாக கடற்படையின் யுத்தக் கப்பல்களிலிருந்தும் காசா நிலப்பரப்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.52 AM  காஸா  மீது இன்று காலையும் தாக்குதல் 
 
காஸா  மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்று காலையும்  மேற்கொள்ளப் பட்டுள்ளது.காஸா -இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீன் பாதுகாப்பு மையமொண்டரை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.45 AM 24 மணித்தியாலத்தில் 200 வான்வழித் தாக்குதல்கள் 
 
கடந்த 24 மணித்தியாலத்துக்குள் காஸா பள்ளத்தாக்கின் மீது யஹூதிய  விமானப் படையினர் சுமார் 200 வான்வழித்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கு மேலதிகமாக  வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் யஹூதிய  கடற் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.அத்துடன் ஹமாஸ் போராளிகளின் யஹூதிகள்  மீதான ரொக்கட் தாக்குதல்களும் தொடர்கின்றன.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.33 AM     ஊடக கோபுரம் மீது தாக்குதல் ;06 பத்திரிகையாளர்கள்  காயம் 
 
காஸா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஊடக கோபுரம் மீது யஹூதிய  படையினர் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் ஒருகுழந்தை பலியாகியுள்ளது.அத்துடன் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முஹம்மது உமர் என்ற சுதந்திர பத்திரிகையாளரே சம்பவத்தில் காயமடைந்தவராவார்.
 
இவரைவிட அங்கு பணியிலிருந்த மேலும் 05 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் சிபா மருத்த்ஹுவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
2008-2009 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலும் யஹூதிகள்  காஸா  மீதானா நடவடிக்கையின் போதும்  ஊடகவியலாளர்களை இலக்கு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.24 AM  இரவிரவாகத் தொடரும் காஸா  மீதான தாக்குதல்கள் 
 
காஸா  மீது யஹூதிகள்  மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் நேற்றைய தினம் இரவு முழுவதும் நீடித்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் இரவு முழுவதும் யுத்த விமானங்களின் சத்தங்களையும் குண்டுத்தாக்குதல்களின் அதிர்வுகளையும் உணர முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
 
இந் நிலையில் இன்றைய ஐந்தாவது நாளாகவும் மோதல்கள் தொடர்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.17 AM         கடற் படையும் தாக்குதல் 
 
காஸா பள்ளத்தாக்கின் மீது தமது கடற் படையினரும் தாக்குதல்களை நடத்தியதாக யஹூதிகளால்  உறுதி செய்யப்பட்டுள்ளது .
 
 
ஞாயிற்றுக்கிழமை (18.11.2012) 11.00 AM     45 பாலஸ்தீனியர்கள் பலி;390 பேருக்கு காயம்
 
இன்று ஐந்தாவது  நாளாகத் தொடரும் காஸா  மீதான யஹூதிய  இராணுவ நடவடிக்கைகளில் 45 பலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளதோடு 390 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பொதுமக்கள் என தெரிவிக்கப் படுகிறது. 
 
நேற்றைய தினம் மட்டும் பலஸ்தீனில் 15 பேர்  யஹூதிய  விமானத்தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே யஹூதிகளின்  காஸா  மீதான நடவடிக்கைளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு புதிய அணுகுமுறை ஒன்றினை கையாள நேற்றைய முதுகெலும்பற்ற   அரபு லீக்கின் அவசர கூட்டத்தில் முடிவுசெய்யப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment