Wednesday, October 31, 2012

u.s வஹியும் !!?? அதற்கு குடை பிடிக்கும் முல்லா நம்பர் வன்னும் !!!





சில  பெருந்தகைகள் நேற்றுவரை முழுப் பூசணிக்காயை சோற்றிலே 

மறைத்தார்கள் !! இன்று அந்த பூசணிக் 

காய்தான் இனி உங்கள் சோறு !! என  முஸ்லீம் உம்மாவை எச்சரித்து   

களமிறங்கியது மட்டுமல்லாமல் 

தட்டிக்கேட்க நினைப்பவர்களை ஜாஹிலீயத்தில் (அறிவிலிகள் ) 

இருப்பவர்கள் என கூறி தமது வழமையான 

முல்லா தனத்தின் முன் முக்காடிட்டு அடங்கி பேசும் படியும் 

கர்ஜிக்கிரார்கள் . இது அறிந்து அடிவருடும் 

இவர்கள் ஆதரவாளர்களுக்கோ பெரும் கொண்டாட்டம் தான் .ஆனால் 

திண்டாட்டம் என்னவோ வழமை 

போலவே பாமரத்துவமான முஸ்லீம் உம்மாவிட்கே . கீழே வரும் 

கன்றாவியையும் சற்று பாருங்களேன் .

இனி உங்களுக்கு' அல் குர் ஆன்' பழைய ஏற்பாடு !! யூ .எஸ் போலிசி 

தருகிறது இந்த புதிய ஏற்பாடு !! 

பழையதை நீங்கள் விசுவாசிக்க தடையில்லை . ஆனால் புதியதை தான் 

பின்பற்ற வேண்டும் என இந்த 

'முல்லா நம்பர் வன்' தனது பத்துவாக் குண்டுகளை ஏவத் 

தொடங்கியுள்ளது .




 கிலாபா, ஜனநாயகம் என்பன குறித்து அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி (01)

ஜனநாயகம் பற்றி ஆழமான அறிவு ஒரு புறமிருக்க, அதனது அமைப்பு, 

வடிவம் என்பன பற்றி துளி கூட 

அறிவில்லாத சிலர் ஜனநாயகம் தெளிவான பாவம் என்று தீர்ப்புச் 

சொல்வது எனக்கு வியப்பை 

ஏற்படுத்துகின்றது. குறித்த ஒரு விடயம் பற்றிய அறிவின்றி தீர்ப்பு 

வழங்கி எதேச்சையாக அது சரியாக 

அமைந்தாலும் அது தவறானதாகும். ஏனெனில் அது இலக்கின்றி 

எறியப்பட்ட அம்பாகும். அறிவின்றி தீர்ப்பு 

வழங்கும் நீதிபதி நரகிலிருப்பார்.



உலக மக்கள் குரல் கொடுக்கின்ற, கிழக்கிலும் மேற்கிலும் 

பெருந்தொகையான குடிமக்களால் போராட்டம் 

மூலம்பாதுகாக்கப் படுகின்ற, அடக்குமுறையாளர்களுடனான கடும் 

சமரின் பின் சில சமூகங்களால் 

அடையப்பெற்ற, கிழக்கு ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் இரத்தம் 

சிந்தப்பட்டு 

பல்லாயிரக்கணக்கானோர், இல்லை பல மில்லியன் மக்கள் 

பலிகொடுக்கப்பட்டு பெறப்பட்ட, தனியாள் 

ஏதேச்சாதிகாரத்தை அடக்குவதற்கும், அரேபிய மற்றும் முஸ்லிம் 

மக்கள் அனுபவித்து வரும் அரசியல் 

அடக்குமுறையின் நகங்களைக் களைவதற்கான வழியாக அதிகமான 

இஸ்லாமிய வாதிகளால் ஏற்றுக் 

கொள்ளப்பட்டுள்ள இந்த ஜனநாயகம் அவசரப்புத்தி படைத்த 

அறிவிலிகள் கூறுவது போல் பாவமானதா? 

இல்லை குப்ரானதா?

நூல்: இஸ்லாமிய அரசியல், பக்கம் 198





 # கிலாபா, ஜனநாயகம் என்பன குறித்து அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி (02)

...ஜனநாயகம் என்பது அதன் வரைவிலக்கணங்கள், அறிவியல் 

கலைச்சொற்கள் என்பவற்றை விடுத்து 

நோக்கின், மக்கள் தம்மை ஆளுவோரையும் நிருவகிப்போரையும் 

தாம் தெரிவுசெய்துகொள்வதைக் குறிக்கும். .....


....ஜனநாயகத்தை ஆழ்ந்து கவனிக்கும் ஒருவர் அது இஸ்லாத்தின் 

அடிப்படைகளோடு இயைந்து 

செல்வதைக் கண்டுகொள்வார். மக்கள்விரும்பாத நிலையில் 

அவர்களுக்கு தொழுகையில் இமாமமத் செய்வதை 

(தலைமைதாங்குவதை) இஸ்லாம் விரும்பவில்லை. 

மூன்று சாராரின் தொழுகை அவர்களின் தலைக்கு மேல் ஒரு சான் கூட 

உயர்த்தப்படமாட்டாது. அதாவது 

சிறிதள|வு கூட அங்கீகரிக்கப்பட்ட மாட்டாது. அவர்களுள் முதலாமவர் 

மக்கள் விரும்பாத நிலையில் 

அவர்களுக்கு இமாமத் செய்யும்மனிதராகும்.தொழுகையிலேயே 

மக்களின் விருப்புக்கு இவ்வாறான 

முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்குமாயின் உலக மற்றும் அரசியல் 

விவகாரங்களில் மக்கள் விருப்புக்கு 

எத்தகு இடம் வழங்கப்பட்டிருக்கும் என்பதை எங்களால் விளங்கிக் 

கொள்ள முடியும்...


நூல்: இஸ்லாமிய அரசியல்


பக்கம்: 198-199



# நீங்கள் விரும்புவது போல உங்களையும் விரும்புகின்ற, நீங்கள் 

பிரார்த்னை புரிந்து துஆ (பாவமன்னிப்பு) 

இறைஞ்சுவது போன்ற உங்களுக்காகவும் பிறார்த்திக்கின்றவரே சிறந்த 

ஆட்சியாளராவார். 

உங்களால்வெறுக்கப்பட்டு, சபிக்கப்பட்டு உங்களையும் சபிக்கின்றவரே 

மிக மோசமான ஆட்சியாளராவார் 

என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஹதீஸாகும். 

நூல்: இஸ்லாமிய அரசியல் பக்கம்: 200


             இந்த இலுப்பம் பூக்களை சர்க்கரையாக நினைப்பவர்கள் சற்று 

அவதானம் ! வாக்களிக்கப்பட்ட கிலாபா அரசு தான் முஸ்லீம் 

உம்மாவின் ஏக போக அரசியல் வடிவம் .அதை ஜனநாயகத்தோடு 

ஒப்பிட்டு சரி காண்பது . அல்லாஹ்வின் (சுப) மீதாணையாக 

விபச்சாரிக்கும் மணைவிக்கும் இடையில் வித்தியாசம் காணத் 

தெரியாதவர்கள் .










1 comment:

  1. masallah
    you correct
    i thing that mullah may be a american agent
    becoz they thing like

    ReplyDelete