Thursday, October 24, 2013

இதோ இன்னொரு முஹர்ரம் ....



       அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .


                                          ஆலோசனை கட்டத்தில் பற்பல ஆலோசனைகள் சிலர்  நபி (ஸல் ) அவர்களின் பிறப்பில் இருந்து வருடக்கணிப்பை தொடங்கலாம் என்றனர் ,இன்னும் சிலர் நுபுவத்திளிருந்து தொடங்கலாம் என்றனர் ,ஒரு சாரார் ஹிஜ்ரத்தில் இருந்து தொடங்கலாமே என்றனர் . இந்த  ஆலோசனையே ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . சிந்திக்க வேண்டிய இடம் இதுதான் .
                                             இந்த ஹிஜ்ரத்தின் நிகழ்வுதான் உண்மையில் இஸ்லாத்தின் கட்டமைப்பு வடிவத்தை , அதன் பிரத்தியோகமான நாகரீகத்தை காட்டக்கூடிய   ,அதன் பூரண பிரயோகத்தின் திட்டமிட்ட வாயிலாக அமைந்தது .  'சுரகாவிட்கு' பாரசீக மன்னரின் தங்கக் காப்புகள் பெற்றுத்தரப்படும் என்ற  வாக்குறுதி வழங்கப்பட்டதும் இந்த ஹிஜ்ராவில் தான் .அதாவது இனி தாகூத்திய சாம்ராஜ்யங்கள் இறைவனின் படைக்கு முன் நிம்மதியாக நிமிர்ந்து நிற்க முடியாது . என்ற எதிர்வு கூறப்பட்ட சுப செய்தி சொல்லப்பட்டதும். இந்த ஹிஜ்ராவில் தான் . அதாவது சத்தியத்துக்கும் அசத்தியதுக்கும் இடையில் அதிகாரப் பிரிகோடு தெளிவாக வரையப்பட்டது .


                                                                                  அதனையடுத்து எந்த மாதத்தில் இருந்து வருடக் கணிப்பை மேட்கொள்ளலாம்  என்ற ஆலோசனை மேட்கொள்ளப்பட்டது .அதன் போது சில சஹாபாக்கள் நபி (ஸல் ) ஹிஜ்ரத் சென்ற ரமலான் மாதத்தை முன் மொழிந்தனர் .ஆனால் தீர்மானிக்கப்பட்டதோ 'முஹர்ரம் ' காரணம் இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட 'துல்ஹஜ் ' மாதத்தை இறுதியாக்கி அதற்கு அடுத்ததாக வரும் 'முஹர்ரம் ' தலை மாதமாக அங்கீகரிக்கப்பட்டது . அத்தோடு இந்த மாதம் அல் குர் ஆன் குறிப்பிடும் புனித மாதங்களில் ஒன்றுமாகும் . இதுதான் இஸ்லாமிய 'கலண்டர் 'உத்தியோக பூர்வமாக பிறந்த வரலாறாகும். 

            இன்று இன்னோர் முஹர்ரத்தை நாம் எதிர்கொள்ளப்போகிறோம் . ஆனால் அரசியல் அனாதைகளாக!! பசித்த எதிரியின் புசிக்கும் பண்டங்களாக !! எமது நிலங்களில் 'டெண்ட் 'அடித்த எதரிகளின் செருப்புகளாக வீற்றிருக்கும் மனிதர்கள் முன்னாக  , 'வெஸ்டனை' சிஷ்டமாக்கி இனி இதுதான் இஸ்லாம் என கூச்சலிடும் மேற்கின்  அடிவருடித்தன மேதாவிகள் முன்பாக .  யா அல்லாஹ் உனது கருணையை எங்கள் மீது பொழிவாயாக இந்த சாபக்கேடுகளில் இருந்து எங்களுக்கு மீட்சியை தருவாயாக . மீண்டும் தூய இஸ்லாத்தின் அதிகார நிழலில் கண்ணியம் பொருந்திய முஸ்லீம்களாக வாழ அருள் பாலிப்பாயாக .
 

1 comment:

  1. முஹர்ரம் இஸ்லாமிய புதுவருடத்தின் ஆரம்பம்.
    முழு உலக முஸ்லீம்களினதும் புது வருடம்.
    ஆனால் இந்த புதுவருடத்தை துண்டுகளாக சிதறிக் கிடக்கும் முஸ்லீம் உம்மத்தால் எப்படி வரவேற்க முடியும். எப்படி அதன் சந்தோசத்தை அனுபவிக்க முடியும்?

    ஜனவரி கொண்டாட்டம் எப்படி கலைகெட்டுகின்றது.
    முழு உலகுமே சோடிக்கப் படுகின்றது. அதை வரவேற்பதற்கான எத்தனை எத்தனை ஏற்பாடுகள். அத்தனையையும் அரசுகள் தானே மேடற்கொள்கிறது. தனிநபர்கள் இணைந்தோ, அல்லது சில குழுக்களோ ஏற்பாடுகளை செய்வதில்லையே. அனைத்து வியாபரத் தளங்களிலும் கூட ஏற்பாடுகள் பிரமாண்டமாயல்லவா இருக்கின்றது( முஸ்லீம்களும் விதிவிலக்கல்ல) என்ன காரணம்? இன்று உலகை இயக்குகின்ற சித்தார்ந்தத்தின், முதலாளித்துவ கொள்கையின் வருடப் பிறப்பு
    அதனால் தானே இத்தனை சிறப்பு.

    இதே போல இஸ்ல்லாம ஆட்சி முறைமையாக வரும் பொழுதுதான் முகர்ரமும் கலைகெட்டும். இல்லாத போது மஸ்ஜிதுகளில் பயானோடும், குரான் மத்ர்சாக்களில் சில போட்டி நிகழ்ச்சிகளோடும், வியாபரத் தளங்களில் பரகத் வேண்டிய துஆக்களோடும் இனிதே நிறைவு பெரும்.

    ReplyDelete