Monday, October 28, 2013

சர்வதேச உளவுச் செயற்பாட்டில் சவுதி அரேபியா - லிபியாவின் சீப் ஒப் இன்டலிஜென்ட் சவுதியின் நண்பரானார்!!


   பந்தர் பின் சுல்தான். சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவு டைரக்டர் ஜெனரல். அதாவது Al Mukhabarat Al A'amah-வின் அமீர். சவுதி ரோயல் அரசாட்சியின் அபிலாஷைகளிற்கு முழு வடிவம் கொடுப்பவர். அமெரிக்காவின் நண்பர். இன்நாட்களில் விளாடிமிர் புட்டினின் நண்பரும் கூட. அண்மையில் அவர் சவுதி அரசிற்கு நன்மைபயக்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்து முடித்துள்ளார். லிபியாவின் அதிபர் கேர்ணர் முஹம்மர் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவரான Moussa Koussa-வை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளார். அதாவது அவரை சவுதியின் நண்பனாக மாற்றியுள்ளார். 



    கடாபியின் காலத்தில் லிபிய ஸ்பை விங்கின் சீப் டைரக்டர் ஜெனரலான Moussa Koussa,  கேர்ணல் கடாபியின் வேண்டுகோளிற்கிணங்க சவுதி அரேபிய அரசிற்கு எதிரான பல அசைன்மென்ட்களை தயாரித்திருந்தார். சவுதி அரேபிய அரசு எதிர் கொண்ட முதல் தர எதிரிகளில் இவரும் ஒருவராக விளங்கினார். எந்நேரமும் சவுதி ரோயல் பமிலியில் உள்ளவர்களின் உயிரிற்கு இவரால் ஆபத்து நிகழ உள்ளது என முன்பு சவுதி அரேபிய உளவமைப்பு எச்சரிக்கை செய்திருந்தது. அவரை இப்போது பந்தர் பின் சுல்தான் சவுதியின் சேவகனாக மாற்றியுள்ளார். 

   உலகின் பல பாகங்களிலும் பல சதி நாச வேலைகளை லிபிய அரசிற்காக திட்டமிட்டு துல்லியமாக அதனை நிறைவேற்றுவதில் வல்லவர் இந்த Moussa Koussa. லொக்கர்பி குண்டு வெடிப்பின் சூத்திரதாரி. 

    பந்தர் பின் சுல்தானின் திட்டப்படி அவரை சவுதி அரசு உம்ரா வருமாறு அழைத்து கவுரவப்படுத்தியது. பின்னர் புனித ஹஜ்ஜிற்கு சிறப்பு யாத்திரிகராக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. இரண்டையும் ஏற்று கொண்டு மூஸா கொஃஸா சவுதியின் சிறப்பு விருந்தினராக ரோயல் பிரின்ஸ் பலஸில் அண்மைய நாட்களில் தங்கியிருந்தார். அப்போது சவுதி அரேபிய உளவுத்துறை தலைவர் இவருடன் பல மணி நேரங்கள் தொடரான பல சந்திப்புக்களை நிகழ்த்தியுமிருந்தார். 

     சவுதி அரேபிய மன்னர் கிங் அப்துல்லாவை 2003-ல் நடைபெற்ற அரபு உச்சி மாநாட்டில் வைத்து கொலை செய்யும் திட்டத்தை தீட்டியவரும் இந்த மூஸா கொஃஸாவேயாகும். கடாபி இதற்கான கட்டளையை இவரிற்கு பிறப்பித்திருந்தார். இதன் பிரகாரம் சவுதி அரேபிய அரசால் முக்கிய விதேச குற்றவாளியாக இவர் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். இப்போது சவுதி அரேபிய அரசு அந்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளது. 

     சவுதி அரேபிய அரசின் உளவமைப்பானது அதன் பிரதான பணியாக மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், செயற்பாடுகள் என்பவற்றை கண்டறிந்து கருவருப்பதையே கொண்டிருந்தது. சர்வதேச சதி திட்டங்களை தீட்டி நிறைவேற்றும் அளவிற்கு அதற்கு தகைமையோ அனுபவமோ இல்லை. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக மூஸா கொஃஸாவை பயன்படுத்த சவுதி அரசும் அதன் உளவுத்துறைத் தலைவரும் தீர்மானித்துள்ளார்கள். “அசைன்மென்ட் சிரியா” இப்போது இவர் வசம் வழங்கப்பட்டுள்ளது. சிரியாவில் யாரை போட்டுத்தள்ள வேண்டும் என பந்தர் சொல்ல அதை இவர் நிறைவேற்றுவார். 

     சவுதி அரேபிய அரசின் இராஜதந்திர தூதுவராக இவரை போலியாக நியமித்து சிரயா, பஹ்ரைன், ஈராக், ஈரான் போன்ற நாடுகளில் பல புரஜெக்ட்களை செய்ய சவுதி அரேபியா தீர்மானம் செய்துள்ளது. இந்த தீர்மானங்கள் அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவையாக தெரியவில்லை. ரஷ்ய ஆதரவுடனேயே இது நிகழ்துள்ளமைக்கான அறிகுறிகளே தென்படுகின்றன. எது எவ்வாறாயினும் சவுதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் பந்தர்  அல்-சுல்த்தான் வெற்றிகரமாக ஒரு வேலையை செய்து முடித்துள்ளார். 

(அரேபிய மன்னர் மந்தையோடு சேர்ந்துள்ளது அனுபவமுள்ள லிபிய கிழக் கடா ! குப்ரோடு கூட்டாகி  இஸ்லாத்தின் மார்பில் பாய் வதற்காக !!!)

No comments:

Post a Comment