Wednesday, October 9, 2013

ஜனநாயகம் பற்றி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய பக்கங்கள் . (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


      ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில மாயைப்  பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்குள்  எடுக்கும் தேவை ஏன்?


          ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பயன் படுத்தியது . பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்த்து கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றியது . ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு இவ்வாறுதான்  ஆரம்பிக்கின்றது .

     முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்  . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)

(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)

          போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.



     இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும் எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' ஆகும் . ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது . 



    அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் எது என்றால் , அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கும் .மதச் சார்பின்மை என்ற தனது அடிப்படையை பாதுகாக்க சர்வாதிகாரத்தையும் சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் . 


         இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி  மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?

No comments:

Post a Comment