Tuesday, October 8, 2013

'ரியல் சிரியா '! ஒரு கவிதையிலே ..........



அச்சத்தில் எழுந்த அயோக்கிய நாடகம்
அது சிரியா மீதான தாகூத்திய கூட்டின்
அவசர கரிசனை ! - ஆட வழிதேடி விழிபிதுங்கி நின்றபோது
அடித்தான் பசர் அல் அசாத் 'கெமிகல் வெபன் '
அதுதான் அதி பயங்கர நாடக மேடை !

கொலைகாரக் கூத்துக்கு
நியாய வடிவம் கொடுக்க NATO முதல் U N வீட்டோவரை
விதம் விதமாய் 'லைட் 'அடிக்க !
ஒருபக்கம் ஒபாமாவின் ஓலமும்  
மறுபக்கம் 'புடினின் ' பிடிவாதமும் என 
காட்சிகள் எல்லாம் கலை கட்டின !



"மிசைல் விடுவோம்" என 
அமெரிக்க முதலை கண்ணீரோடு கூற 
"சவூதிக்கு அடிப்பேன் " என 
ரஷ்ய சைத்தான் 'புல்ஸ் டாப்' போட !
இராஜ தந்திரத் தொட்டிலில் 
விரல் சூப்பி ரசித்துக் கொண்டிருந்தான் 
'அசாத்' எனும் காட்டேறிக் குழந்தை !

தொப்புள் கொடி உறவோடு ஈரான் சீராட்ட  !
சுரண்டல் பங்கிற்காக சீனாவும் பாலூட்ட ! 
'டிப்லோமடிக்' பிரேம் வேர்க்கில் '
கேலிக்கூத்து அமர்க்களமானது !

ஓட்டிய ரீலில் மாற்றங்கள் வந்தன !
பிரிவுத் தாளத்தில் பருப்பு வேகாததால் 
உண்மை உருவத்தை உலகம் பார்க்க 
'ஹிஸ்புஸ் சைத்தான்களும்' பூ மாலை  கொடுக்க
(அமெரிக்க ,ரஷ்ய )துருவங்களின் இணைவு இனிதே நடந்தது !
ஜெனீவா மண்டபத்தில் 'ரிசப்சனும்' தொடர்ந்தது 

சியோனிச கள்ளப்பிறப்பை கொஞ்சிய 
அதே கைகளால் அசாத்தையும் அரவணைத்து தூக்கி 
அதர்மப் பந்தியில் சிரியப் படுகொலைகளை 
ஏதோ 'சிக்கன் டேவல் ' போல் ஆக்கிப்போட்டார்கள் 
அயோக்கியக் கும்பல்கள் !

உம்மத்தின் வளங்களை ஊதாரித் தனமாக்கிய 
நாதாரிப் பயல்கள் பெப்சிக்கு பெற்றோலை 
பொறுப்பின்றி கொடுத்து விட்டு !
'வெஸ்டர்ன் டிபென்ஸில் ' வெட்டிப் பொழுது போக்கும் 
வெங்காய மன்னர்களும் 'கிலாபத்தின் ' அச்சத்தில் 
கிளி பிடித்துப் போக ! முஸ்லீம் அழிப்புக்கு முகவராகி 
பங்குப்பணம் போட்டு கோமாளி வேஷம் கட்டுகிறார்கள் !

'டிமோகிரசி' செட்டப்பில் வேலைகள் முடியுமென்ற 
'தாகூத்திய' நப்பாசைக்கு ஆப்படித்து எழுந்துவரும் 
இஸ்லாமிய அலைகண்டு ஆடிப்போய் உள்ளது இந்த 
அசத்தியக் கூட்டணி ! - சத்தியம் நோக்கிய 
சாத்தியமான நகர்வுகளில் 'ரியல்' சிரியா 
தொடர் சீரியலாகி ஆணவக் 'குப்பாரை '
குலை நடுங்க வைக்குதடா !
அல்லாஹு அக்பர் ...!   அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...!   




No comments:

Post a Comment